அறிந்து கொள்ளுங்கள்

ஆப்பிள் 2nd Gen ஹோம்பாட் இந்திய விற்பனை துவக்கம்

Published On 2023-02-04 14:32 IST   |   Update On 2023-02-04 14:32:00 IST
  • ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ஹோம்பாட் மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது.
  • இந்திய சந்தையில் புதிய ஹோம்பாட் விற்பனை ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் நடைபெறுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ஹோம்பாட் மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய 2nd Gen ஹோம்பாட் விற்பனை துவங்கி இருக்கிறது. புதிய இரண்டாம் தலைமுறை ஹோம்பாட் விலை ரூ. 32 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஆப்பிள் ஹோம்பாட் 2nd Gen விற்பனை ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கிறது. இந்த மாடல் மிட்நைட் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இரண்டாம் தலைமுறை ஹோம்பாட் மாடலை ரூ. 5 ஆயிரத்து 742 எனும் மாத தவணை முறையில் வாங்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய ஹோம்பாட் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஆறு மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் சந்தா வழங்கப்படுகிறது.

இரண்டாம் தலைமுறை ஹோம்பாட் மாடலில் புதிய S7 சிப், பில்ட்-இன் டெம்பரேச்சர் மற்றும் ஹூமிடிட்டி சென்சார் உள்ளது. இந்த சென்சார் ஹோம்பாட் மினி மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. புது ஹோம்பாட் மாடல் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட மெஷ் ஃபேப்ரிக் கொண்டிருக்கிறது. இத்துடன் வொவன் பவர் கேபிள், பேக்லிட் டச் சர்ஃபேஸ் உள்ளது.

ஹோம்பாட் 2nd Gen அம்சங்கள்:

4-இன்ச் கஸ்டம் என்ஜினியரிங் செய்யப்பட்ட ஹை-எக்ஸ்கர்ஷன் வூஃபர்

20mm டைஃப்ராம் பில்ட்-இன் பேஸ்-EQ மைக்

லோ-ஃபிரீக்வன்சி கலிபரேஷன் மைக்ரோபோன்

நான்கு மைக்ரோபோன் டிசைன்

மேம்பட்ட கம்ப்யுடேஷனல் ஆடியோ

ஸ்பேஷியல் ஆடியோ, டால்பி அட்மோஸ்

S7 சிப்செட்

ரூம் சென்சிங் தொழில்நுட்பம்

பிரிசைஸ் டைரக்ஷனல் கண்ட்ரோல்

அல்ட்ரா வைடு பேண்ட் தொழில்நுட்பம்

அதிகபட்சம் ஆறு குரல்களை கண்டறிந்து கொள்ளும் வசதி

பில்ட்-இன் தட்ப-வெப்ப சென்சார்

வைபை, ப்ளூடூத் 5.0, திரெட்

Tags:    

Similar News