அறிந்து கொள்ளுங்கள்

ட்விட்டரில் பணியாற்றி வந்த 5500 ஒப்பந்த ஊழியர்கள் திடீர் பணி நீக்கம்!

Published On 2022-11-14 07:17 GMT   |   Update On 2022-11-14 07:17 GMT
  • எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து அந்நிறுவனத்தில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
  • முன்னதாக ட்விட்டர் புளூ சந்தாவுடன் எவ்வித வெரிபிகேஷன் இன்றி புளூ டிக் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை எலான் மஸ்க் கடந்த வாரம் பணி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து வார இறுதியில் மேலும் பல ஆயிரம் ஊழியர்களை ட்விட்டரில் இருந்து பணி நீக்கம் செய்வதாக எலான் மஸ்க் அறிவித்தார். பணி நீக்கம் பற்றிய முழு விவரங்களை ட்விட்டர் இதுவரை வெளியிடவில்லை.

இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர்களில் பலரை பணிநீக்கம் செய்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இரண்டாம் கட்ட பணிநீக்க நடவடிக்கையில் 4 ஆயிரத்து 400-இல் இருந்து அதிகபட்சம் 5 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என கூறப்படுகிறது.

இம்முறை பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு எந்த விதமான தகவலோ அல்லது அறிவிப்போ முன்கூட்டியே வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒப்பந்த ஊழியர்களில் பலர் திடீர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என தகவல் வெளியாகி உள்ளது. பணிநீக்கம் செய்வதற்கு முன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அலுவல்பூர்வ மின்னஞ்சல் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

ட்விட்டரில் ஊழியர்களை பணியமர்த்த ஒப்பந்தம் எடுத்திருந்த நிறுவனத்திற்கும் பணிநீக்கம் தொடர்பான மின்னஞ்சல் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி கடைசி நேரத்தில் அனுப்பப்பட்டதாக கூறுப்படுகிறது. இதோடு பணிநீக்கம் ட்விட்டர் நிறுவனத்தின் "சேமிப்பு மற்றும் மறுமதிப்பீடு" நடவடிக்கையின் அங்கமாக நடத்தப்பட்டதாக மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் கடைசி பணி நாள் நவம்பர் 14 என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News