search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • கூட்டத்தில் கண்ணன், முருகன் உள்பட 28 நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
      • நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது.

      கடையநல்லூர்:

      கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலை மையில் நடந்தது.

      நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணை யாளர் சுகந்தி, பொறியாளர் முகைதீன் அப்துல் காதர், மே லாளர் சண்முகவேலு, சுகாதார அலுவலர் பிச்சை யா பாஸ்கர், உதவி பொறி யாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், முருகன், முகைதீன் கனி, அ.தி.மு.க. உறுப்பினர் பூங்கோதை கருப்பையா தாஸ், எஸ்.டி.பி.ஐ. உறுப்பினர் யாசர்கான் உட்பட 28 உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

      அப்போது எஸ்.டி.பி.ஐ. உறுப்பினர் யாசர் கான் கூறுகையில், நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பூட்டிக் கிடக்கும் வீடுகளில் தொடர்ந்து பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது.

      இதனை தடுக்கும் விதத்தில் நகரில் உள்ள முக்கிய வீதியான மணிக் கூண்டு, பஸ் நிலையம், மேலக்கடைய நல்லூர் பூங்கா, மாவடிக்கால், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நகராட்சி சார்பில் சி.சி.டி.வி. காமிராக் களை பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

      இதற்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் காவல் துறை, நகராட்சி அதிகாரி களின் ஆலோசனைகளை பெற்று நகரின் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. காமி ராக்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

      அதன் பின்னர் நகராட்சி பகுதிகளில் அதிக அளவு தெருநாய்கள் சுற்றி திரிவ தால் அதனை கட்டுப் படுத்துகின்ற விதத்தில் நகரில் ரூ.19 லட்சம் மதிப் பீட்டில் தெரு நாய்களுக்கு கருத்தடை மையம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் உட்பட 50 தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

      • உணவகங்கள், கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
      • சுமார் 100 கிலோ பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

      சிவகிரி:

      சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு, சப் இன்ஸ்பெக்டர் சஜிவ் ஆகியோர் தலைமையில், அனைத்து உணவகங்களிலும், கடைகளிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய ஏராளமான உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 100 கிலோ பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வின்போது சிவகிரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் லாசர் எட்வின் ராஜாசிங், சுகாதார மேற்பார்வையாளர்கள் குமார், இசக்கி, பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

      • கருப்பசாமி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.
      • ஊராட்சி தலைவர் சத்யராஜ் கருப்பசாமி குடும்பத்திற்கு சென்று ஆறுதல் கூறினார்.

      தென்காசி:

      தென்காசி அருகே உள்ள குத்துக்கல் வலசை ஊராட்சியில் சுமார் 30 வருடங் களாக மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒய்வு பெற்ற கருப்பசாமி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காலமானார். அவரது குடும்பத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு தனது சொந்த நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரத்தை நேரில் வழங்கினார். அப்போது உடன் துணை தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் உள்ளனர்.

      • மனைவி இறந்து விட்டதால் கடைசி மகன் வீட்டில் கிருஷ்ணசாமி இருந்து வந்தார்.
      • கிருஷ்ணசாமி இன்று அதிகாலை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      செங்கோட்டை:

      செங்கோட்டை கரையாளர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(வயது 78). இவர் அப்பகுதியில் பழக் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், அவரது மனைவி இறந்து விட்டதால் கடைசி மகன் வீட்டில் இருந்து வந்தார்.

      சமீபத்தில் அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்ப ட்டுள்ளது. அப்போது வயது முதிர்வின் காரணமாக அவருக்கு பக்க விளைவு ஏற்பட்டு மிகவும் அவதி அடைந்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கிருஷ்ணசாமி இன்று அதிகாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கிருஷ்ணசாமி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

      • இலஞ்சி ராமசாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது.
      • கலெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

      தென்காசி:

      தென்காசி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி வாக்காளர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தென்காசி அருகே இலஞ்சி ராமசாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இதில் தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ரவிச்சந்திரன் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

      நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா, உதவி வாக்காளர் பதிவு அலுவலரும், தென்காசி தாசில்தாருமான சுப்பையன், ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம். தென்காசி சட்டமன்றத் தொகுதி தேர்தல் தனித்துணை தாசில்தார் கருணாகரன், வருவாய்த்துறை அலுவலர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் பரிசுகள் வழங்கினார்.

      • தேவர் சிலைகளுக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
      • ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் தேவர் சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்தனர்.

      சிவகிரி:

      சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைகளுக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

      தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் தேவர் உருவ சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், வாசுதேவநல்லூர் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணி சாமி, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் மருதப்பன், மாவட்ட மருத்துவர் அணி மணிகண்டன், நல்லசிவம், கார்த்திக், வீரமணி, தங்கராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் மருது பாண்டியன், துணை செயலாளர் முனியாண்டி, முத்தையா, வீரமணி, வார்டு கவுன்சிலர்கள் ரத்தினராஜ், முத்துலட்சுமி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

      • கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
      • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவிலில் பட்டியலின உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பட்டியலின பாதுகாப்பு உரிமை கருத்தரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கூட்டமைப்பு ஊர்க்காவலன், தியாகி இம்மானுவேல் பேரவை பொதுச் செயலாளர் வேல்முருகன், ஐந்திணை மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், தமிழக மக்கள் கட்சி மாநில செயலாளர் தனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி பட்டியலின மக்கள் தொகைக்கு ஏற்பட்ட இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

      நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. தங்கவேலு, முன்னாள் மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் துரை.ஜெயச்சந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சுகந்தி, அகில இந்திய செயலாளர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் ராமகுரு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தென்காசி மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி, பட்டியல் இன உரிமை பாதுகாப்பு இயக்கம் கண்ணன் ஆகியோர் பங்கேற்று இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பேசினர். இதில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி, அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பட்டியலின உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அசோக்ராஜ் வரவேற்று பேசினார். நடராஜன் நன்றி கூறினார்.

      • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
      • நிகழ்ச்சியில் கே.எஸ்.எஸ். மாரியப்பன் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

      சங்கரன்கோவில்:

      பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, வெற்றி விஜயன், கிறிஸ்டோபர், மதிமாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, மாவட்ட பிரதிநிதி செய்யதுஅலி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன் உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

      • பீடித்தொழி லாளர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும்.
      • தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை பி.எப். ஆக செலுத்த வேண்டும்.

      நெல்லை:

      தென்காசி மாவட்ட பீடி தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மகாவிஷ்ணு தலைமையில் கிளை அமைப்பு கூட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் நடை பெற்றது. பீடித்தொழி லாளர்க ளுக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பாக கடந்த 2022-2023-ம் ஆண்டுக்கான போனஸ், விடுமுறை சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை பி.எப். ஆக செலுத்த வேண்டும். வாரந்தோறும் சனிக்கிழமை பீடி சுற்றியதற்கான சம்பளம் வழங்க தனியார் பீடி கம்பெனி நிர்வாகத்தை வலிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் மருதம்புத்தூர் கிளை தலைவர் ராமகிருஷ்ணன், துணை தலைவர்கள் சந்திரா, சரஸ்வதி, செயலாளர் தனலெட்சுமி, துணை செயலாளர்கள் கவிதா, நாராயண லெட்சுமி, பொருளாளர் கிருஷ்ண நவமணி, சம்மேளனக்குழு உறுப்பினர் வள்ளிமயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

      • தேவர் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
      • நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      சங்கரன்கோவில்:

      பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் உருவ படத்திற்கு அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகையா, ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலா ளர் ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், நகர பொருளாளர் வேலுச்சாமி, அவை தலைவர் அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி ராமநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், சரவணகுமார், பேரவை செயலாளர் சவுந்தர் என்ற சாகுல் ஹமீது, தலைமை பேச்சாளர் ராமசுப்பிர மணியன், குருவிகுளம் ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் நிவாஸ், செந்தில்குமார், குட்டி மாரியப்பன், வெள்ளி முருகன், குமார் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      • பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது.
      • முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

      புளியங்குடி:

      புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபா ளையத்து பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும்தேவி அம்மனுக்கு சிறப்பு பூஜை கள் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவுர்ணமி சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

      இரவு 7 மணிக்கு பால், தயிர், சந்தனம், தேன், குங்குமம் உள்பட 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் மற்றும் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.

      தொடர்ந்து பரிகார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம் படி கருப்பசாமி, பவானி பத்திரகாளி அம்மன்,மகா காளியம்மன், பேச்சி யம்மன்களுக்கு பாலா பிஷேகம் நடை பெற்றது.

      தொடர்ந்து முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அல ங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பி க்கப்பட்டது. இரவு 8.30 மணியளவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

      பின்னர் சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை க்கான ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

      • விழாவில் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
      • நிகழ்ச்சியில் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரி புதிய கட்டிட வளாகத்தில் அசுரா நண்பர்கள் குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு அசுரா நண்பர்க ளின சமூக பணிகளை பாராட்டினார்.

      நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஷீலா, ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் ஆகியோர் முன்னி லை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால், பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் சுந்தரம், ஆலங்குளம் அரிமா சங்கம் ஆதித்தன், முன்னாள் பேரூ ராட்சி துணை தலை வர் தங்கசெல்வம், சமூக ஆர்வலர்கள், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அன்ப ழகன், ஒன்றிய இளைஞர் அணி அரவிந்த் ராஜ் திலக், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அய்யம்பெருமாள், ஓன்றிய கவுன்சிலர் நாகராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமை ப்பாளர் அசோக், மாரியப்பன், சோனா மகேஷ், தொழிலதிபர் செல்வகுமார்,ராஜன், அசுரா நண்பர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், குறிப்பன்குளம் இளந்தளிர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      ×