search icon
என் மலர்tooltip icon
    • 32 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • கருப்பு வெறுப்பாக இருக்கிறது. காவியை நோக்கி போகிறார்.

    சென்னை:

    சென்னை மாவட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் பால கங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ஜனநாயகக் கடமை ஆற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. வாக்களிக்க செல்லும்போது பட்டிலில் பலரது பெயர் இல்லாததால் ஓட்டுபோட முடியவில்லை.

    வாக்காளர்களை எளிதில் நீக்கும் நடைமுறை உள்ளது. அப்படி இருக்கக் கூடாது. நீக்குவதற்கு முன்பு பலமுறை வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    சென்னையில் 32 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. யார் யாருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை கேட்டுள்ளோம். அந்த பட்டியலை தருவதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்.

    சட்டசபையில் கமிஷனர் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அரசை துதிபாட சொன்னால் கவர்னர் எப்படி துதி பாடுவார்?

    முதலமைச்சருக்கு முன்பு கருப்பு பிடிக்கும். ஆனால் இப்போது கருப்பு பிடிக்கவில்லை. கருப்பு அவருக்கு வெறுப்பாக இருக்கிறது. காவியை நோக்கி போகிறார்.

    தற்போது மினி எமர்ஜென்சி நடக்கிறது. போராட்டங்களுக்கு அனுமதி இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரே வெடித்து சிதறுகிறார்கள். நெல்லிக்காய் மூட்டை போல விரைவில் சிதறுவார்கள். அண்ணா பல்கலைக் கழக விவகாரத்திற்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. சட்ட மன்றத்தில் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தண்டவாளத்தின் நடுவே 10 கிலோ எடை கொண்ட பெரிய பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது.
    • போலீசார் தண்டவாளங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் தினமும் மாலை 6.30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படுகிறது. பின்னர் கடையநல்லூர், பாம்புகோவில், ஸ்ரீவில்லி புத்தூர் வழியாக சென்னைக்கு சென்றடைகிறது.

    நேற்று மாலை வழக்கம்போல் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. 6.50 மணிக்கு கடையநல்லூர் ரெயில் நிலையத்திற்கு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது.

    இந்த ரெயில் கடையநல்லூர்-பாம்புகோவில் ரெயில் நிலையங்களுக்கு இடையே போகநல்லூர் பகுதியில் சென்றபோது அங்கு தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது.

    இதனைப்பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் சுதாரித்துக்கொண்டு ரெயிலை மெதுவாக இயக்கியவாறு அதனை நிறுத்தினார். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்த பாறாங்கற்களை அகற்றினர். பின்னர் மீண்டும் அங்கிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது.

    ஏற்கனவே கடந்த மாதமும் சங்கனாப்பேரி பகுதியில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்ட சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 'ரீல்ஸ்' வீடியோ எடுப்பதற்காக அவர்கள் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தது தெரிய வந்தது.

    கடந்த ஒரு மாதமாக ரெயில்வே போலீசார் கடையநல்லூரில் இருந்து பாம்பு கோவில் சந்தை வரை தண்டவாளங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னுக்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு சென்றனர். இந்த நிலையில் தான் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

    எனவே தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×