அட இப்படி ஒரு விஷயமா? நிறம் மாறும் புதிய வகை ஸ்மார்ட்போன் அறிமுகம்..!
- புதிய வெர்ஷன் டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மேஜிக் மஜென்டா எடிஷன் என்று அழைக்கப்படுகிறது.
- டெக்னோ ஸ்பார்க் 10C மற்றும் ஸ்பார்க் 10 போன்ற மாடல்கள் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கின்றன.
டெக்னோ நிறுவனத்தின் பிரபலமான ஸ்பார்க் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெர்ஷன் டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மேஜிக் மஜென்டா எடிஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலில் உள்ள "லுமினஸ் இகோ-லெதர் தொழில்நுட்பம்," வழங்கப்பட்டு இருக்கிறது.
முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கும், புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனின் நிறத்தை மாற்றும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் மஜென்டா நிறத்தில் கிடைக்கும் நிலையில், ஸ்பார்க் 10C மற்றும் ஸ்பார்க் 10 போன்ற மாடல்கள் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கின்றன.
லுமினஸ் கலர் சேஞ்சிங் தொழில்நுட்பம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். லுமினஸ் இகோ லெதர் தொழில்நுட்பம், சாதனத்திற்குள் வெளிச்சத்தை உறிந்து கொண்டு விவிட் மஜென்டா நிறத்தை ஃபுளுரோசென்ட் குளோ நிறத்திற்கு மாற்றுகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன் மீது வெளிச்சம் படும் போது, நிறம் மாறுவதை உணர முடியும்.
புதிய டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மேஜிக் மஜென்டா எடிஷன் பிரைட் மற்றும் லைவ்லி பின்க் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இளம் தலைமுறையினரின் கற்பனை திறன் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த நிறங்கள் இளைஞர்களை பெருமளவில் கவரும் என்று டெக்னோ பிரான்டு எதிர்பார்க்கிறது.
டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ அம்சங்கள்:
6.8 இன்ச், 1080x2460 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர்
16 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
50MP பிரைமரி கேமரா
32MP செல்பி கேமரா
ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒஎஸ் 12.6
4ஜி, ப்ளூடூத், வைபை
5000 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி