புதுச்சேரி

திருக்கல்யாண உற்சவத்திற்காக புதுவை லாஸ்பேட்டை விவேகானந்தர் பள்ளியில் எழுந்தருளிய சீனுவாச பெருமாளுக்கு இன்று காலை சுப்ரபாத சேவை நடந்தது.

திருமலை ஸ்ரீவாரி சீனிவாச பெருமாளுக்கு சுப்ரபாத சேவை

Published On 2022-06-19 11:01 IST   |   Update On 2022-06-19 11:01:00 IST
  • திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவ திட்டம் மற்றும் புதுவை ஸ்ரீவாரி திருக் கல்யாண சேவா டிரஸ்ட் சார்பில் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் ஸ்ரீவாரி சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
  • அதனையொட்டி திருமலையில் இருந்து உற்சவ பெருமாள் புதுவைக்கு எழுந்தருளினார்

புதுச்சேரி:

திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவ திட்டம் மற்றும் புதுவை ஸ்ரீவாரி திருக் கல்யாண சேவா டிரஸ்ட் சார்பில் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் ஸ்ரீவாரி சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

அதனையொட்டி திருமலையில் இருந்து உற்சவ பெருமாள் புதுவைக்கு எழுந்தருளினார்.செல்ல பெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளி வளாகத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சீனிவாசபெருமாளுக்கு சுப்ரபாத சேவை நடந்தது. இதை தொடர்ந்து, அனைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மங்கள இசையுடன் திருக்கல்யாண உற்சவம் தொடங்கி நடக்கிறது.

திருக்கல்யாண உற்சவத்தை திருமலையில் இருந்து வரும் அர்ச்சகர்கள் நடத்துகின்றனர். விழாவில், கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக் காக பஸ் நிலையத்தில் இருந்து லாஸ்பேட்டைக்கு இலவச பஸ் இயக்கப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்க விழாவிற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். விழா அரங்கில் சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும் என விழாக் குழுவினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News