டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - 4வது சுற்றுக்கு முன்னேறினர் ஜோகோவிச், அல்காரஸ்

Published On 2023-09-02 21:45 GMT   |   Update On 2023-09-02 21:45 GMT
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.
  • இதில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் அல்காரஸ் ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.

நியூயார்க்:

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வரும் 10-ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 38-ம் நிலை வீரரான சக நாட்டை சேர்ந்த லாஸ்லோ ஜெரியை சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்களை இழந்த ஜோகோவிச், அதன்பிறகு தனது அனுபவ ஆட்டத்தின் துணையுடன் சரிவில் இருந்து அபாரமாக மீண்டதுடன் வெற்றியையும் தன்பக்கம் திருப்பினார்.

சுமார் 3 மணி 45 நிமிடம் நீடித்த இந்தப் போராட்டத்தில் ஜோகோவிச் 4-6, 4-6, 6-1, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் லாஸ்லோ ஜெரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டான் ஈவான்சுடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-2, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News