2024 கூகுளில் பாகிஸ்தானியர்கள் அதிகம் தேடியவை.. டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்த 8 இந்திய திரைப்படங்கள்
- பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் ஹீரமண்டி இந்தி வெப் சீரிஸ் முதலிடம் பிடித்துள்ளது.
- மிர்சாபூர் சீசன் 3 இப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டில் முடிவிலும் அந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்தாண்டு பாகிஸ்தான் நாட்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஆச்சரியப்படும் வகையில் இந்த டாப் 10 பட்டியலில் 8 இந்திய திரைப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் இடம்பிடித்துள்ளது. இந்திய சினிமாக்களை பாகிஸ்தான் மக்கள் அதிக அளவில் விரும்புகின்றனர் என்பதையே இது காட்டுகிறது.
இந்த டாப் 10 பட்டியலில் ஹீரமண்டி இந்தி வெப் சீரிஸ் முதலிடம் பிடித்துள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்கியுள்ளார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியாவில் சுதந்திரம் பெற, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய லாகூரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களை மையப்படுத்தி இந்த சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. ஆடல், பாடல் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களை தவைஃப்கள் என்று கூறுவார்கள்.
பாகிஸ்தானின் தலைநகரான லாகூரில் இந்த வெப் சீரிஸின் கதை நடப்பதால் பாகிஸ்தான் மக்கள் இதனை அதிக அளவில் தேடியுள்ளனர்.
இந்த டாப் 10 பட்டியலில் 5 பாலிவுட் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் '12-த் பெயில்' திரைப்படம் 2-ம் இடத்தையும் ரன்பீர் கபூரின் 'அனிமல்' திரைப்படம் 3-ம் இடத்தையும் ஷ்ரத்தா கபூரின் 'ஸ்ட்ரீ 2' திரைப்படம் 5-ம் இடத்தையும் 'பூல் பூலையா 3' திரைப்படம் 7-ம் இடத்தையும் ஷாருக்கானின் 'டங்கி' திரைப்படம் 8-ம் இடத்தையும் பிடித்துள்ளது.
ஹீரமண்டி இந்தி வெப் சீரிசை தொடர்ந்து மிர்சாபூர் சீசன் 3 இப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளது. இந்தி பிக் பாஸ் 17 ஆவது சீசன் 9-ம் இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த டாப் 10 பட்டியலில் 'இஷ்க் முர்ஷித்' என்ற 'கபி மெயின் கபி தும்' ஆகிய பாகிஸ்தான் நாட்டை 2 டிவி ஷோக்கள் இடம்பெற்றுள்ளது.
2024ம் ஆண்டு கூகுளில் பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ், ரியாலிட்டி ஷோக்கள்:
1. ஹீரமண்டி
2. 12-த் பெயில்
3. அனிமல்
4. மிர்சாபூர் சீசன் 3
5, ஸ்ட்ரீ 2
6. இஷ்க் முர்ஷித் (பாகிஸ்தான் தொடர்)
7. பூல் பூலையா 3
8. டங்கி
9. இந்தி பிக் பாஸ் சீசன் 17
10. கபி மெயின் கபி தும் (பாகிஸ்தான் தொடர்)