ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் வேற லெவல் அம்சங்களோட டாப் 5 இயர்பட்ஸ் பட்டியல்..!
- இந்தியாவில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களின் விற்பனை 85 சதவீதம் வரை அதிகரிப்பு.
- இந்திய சந்தையில் தொடர்ந்து புதிய இயர்பட்ஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய சந்தையில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களின் விற்பனை கடந்த ஆண்டில் மட்டும் 85 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகம் ஆகும். உள்ளூர் உற்பத்தி, மிகக் குறைந்த விலை மற்றும் அதிக சலுகைகள் உள்ளிட்டவை விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.
கவுன்டர்பாயின்ட் ஆய்வு நிறுவன அறிக்கையின் படி கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களின் விற்பனை கிட்டத்தட்ட 85 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. விற்பனை வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மின்தசாதன அக்சஸரீக்களை விற்பனை செய்யும் பிரான்டுகள் தொடர்ந்து புதிய இயர்பட்ஸ் மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
இவை ரூ. 200-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிக விலையில் கிடைக்கின்றன. பல்வேறு விலை பிரிவுகளில் கிடைக்கும் நிலையில், இந்திய சந்தையில் கிடைக்கும் ட்ரூ வயர்லெஸ் இயர்ட்ஸ் மாடல்களில் ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 இயர்பட்ஸ் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி பட்ஸ் Q2 நியோ:
38 கிராம் எடை கொண்டிருக்கும் ரியல்மி பட்ஸ் Q2 நியோ மாடலில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.0., ஸ்வெட் ப்ரூஃப், மடிக்கக்கூடிய டிசைன், 20 மணி நேரத்திற்கு பிளேடைம், 10 மீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 1599 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒப்போ என்கோ பட்ஸ் 2:
ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, ஸ்வெட் ப்ரூஃப், நாய்ஸ் கேன்சலேஷன், இன்லைன் கன்ட்ரோல்கள், 28 மணி நேரத்திற்கு டாக்டைம் மற்றும் 10 மில்லிமீட்டர் டிரைவர்களை கொண்டிருக்கும் என்கோ பட்ஸ் 2 விலை ரூ. 1799 ஆகும்.
போட் இம்மார்டல் 131:
40 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கும் போட் இம்மார்டல் 131 மாடலில் ஸ்வெட் ப்ரூஃப், இன்லைன் கண்ட்ரோல், ப்ளூடூத் 5.3, மூன்று வித இயர்டிப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் இதன் விலை ரூ. 1699 ஆகும்.
ரியல்மி பட்ஸ் ஏர் 3 நியோ:
நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் பட்ஸ் ஏர் 3 நியோ 38 கிராம் எடை கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, 30 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்கும் பேட்டரி, ஸ்வெட் ப்ரூஃப், இன்லைன் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. இதன் விலை ரூ. 1799 ஆகும்.
போட் ஏர்டோப்ஸ் 411 ANC:
10 மில்லிமீட்டர் டிரைவர்களை கொண்டிருக்கும் போட் ஏர்டோப்ஸ் 411 மாடலில் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, 10 மீட்டர் ரேன்ஜ், நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ஸ்வெட் ப்ரூஃப், இன்லைன் கண்ட்ரோல்கள், 17.5 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்குகிறது. இதன் விலை ரூ. 1949 ஆகும்.