டென்னிஸ் ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைந்த லியாண்டர் பயஸ், விஜய் அமிர்தராஜ்
- சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பேம் பட்டியலில் 2 இந்தியர்கள் இடம்பெற்றனர்.
- இதில் லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் பெயர்கள் இடம்பிடித்தனர்.
புதுடெல்லி:
சர்வதேச டென்னிஸ் அரங்கில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் டென்னிஸ் ஹால் ஆப் பேம் பட்டியல் இடம் பெறும்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான 2024-ம் ஆண்டின் ஹால் ஆப் பேம் பட்டியலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன.
இதன்மூலம் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பட்டியலில் இடம்பெற்ற ஆசிய டென்னிஸ் வீரர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
விஜய் அமிர்தராஜ் 1970 முதல் 1993-ல் ஓய்வுபெறும் வரை விளையாடினார். 15 ஏடிபி ஒற்றையர் பட்டங்களையும், 399 போட்டிகளையும் வென்று உலகில் 18-வது இடத்தைப் பிடித்தார். மேலும் 1974 மற்றும் 1987 இல் டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் சென்றார்.
லியாண்டர் பயஸ் டென்னிஸ் அரங்கில் ஆடவர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மேலும் 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.