பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுகிறேன்: ஆண்டி முர்ரே
- 19 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.
- ஒலிம்பிக்கில் இருமுறை ஒற்றையர் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையரில் வெள்ளியும் வென்றவர்.
லண்டன்:
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் டென்னிசில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
19 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையை பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக, ஆண்டி முர்ரே எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது கடைசி டென்னிஸ் போட்டியாக ஒலிம்பிக்ஸிற்காக பாரிஸ் வந்தடைந்தேன். கிரேட் பிரிட்டனுக்காக போட்டியிடுவது எனது தொழில் வாழ்க்கையின் மறக்க முடியாத வாரங்கள். அதை ஒரு இறுதி முறையாகச் செய்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஆண்டி முர்ரே ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையரில் வெள்ளிப் பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.