search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • புதுப்பட்டியில் உள்ள தனியார் பீடி நிறுனத்தின் கீழ் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர்.
      • பீடிக்கடை முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியில் உள்ள தனியார் பீடி நிறுனத்தின் கீழ் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொழி லாளர்களுக்கு விடுமுறை ஊதியம், வருங்கால வைப்பு நிதி, போனஸ் மற்றும் வார ஊதியத்தை சரியாக செலுத்தவில்லையாம். இதுகுறித்து பலமுறை கேட்டும் நிர்வாகம் தரப்பில் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து அந்த பீடிக்கடை முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பால் விநாயகம் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர்கள் மற்றும் பீடி நிறுவன அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது என அப்போது முடிவு செய்யப்பட்டது.

      • நவராத்திரிக்காக சித்தூர் பகுதிகளில் இருந்து கொலு பொம்மைகள் கொண்டு வரபட்டுள்ளது.
      • பொம்மைகளின் வேலைப்பாடு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப ரூ.4ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

      செங்கோட்டை:

      நவராத்திரி விழாவை முன்னிட்டு செங்கோட்டை அருகே, களி மண்ணால் ஆன கொலு பொம்மைகளை விற்பனைக்காக ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கொண்டு வந்துள்ளனர்.

      இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள் கூறியதாவது:-

      நவராத்திரிக்காக புதிய வரவாக ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிகளில் இருந்து அதிகளவில் கொலு பொம்மைகள் கொண்டு வரபட்டுள்ளது. இந்த பொம்மைகள் அனைத்தும், களி மண்ணால் தயாரிக்கப்பள்ளது.

      இதில் தசாவதாரம், திருவிளையாடல் புராணம், ராமர் பட்டாபிஷேகம், கள்ளழகர் திருமண கோலம் மதுரை மீனாட்சி கோவில் திருப்பதி பிரமோத்சவம், போன் பொம்மைகள் செட், சுவாமி சிலைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் அடியார்களின் சிலைகளும், பல்வேறு கலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் கல்யாண செட், தறி நெய்தல், மண்பாண்டம் செய்தல், குறவன், குறத்தி, அஷ்ட லட்சுமி செட், வளைகாப்பு, கல்யாண செட், அம்மன் சிலைகள், ராமர் திருமண நிகழ்வு, யோகா செட், கிரிக்கெட் வீரர் செட், தலைவர்களின் பொம்மைகள் என பல வகைகளில் அரை அடி முதல் இரண்டரை அடி வரை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.

      இது தவிர, கொலுவில் வரிசைப்படுத்துவதற்காக, பறவைகள், விலங்குகள் மற்றும் பழங்களின் பொம்மைகளும் அதிகளவில் புதிய வரவாக நடப்பாண்டில் வாங்கி வந்துள்ளோம்.

      பொம்மைகளின் வேலைப்பாடு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப ரூ.50 முதல், ரூ.4ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

      நடப்பாண்டில் தொழிலாளர்கள் பொம்மைகள் தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஈடுபட்டுள்ளனர். அதன் காரண மாக புதிதாக அதிகளவில் பொம்மைகள் வந்துள்ளன. வருகிற 15-ந்தேதி விழா தொடங்க உள்ளதையடுத்து எதிர்பார்த்த விற்பனை நடைபெற்று வருகிறது.

      இந்த பொம்மைகளை செங்கோட்டை சுற்றுப்புற பகுதி மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் ஆர்டர் கொடுத்து, வாங்கி செல்கின்றனர். இதனால் 2 ஆண்டுகளுக்கு பின் நடப்பாண்டில் அதிக களாக ஆர்டர்கள் கிடைத்துள்ளது. இதனால் இத்தொழிலை நம்பிய எங்களுக்கு வருவாய் ஈட்டிய உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

      • மாணவி முவித்ரா 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்.
      • ராஜா எம்.எல்.ஏ., அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி முவித்ராவை அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைத்தார்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேசன், கோகிலா தம்பதியரின் மகள் முவித்ரா. 6 வயது மாணவியான இவர் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் ஸ்கேட்டிங்கில் முந்தைய சாதனையான சங்கரன்கோவிலை சேர்ந்த ஆதவன் என்ற 7 வயது மாணவன் 10 கிலோமீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து படைத்த சாதனையை முறியடிக்கும் வகையில் மாணவி முவித்ரா சங்கரன்கோவில் கழுகுமலை சாலையிலிருந்து அழகனேரி வரை 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ல் இடம் பிடித்தார்.

      அதனை தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி முவித்ராவை அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைத்தார். அப்போது விவேகானந்தா ஸ்கேட்டிங் மற்றும் யோகா பயிற்சி நிலைய நிறுவனர் சுரேஷ்குமார், ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்கியராஜ், முவித்ராவின் தாயார் கோகிலா மற்றும் மாஸ்டர் சாந்தனு, கல்பனா ஆகியோர் உடன் இருந்தனர்.

