அறிந்து கொள்ளுங்கள்

ரூ. 25 மற்றும் ரூ. 55 விலைகளில் புது சலுகை அறிவித்த வோடபோன் ஐடியா

Published On 2022-12-29 07:06 GMT   |   Update On 2022-12-29 07:06 GMT
  • வி நிறுவனம் இந்திய சந்தையில் 4ஜி மொபைல் டேட்டா வழங்கும் இரண்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
  • இரு சலுகைகளிலும் மொபைல் டேட்டா மட்டுமின்றி விளம்பர இடைவெளி இல்லா மியூசிக் சேவையை வழங்குகிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக இருக்கும் வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் இரண்டு புது பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. 4ஜி டேட்டா வவுச்சர் பிரிவில் அறிவிக்கப்பட்டு இருக்கும் இரு சலுகைகளின் விலை ரூ. 25 மற்றும் ரூ. 55 ஆகும். இரு சலுகைகளும் வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு விட்டன.

எனினும், இரு சலுகைகளில் ஒன்றை பெற பயனர்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் சலுகையை ரிசார்ஜ் செய்திருக்க வேண்டும். ரூ. 25 விலையில் கிடைக்கும் 4ஜி டேட்டா வவுச்சரில் 24 மணி நேரத்திற்கு 1.1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதே காலக்கட்டத்திற்கு 1 ஜிபி டேட்டாவை ரூ. 19 விலையில் வி நிறுவனம் வழங்கி வருகிறது. இதுதவிர ஏழு நாட்களுக்கு விளம்பர இடைவெளி இல்லாத மியூசிக் சேவையும் வழங்கப்படுகிறது.

வி நிறுவனம் இலவச மியூசிக் சேவையை வழங்க ஹங்காமா மியூசிக் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. இதில் பயனர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மியூசிக் சேவையை அனுபவிக்க முடியும். ரூ. 25 வி சலுகையில் 24 மணி நேரத்திற்கு 1.1 ஜிபி டேட்டாவும், ஏழு நாட்களுக்கு இலவச மியூசிக் சேவையும் வழங்கப்படுகிறது. இலவச மியூசிக் வேண்டாம் என்போர் ரூ. 19 சலுகையில் இதே வேலிடிட்டியில் 1 ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம்.

மற்றொரு சலுகையான ரூ. 55 பயனர்களுக்கு ஏழு நாட்களுக்கு 3.3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் ஒரு மாதத்திற்கு விளம்பர இடைவெளி இல்லா மியூசிக் சேவை வழங்கப்படுகிறது. எனினும், இதனை பயன்படுத்த பயனர்கள் 4ஜி டேட்டா வைத்திருப்பது அவசியம் ஆகும். இரு சலுகைகள் தவிர வி நிறுவனம் ரூ. 108 விலை சலுகையில் 90 நாட்களுக்கு மியூசிக் சேவையை வழங்குகிறது. எனினும், இதில் 15 நாட்களுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News