ஐபோன் 16 சீரிஸ்: முன்பதிவில் பின்தங்கிய ப்ரோ மாடல்கள்.. ஆப்பிள் வல்லுநர் தகவல்
- ஐபோன் 16 பிளஸ் மாடலை வாங்க அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
- இந்த ஆண்டு சுமார் 48 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் தனது முற்றிலும் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. அறிமுகத்தோடு புதிய ஐபோன் மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவுகளின் படி ஐபோன் 16 பிளஸ் மாடலை வாங்க அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலை வாங்குவதற்கான முன்பதிவுகள் குறைவாகவே இருந்துள்ளன. ஆப்பிள் நிறுவனம் ப்ரோ சீரிஸ் விற்பனை அதிகளவில் இருக்கும் என்ற கணிப்பில் அதிவேக டெலிவரி மற்றும் அதிக யூனிட்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஐபோன 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்கள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, அதிக யூனிட்கள் முன்பதிவாகி உள்ளன. முன்பதிவு துவங்கிய முதல் ஒருவார காலத்தில் ஐபோன் 16 வாங்க 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
பிளஸ் மாடல்களை வாங்க கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 48 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 16 சதவீதம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 12.7 சதவீதம் குறைவு ஆகும்.