      • விஜயன் கேரள மாநிலம் கொல்லத்தில் சலூன் கடை நடத்தி வந்தார்.
      • திருவிழாவில் பங்கேற்க விஜயன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

      செங்கோட்டை:

      செங்கோட்டை அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசையை சேர்ந்தவர் விஜயன்(வயது 28). இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கணக்கப்பிள்ளை வலசையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக விஜயன் நேற்று மாலையில் கொல்லத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவர் தென்மலை அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

      அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று விஜயன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விஜயன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

      • தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
      • விழாவில் நகர செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

      கடையநல்லூர்:

      கடையநல்லூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் மீனாட்சி தலைமை தாங்கினார். கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். உதவி பயிற்சி அலுவலர் சேகர் வரவேற்று பேசினார். விழாவில் தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

      விழாவில் நகர செயலாளர் அப்பாஸ், ஒன்றிய செயலாளர் சுரேஷ், யூனியன் சேர்மன் சுப்பம்மாள், துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன், நகர்மன்ற துணைத் தலைவர் ராசையா, திரிகூடபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீரான், நகர துணை செயலாளர் காசி, நகர தகவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன், மதி, நல்லையா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜெயக்குமார் நன்றி கூறினார்.

      • கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
      • ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

      சிவகிரி:

      வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜய கணபதி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

      இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்விஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணாதேவி பாலசுப்பிரமணியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, மேலாளர் முனியப்பன், ஓவர்சீஸ் முத்துமாரி, கணேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முத்துக்குமார், சுரேஷ், உள்ளார் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் யுவராஜ், நித்தின் அபினேஷ் தங்க பதக்கம் வென்றனர்.
      • தங்க பதக்கம் வென்ற 6 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

      தென்காசி:

      தென்காசி அருகே உள்ள அச்சம்பட்டி எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகள் நடைபெற்றது. டேக்வோண்டோ போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர் தேவேஷ் காளிதாஸ் தங்க பதக்கமும், சுபாஷினி வெள்ளி பதக்கமும் , பிரணவ், ஜீவா, மாணவி ஹர்சிதா ஸ்ரீ ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் யுவராஜ் மற்றும் நித்தின் அபினேஷ் தங்க பதக்கம் வென்றனர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கோகுல சுதன், திருமலைவிஸ்வா, சிவபிரதீப் ஆகியோர் தங்க பதக்கம் பெற்றனர்.

      மேலும் மாணவர் செண்பகநாதன் வெள்ளி பதக்கமும், ஜெய்சன் நீல் வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஜீடோ போட்டியில் மாணவர் மகேஷ் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தார். டேக்வாண்டோ போட்டியில் தங்க பதக்கம் வென்ற 6 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர். 

      • இலஞ்சி குமாரர் கோவிலில் பூஜை செய்து புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
      • நிகழ்ச்சியில் சில்லரைபுரவு ஊராட்சி தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      தென்காசி:

      டெல்லியில் அமைய உள்ள நினைவிடத்திற்கு என் மண் என் தேசம் என்கின்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தென்காசி தெற்கு ஒன்றியம் சார்பில் இலஞ்சி குமாரர் கோவிலில் பூஜை செய்து புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

      நிகழ்ச்சிக்கு சில்லரைபுரவு ஊராட்சி மன்ற தலைவரும், தென்காசி தெற்கு ஒன்றிய பா.ஜ.க. பொதுச்செயலாளருமான குமார் தலைமை தாங்கினார். ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் மற்றும் தென்காசி தெற்கு ஒன்றிய பார்வையாளர் செந்தூர்பாண்டியன் முன்னிலை வகித்தார்.

      தென்காசி தெற்கு ஒன்றிய பொருளாளர் அய்யப்பன், மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் ராஜ குலசேகர பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், குற்றாலம் பேரூராட்சி மன்ற முன்னாள் கவுன்சிலர் அசோக்பாண்டியன், குற்றாலம் கிளை தலைவர் செல்வராஜ், குத்துக்கல்வலசை ராம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      • வேதம்புதூர் மயானம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
      • ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கொண்டனர்.

      தென்காசி:

      முதல்-அமைச்சரின் கிராமப்புற சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் அண்ணாநகர் 4-வது மற்றும் 6-வது தெரு, காமராஜ் நகர் மெயின் ரோடு, அய்யாபுரம், அழகப்பபுரம் மயானம் செல்லும் பகுதி, வேதம்புதூர் மயானம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

      அதனை குத்துக்கல் வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் மற்றும் தென்காசி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அழகு சுந்தரம் ஆகியோர் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.

      ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முக சுந்தரம், வார்டு கவுன்சி லர்கள் கலைச்செல்வி, சுப்பையா, கருப்பசாமி, மைதீன் பாத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் வேம்பையா, ஒப்பந்ததாரர் விஜய பாலன், குத்துக்கல்வலசை ஆனந்த், சுந்தர்ராஜ் மற்றும் அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

      • 15 -வது நிதிக்குழு மானியத்திலிருந்து வரும் தொகையை ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.
      • அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தாமல் உள்ளது.

      கடையம்:

      கடையம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் 25-வது கூட்டம் அதன் தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை யில் நடைபெற்றது. ரவண சமுத்திரம் ஊராட்சி தலைவர் முகம்மது உசேன், கீழக்கடையம் ஊராட்சி தலைவர் பூமிநாத், ஏ.பி.நாடானூர் ஊராட்சி தலைவர் அழகுதுரை, முதலியார்பட்டி ஊராட்சி தலைவர் மைதீன் பீவி அசன் , தெற்கு கடையம் ஊராட்சி தலைவர் முத்துலெட்சுமி ராமதுரை, வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவர் ஸாருகலா ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      கூட்டத்தில் , ஊராட்சி தலைவர்களின் 3-வது ஆண்டு பதவி ஏற்பு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. ஊராட்சி நிதியில் இருந்து பணிகளை தேர்வு செய்ய ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.

      இதனை கடையம் ஊராட்சி ஒன்றியத்திலும் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், டி.என். பாஸ் முறையை தமிழக அரசு ரத்து செய்துவிட்டு மீண்டும் பி.எப்.எம்.எஸ்.முறையை கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

      மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிக்கான பணி நியமன உரிமம் ஊராட்சி தலைவர்களுக்கே வழங்க வேண்டும்.15 -வது நிதிக்குழு மானியத்திலிருந்து வரும் தொகையை, குடிநீர் கட்டணம் மற்றும் மின்சார கட்டணத்திற்கு பிடிப்பதை ரத்து செய்து விட்டு, ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.

      மேலும் ஜல் ஜீவன் திட்டத்தை ஊராட்சி தலைவர்களே நிறைவேற்ற வேண்டும் என்று கருத்து கூறிய உயர்நீதி மன்ற நீதிபதி யின் கருத்திற்கு கூட்டமைப்பு சார்பாக நன்றி தெரிவிப்பது, கலைஞர் உரிமை திட்டத் திற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதோடு, விடுபட்ட தகுதி உள்ள மகளிர்களுக்கும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      மேலும் 6-வது நிதிக்குழு மானியத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு கொண்டு வந்த அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தற்போது நடை முறைப்படுத்தாமல் உள்ளது. அதனை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

      கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் ,கீழாம்பூர் மாரிசுப்பு, அடைச்சாணி மதியழகன், திருமலை யப்புரம் மாரியப்பன், மடத்தூர் முத்தமிழ் செல்லி ரஞ்சித், மந்தியூர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்ட னர். முடிவில் தெற்கு மடத்தூர் ஊராட்சி தலைவர் பிரேம ராதா ஜெயம் நன்றி கூறினார்.

      • 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
      • போட்டியில் பங்கேற்கும் அனைவரும் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

      தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட் டுத்துறை, தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) அண்ணா சைக்கிள் போட்டி கள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

      அதன்படி 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவி களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் தூரமும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

      போட்டியானது 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஐ.டி. கார்னரில் இருந்து தொடங்கி பண்பொழி ரோடு வழியாக செங்கோட்டை ரெயில்வே கேட் வரை சென்றடைய உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைவரும் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்திட கடைசி நாள் 13-ந் தேதி மாலை 5.30 மணி ஆகும்.

      முன்பதிவு செய்திட மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9788918406, 9489153516 என்ற செல்போன் எண்ணிலோ முன்பதிவு செய்து கொள்ள லாம். போட்டியில் பங்கு பெறும் அனைவரும் இந்தியா வில் தயாரான சாதாரண மிதி வண்டியினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் பங்கு பெறும் அனைவரும் தங்கள் பள்ளி- கல்லூரியில் இருந்து 'போன்பைடு' சான்றிதழ் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.

      போட்டியில் வெற்றி பெறும் ஒவ்வொரு பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 2 ஆயிரம், 4-ம் பரிசு முதல் 10-வது பரிசு வரை ரூ. 250 மற்றும் சான்றி தழ்களும் வழங்கப்படும்.

      பரிசுத் தொகையானது நிப்ட் பேங்கிங் மூலம் வழங்கப்பட உள்ளதால் கலந்து கொள்ளும் அனைவரும் கண்டிப்பாக வங்கி கணக்கு புத்தகத்தின் முதற்பக்க நகலை கொண்டு வர வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • மாரிமுத்துவுக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.
      • கடந்த 8-ந்தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மாரிமுத்து மயங்கி கிடந்தார்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி சந்தனமாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 48). தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். மாரிமுத்துவுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 8-ந்தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு அவர் இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ×