என் மலர்
- தந்தை ஹக்கீம் கோழிக்கடை நடத்தி வருகிறார்.
- வெள்ளி பேனா வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவி ரிப்பா முதலிடம் பெற்றார். இவரது தந்தை ஹக்கீம் கோழிக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வர்த்தகக் கழக தலைவர் கண்ணன் தலைமையில் முன்னாள் தலைவர் மெட்ரோ மாலிக், துணைத்தலைவர் சங்கீதா பிரசாத், நிர்வாகிகள் கிஷோர், அம்பேலா சாகுல் மற்றும் வியாபாரிகள் நேரில் சென்று மாணவி ரிப்பாவுக்கு வெள்ளி பேனா வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
- நாகையில் அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று தகவல் மையம் அமைக்க கோரிக்கை வைக்கப்படும்.
- 115 ஆண்டுகள் பழமையான கடல் மட்டம் அளவிடும் கல், டச்சுக் கல்லறை உள்ளிட்ட பல தொன்மையான இடங்களை பார்வையிட்டனர்.
நாகப்பட்டினம்:
தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான ஆய்வுக் குழுவினர் அண்மையில் நாகப்பட்டினம் வருகை தந்து, சூடாமணி விகாரம் இருந்த நாகை நீதிமன்ற வளாகம், 115 ஆண்டுகள் பழமையான கடல் மட்டம் அளவிடும் கல், பழைய கோட்டாட்சியர் அலுவலகம், நாகை அருங்காட்சியகம், டச்சுக் கல்லறை உள்ளிட்ட பல தொன்மையான இடங்களை பார்வையிட்டு 3 நாள்கள் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் அந்த ஆய்வு முடிவுகளை அறிக்கையாக அளித்துள்ளனர். அறிக்கையின் முதல் பிரதியை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாசிடம் அமர்நாத் ராமகிருஷ்ணா வழங்கினார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும் என்றும், விரைவில் முதலமைச்சர் மற்றும் அமைச்சரை சந்தித்து, நாகையில் அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று தகவல் மையம் அமைக்க கோரிக்கை வைக்கப்படும் என்றும் ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறினார்.
- குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
- விஷசாராயத்தை கைப்பற்றியதுடன், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் காவல்துறையினரால் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த மூன்று நாட்களில் (14, 15, 16.05.2023) ஆகிய 3 நாட்களில் மட்டும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் நடத்திய தீவிர மதுவிலக்கு வேட்டையில் 96 கள்ள சாராய வழக்குகள் பதியப்பட்டும், அதில் 92 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ 8,31,950 மதிப்பு உடைய விஷசாராயத்தை கைப்பற்றியதுடன், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுபோன்ற மதுக்கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,என்றும் குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவல்துறையிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் (10581)மூலம் கள்ளச்சாராய விற்பனை கஞ்சா விற்பனை மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனையை குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- சிறுவர் பூங்காவினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் திறந்து வைத்தார்.
- நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் ஸ்வஸ்திக் நகரில் அம்ருத் 0.2 திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சம் செலவில் கட்டப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது . விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்.
நகராட்சிஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுவர் பூங்காவினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஆத்மா குழு தலைவர் சதாசிவம்,
வழக்கறிஞர்கள் அன்பரசு, வெங்கடேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.