புதுச்சேரி
புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி-சம்பத் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
- குடிநீரில் இரும்பு துகள்கள் கலந்து மாசு பட்டும் பழுப்பு நிறத்திலும் வருவதாக பொதுமக்கள் சம்பத் எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.
- புதிய குடிநீர் குழாய் அமைக்க ரூ. 17 லட்சம் செலவில் திட்டம் தயாரிக்கபட்டது.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை ஏ.எப்.டி. ஆலை வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பட்டம்மாள் நகர் , இந்திரா நகர், மாங்காளி அம்மன் நகர், தயானந்த வீதி ஆகிய பகுதிகளில் குடிநீர் வழங்கும் குழாய்கள் துருபிடித்ததால் வீடுகளுக்கு வரும் குடிநீரில் இரும்பு துகள்கள் கலந்து மாசு பட்டும் பழுப்பு நிறத்திலும் வருவதாக பொதுமக்கள் சம்பத் எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.
இதனை சரிசெய்ய பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட அதிகாரிகளிடம் தேவையான நடவ டிக்கையை எடுக்க சம்பத் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து புதிய குடிநீர் குழாய் அமைக்க ரூ. 17 லட்சம் செலவில் திட்டம் தயாரிக்கபட்டது.
அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.