அறிந்து கொள்ளுங்கள்

ட்விட்டரில் பழையபடி விலையில்லா "புளூ டிக்" - ஆனால் ஒரு ட்விஸ்ட்!

Published On 2022-11-09 08:08 GMT   |   Update On 2022-11-09 08:08 GMT
  • ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து ஏராளமான மாற்றங்கள் தளத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
  • முன்னதாக உலக நாடுகளில் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

எலான் மஸ்க்-இன் சமூக வலைதளமான ட்விட்டர், சில வெரிபைடு அக்கவுண்ட்களுக்கு "Official" லேபல் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் அடங்கும். இந்த வழிமுறை புதிய 8 டாலர்கள் சந்தா முறை அமலுக்கு வரும் போது பயன்பாட்டுக்கு வரும். ட்விட்டரில் எட்டு டாலர்கள் சந்தா முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ட்விட்டர் நிறுவனத்தின் பிராடக்ட் பிரிவு அதிகாரி எஸ்தர் கிராஃபோர்டு ட்விட்டர் புளூ சந்தா முறையில் ஏராளமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதன்படி புதிய ட்விட்டர் புளூ சந்தா முறை பயனர்களுக்கு வெரிபைடு புளூ டிக் வழங்கும். இவ்வாறு வழங்கும் போது எந்த விதமான சோதனையும் மேற்கொள்ளப்படாது. இந்த வழிமுறைக்கு பலரும் எதிர்ப்பு மற்றும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக வெரிபை செய்யப்பட்டு புளூ டிக் பெற்று இருக்கும் அக்கவுண்ட்களுக்கு புதிய "Official" லேபெல் வழங்கப்படாது. எனினும், இதனை பணம் கொடுத்து வாங்கிட முடியாது. இந்த லேபெல் முதன்மையாக அரசாங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், வியாபாரங்கள், முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் சில பொது நபர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட இருக்கிறது. 

Tags:    

Similar News