அதிநவீன வசதிகளுடன் வெளியீட்டுக்கு தயாராகும் ஒன்பிளஸ் இயர்பட்ஸ்
- புதிய நார்டு பட்ஸ் 3 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படுகிறது.
- இது பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது முற்றிலும் புதிய இயர்பட்ஸ்- நார்டு பட்ஸ் 3 மாடல் இந்த மாதம் 17 ஆம் தேதி அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த இயர்பட்ஸ் விவரங்கள் டீசர்களாக வெளியிடப்பட்டு வந்தன. தற்போது இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய நார்டு பட்ஸ் 3 மாடலில் 32db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, பேஸ்வேஸ் 2.0 தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த இயர்பட்ஸ் வாட்டர் டிராப் வடிவ ஸ்டெம் கொண்டிருக்கும் என்றும் இவை மிக குறைந்த எடை மற்றும் மென்மையான வளைவுகளை கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
முன்னதாக நார்ட் பட்ஸ் 3 ப்ரோ மாடல் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இது பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் ஓவல் வடிவ கேஸ், அதன் முன்புறம் ஒன்பிளஸ் லோகோ மற்றும் எல்இடி லைட் இடம்பெற்று இருக்கிறது.
புதிய நார்ட் பட்ஸ் 3 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.4, டைனமிக் டிரைவர்கள், பேஸ் வேவ் 2.0, நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் இருவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.