டென்னிஸ்
இந்தியன் வெல்ஸ் ஓபன்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி
- இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த போட்டியில் அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
கலிபோர்னியா:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் எம்மா நவாரோவுடன் மோதினார்.
இதில் சபலென்கா 3-6, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் எம்மாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் எம்மா நவாரோ, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதுகிறார்.