முற்றிலும் புதிய ட்விட்டர் புளூ சந்தா முறை அமலுக்கு வந்தது - விலை எவ்வளவு தெரியுமா?
- ட்விட்டர் சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக பெருமளவு மாற்றங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- மேலும் ட்விட்டர் நிறுவன ஊழியர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் வழங்கும் முறை ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் அமலுக்கு வந்தது. புளூ செக்மார்க் மட்டுமின்றி புதிய ட்விட்டர் புளூ சந்தாவில் புது அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. தற்போது புதிய புளூ சந்தா முறை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் லண்டன் போன்ற நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக ட்விட்டர் புளூ சந்தாவுக்கான விலை மாதம் 7.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது அறிமுக சலுகை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஐஒஎஸ்-இல் ஏற்கனவே ட்விட்டர் புளூ சந்தா வைத்திருப்பவர்கள் புதிய விலைக்கு அப்டேட் செய்து கொண்டால் புளூ செக்மார்க் வழங்கப்படும்.
ஆண்ட்ராய்டு மற்றும் வெப் பயனர்களின் புளூ சந்தாவை அவர்களாகவே ரத்து செய்து கொள்ளலாம். மாறாக ட்விட்டர் தரப்பில் பயனர்களுக்கு தகவல் கொடுத்த பின் சேவை ரத்து செய்யப்படும். புது மாற்றங்களின் பழைய ட்விட்டர் விதிகளின் கீழ் வெரிபைடு புளூ செக்மார்க் பெற்றவர்கள் மற்றும் புதிய புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் பெற்றவர்கள் என இரண்டு புளூ செக்மார்க்குகள் உள்ளன.
ட்விட்டர் புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் பெற்ற அக்கவுண்ட்களில், புதிய ட்விட்டர் விதிகள் பின்பற்றப்பட்டதா என்பது போன்று எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.