புதுச்சேரி

பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

பொது மக்கள் சாலை மறியல்

Published On 2022-08-24 14:29 IST   |   Update On 2022-08-24 14:29:00 IST
  • கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய பாபு சமுத்திரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
  • ஒரு நாள் கூலியாக அரசு 271 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளது ஆனால் வேலைக்கான சம்பளம் 120 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி:

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய பாபு சமுத்திரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் பணி வழங்கப்பட்டது இதில் பொது மக்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான ஒரு நாள் கூலியாக அரசு 271 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளது ஆனால் வேலைக்கான சம்பளம் 120 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தங்களுக்கு 100 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்றும் அரசு நிர்ணயித்த ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டமங்கலம் செல்லிப்பட்டு சாலையில் பெரிய பாபு சமுத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தின சபாபதி சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் .

மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News