- இந்திய மருத்துவர் சங்கத்தின் கடலூர் பிரிவு மற்றும் புதுவை ஜமீந்தார் கார்டன்ஸ் குடியிருப்போர் நலப்பணி கூட்டமைப்பு சார்பில் ஜமீந்தார் கார்டன்ஸ் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
- ஜமீந்தார் கார்டன்ஸ் குடியிருப்போர் நலப்பணி கூட்டமைப்பு சார்பில் மூத்த வக்கீல் சந்திர சேகர் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
இந்திய மருத்துவர் சங்கத்தின் கடலூர் பிரிவு மற்றும் புதுவை ஜமீந்தார் கார்டன்ஸ் குடியிருப்போர் நலப்பணி கூட்டமைப்பு சார்பில் ஜமீந்தார் கார்டன்ஸ் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாட்டுப் பிரிவின் மாநில தலைவர் டாக்டர் பழனிச்சாமி செயலாளர் டாக்டர் தியாகராஜன், முன்னாள் மாநில செயலாளர் டாக்டர் ரவிக்குமார், கடலூர் கிளை தலைவர் டாக்டர் பாண்டியன் மற்றும் டாக்டர்கள் முகுந்தன், ராஜேந்திரன், சந்திரன், கேசவன், கோவிந்தராஜி, கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் ஜமீந்தார் கார்டன்ஸ் குடியிருப்போர் நலப்பணி கூட்டமைப்பு சார்பில் மூத்த வக்கீல் சந்திர சேகர், ஸ்ரீ கணேஷ் எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி புதுவை சேர்மனுமான செல்வமணி பேராசிரியர்கள் சிவ சுப்பிரமணியன், பிரமானந் மொகந்தி, முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியம், ஜவுளி கடை உரிமையாளர் அனுப்மெல்வானி, ஏ.வி.எம் கட்டிட காண்டிராக்டர் விநாயக மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.