புதுச்சேரி

குழந்தைமுத்து மாரியம்மன் கோவில் திருப்பணியை எதிர்க்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்.

ஸ்ரீ குழந்தைமுத்து மாரியம்மன் கோவில் திருப்பணி

Published On 2023-12-01 09:50 GMT   |   Update On 2023-12-01 09:50 GMT
  • எதிர்க்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
  • ரூ.1 ¾ லட்சத்திற்கான காசோலையையும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா அந்தந்த கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

புதுச்சேரி:

வில்லியனூர ஜி.என்.பாளையம் பேட் ஸ்ரீ குழந்தைமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதனையொட்டி கோவிலில் திருப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. எதிர்க்கட்சி தலைவருமான சிவா திருப்பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வில்லியனூர் தொகுதியில் உள்ள கொம்பாக்கம் குப்பம்பேட் மாரியம்மன் கோவில், ஓட்டம் பாளையம் முனீஸ்வரர் கோவில், முத்துப்பிள்ளை பாளையம் ஸ்ரீ கழுத்து முத்துமாரியம்மன் கோவில், எஸ்.எஸ்நகர் தேசபக்தி முத்து மாரியம்மன் கோவில் ஒரு கால பூஜைக்கு அரசின் இந்து அறநிலையத்துறை மூலம் தலா ரூ.20 ஆயிரம் விதம் 4 கோவில்களுக்கு ரூ.80 ஆயிரம் காசோலையும், உத்திரவாகினிபேட் பெரிய பாளையத்தம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.1 ¾ லட்சத்திற்கான காசோலையையும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா அந்தந்த கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, தர்மராஜன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News