search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் பனை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
      • மருதம்புத்தூரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

      ஆலங்குளம்:

      கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆலடி அருணா அறக்கட்டளை, பொழில் அறக்கட்டளை மற்றும் தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காளத்திமடம், புதுப்பட்டி, மருத்தம்புதூர் ஆகிய கிரா மங்களில் உள்ள குளங்களில் 2500 பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

      மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக காளத்திமடம், புதுப்பட்டி, மருதம்புத்தூர் பகுதியில் தி.மு.க. கிளை நிர்வாகிகள் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோரை மேளதாளத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.

      நிகழ்ச்சியில் பாப்பாக்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாரிவண்ணமுத்து, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், தி.மு.க. மகளிரணி அமைப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான சங்கீதா, புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பால் விநாயகம், மருதம்புத்தூர் ஊராட்சி தலைவர் பூசத்துரை, நிர்வாகி சுதாகர், ஊராட்சி செயலாளர் அருணாச்சலம் மற்றும் சிவசுப்பிரமணியன், பாலாஜி, வில்லிசை கலைஞர் பரமேஷ்வரி, அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      தொடர்ந்து மருதம் புத்தூரில் உள்ள காமராஜர் சிலைக்கு டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய செயலாளர் மாரி வண்ண முத்து. ஊராட்சி தலைவர் பூசத்துரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

      • பஜார் பூக்கடை சந்திப்பு பகுதி குப்பைகள் கொட்டப்பட்டு குப்பைமேடாக காட்சியளித்தது.
      • விழிப்புணர்வு ஏற்படுத்திய தூய்மை பணியாளர்களை வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டி செல்கின்றனர்.

      தென்காசி:

      தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான பஜார் பூக்கடை சந்திப்பு பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வீடுகளில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் சாலையோரங்களில் கொட்டப்பட்டு குப்பைமேடாக காட்சியளித்து வந்தது. அதை அகற்றிவிட்டு தூய்மையே சேவை, இங்கு குப்பை கொட்டாதீர் என்ற வாசகத்துடன் தூய்மைப்படுத்தி கோலம் போட்டு நகராட்சி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். இதனை அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வித்தியாசமாக உள்ளது எனவும் தூய்மை பணியாளர்களை வெகுவாக பாராட்டியும் செல்கின்றனர். எனினும் அருகில் இருக்கும் வியாபாரிகள், வீடுகளை சேர்ந்தவர்கள் அங்கு குப்பைகளை கொட்டாமல் இருக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

      • அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
      • நிகழ்ச்சியின்போது மழை வேண்டி 1,008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

      புளியங்குடி:

      புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் தெய்வங்களுக்கு புரட்டாசி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

      தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பவுர்ணமி நாளில் சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு குருநாதர் சக்தியம்மா புரட்டாசி மாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழி வாற்றினார்.

      தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், இளநீர், பஞ்சா மிர்தம் சந்தனம், குங்குமம் உட்பட 21 நறுமண பொருட்கள் மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலா பிஷேகம் நடந்தது. பின்னர் பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிர மணியர், வள்ளி, தெய்வா னை பதினெட்டா ம்படி கருப்பசாமி, பவானி, பத்திரகாளியம்மன், மகா காளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடை பெற்றது.

      தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சந்தன காப்பு, அலங்காரம் செய்ய ப்பட்டு பெரிய தீபா ரா தனை காண்பிக்கப்பட்டது.

      இரவு 8.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடை பெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடினர். பின்னர் சிறப்பு அன்ன தானம் வழங்க ப்பட்டது. இதில் திரளான பக்த ர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

      • பாறை துகள்கள் பயிர்கள் மீது படிந்து காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
      • கல்குவாரியால் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி, வறட்சி நிலைக்கு சென்று விட்டது.

      தென்காசி:

      தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள குறிச்சாம்பட்டி கரையாளனூர் கிராமத்தில் கிணற்று பாசனங்கள் மூலம் விவசாய பணிகள் நடைபெறுகிறது.

      இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் ராட்சத எந்திரம் மூலம் கல் அரவை மேற்கொள்ளப்படுவதாகவும், அதனால் அங்கிருந்து வரும் பாறை துகள்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும், பயிர்கள் மீதும் படிந்து காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

      இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஏமையா, திரவியம் உள்ளிட்ட விவசாயிகள் கூறும் போது, கல் அரவை பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து வரும் பாறை துகள்கள் எங்களது பயிர்கள் மீது படிந்து அவற்றை கருக செய்கிறது. இதுகுறித்து நாங்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. மேலும் இந்த கல்குவாரியால் வேளாண்மைக்கு பயன்படுத்தி வரும் எங்கள் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி, வறட்சி நிலைக்கு சென்று விட்டது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. இந்த கல்குவாரியால் கரையாளனூர் பகுதியில் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

      • வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.
      • ஒரு கல்லூரியிலிருந்து 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டத்தில் 6 முதல் பிளஸ்-2 வரை பயிலும் பள்ளிமாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப்போட்டிகள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி வருகிற 6-ந்தேதியும், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி 10-ந்தேதியும் காலை 8.30 மணிக்கு தமிழ் வளர்ச்சி த்துறை சார்பில் தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளன.

      பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 5-ந்தேதி பள்ளிகளுக்கு காஞ்சித் தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா ஆகிய தலைப்புகளிலும் மற்றும் கல்லூரிகளுக்கு அண்ணாவும் மேடைபேச்சும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி 10-ந்தேதி பள்ளிகளுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சமூகர் சீர்திருத்தங்கள் ஆகிய தலைப்புகளிலும் மற்றும் கல்லூரிகளுக்கு பெரியாரும் பெண் விடுதலையும் சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப் பேரொளி, தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள் ஆகிய தலைப்பு களில் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

      தென்காசி மாவட்ட அளவில் நடை பெறும் கல்லூரி பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

      தென்காசி மாவட்ட அளவில் நடைபெறும் 6-ம் வகுப்பு முதல்

      12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம்பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். மேலும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2ஆயிரம், வீதம் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்பெறும் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு மாணவர் மட்டுமே போட்டி யில் கலந்து கொள்ளலாம்,

      மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் 2-ம் தலத்தில் செயல்பட்டுவரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 04822502521) தொடர்பு கொள்ளலாம். தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் ஆர்வ த்துடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

      • காசிநாதபுரம் கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை பணிகளை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
      • புதிய பள்ளிக் கட்டிடங்களை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் பள்ளி மாணவர்களுடன் திறந்து வைத்தார்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டி ஊராட்சி காசிநாதபுரம் கிராமத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள புதிய சிமெண்ட் சாலை பணிகளை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

      நிகழ்ச்சியில் புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பால்விநாயகம், ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகராம், புதுப்பட்டி கூட்டுறவு சங்கம் மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதம்புத்தூர் ஊராட்சியில் பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிடங்களை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் பள்ளி மாணவர்களுடன் திறந்து வைத்தார்.

      இதில் மருதம்புத்தூர் ஊராட்சி தலைவர் பூசத்துரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சங்கீதா, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

      • அஞ்சாங்கட்டளை ஊராட்சி மன்ற தலைவராக முப்புடாதி என்பவர் பதவி வகித்து வருகிறார்.
      • ஊராட்சி தலைவரின் கணவர் பெரியசாமி ஊராட்சி பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் தலையீடு செய்து வருகிறார்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் அஞ்சாங்கட்டளை ஊராட்சி மன்ற தலைவராக முப்புடாதி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் மீது பல்வேறு புகார்களை கூறி தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அஞ்சாங்கட்டளை வார்டு உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர்.

      அதில், அஞ்சாங்கட்டளை கிராம ஊராட்சியில் பொது மக்களிடம் இருந்து குடிநீர் இணைப்பு பணிகளுக்காக வசூலிக்கப்பட்ட தொகை சுமார் ரூ.85 ஆயிரத்தை ஊராட்சி கணக்கில் செலுத்தாமல் பஞ்சாயத்து தலைவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை வார்டு உறுப்பி னர்களுக்கு தெரிவிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு தனக்கு ஆதாயம் கிடைக்கும் பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறார்.

      வார்டு உறுப்பினர்கள் மற்றும் பஞ்சாயத்து துணைத்தலைவரிடம் கலந்து ஆலோசிக்காமல் அவர்களது ஒப்புதல் இல்லாமல் தீர்மானங்களை நிறைவேற்றி அரசின் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தனது சொந்த மகளின் கணவர் ஆறுமுகம் என்பவரது பெயரில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

      மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தனக்கு நெருக்கமான ஒருவரை 100 நாட்கள் பணி முடிந்த பின்னரும் தொடர்ந்து பணித்தள பொறுப்பாளராக நியமித்து மற்ற நபர்களுக்கு பணித்தள பொறுப்பாளர் பணி கிடைக்க விடாமல் அடாவடி செய்து வருகிறார். இவர் ஊராட்சி தலைவராக பதவியேற்ற நாள்முதல் இதுநாள் வரையில் அவரது கணவர் பெரியசாமி என்பவர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளை மேற்பார்வை செய்வதோடு மட்டுமில்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் தலையீடும் செய்து வருகிறார்.

      இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து இனி ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடு செய்யக்கூடாது என எச்சரித்து உத்தரவு பிறப்பித்தும் அதை மதிக்காமல் இன்றளவும் செயல்பட்டு வருகிறார். ஊராட்சி தலைவரும் தனது அதிகாரத்தை மீறி இதனை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்.

      தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205-ன் படி, கட்டாய கடமைகளை செய்யாமல் இருத்தல், நிதி முறைகேடுகளில் ஈடுபடுதல் போன்ற காரணங்களுக்காக அஞ்சாங்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

      • ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன் ஏற்பாட்டில் 100 தட்டுகள், டம்ளர்கள் வழங்கப்பட்டது.
      • தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் இந்த மருத்துவ மனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றது.

      சங்கரன்கோவில்:

      தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு ராஜா எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் இருந்து 500 பெட்ஷீட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்சேகர் தலைமை தாங்கினார். மருத்துவர் மாரிராஜ், மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தனது சொந்த நிதியில் இருந்து அரசு மருத்துவ மனைக்கு 500 பெட் சீட்டுகளை வழங்கினார். மேலும் மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன் ஏற்பாட்டில் 100 தட்டுகள், டம்ளர்கள் வழங்கப்பட்டது.

      தொடர்ந்து பேசிய ராஜா எம்.எல்.ஏ, தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் இந்த மருத்துவ மனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றது. இங்கு நோயாளிகளுக்கு அனைத்து உயர்தர சிகிச்சைகளும் செய்யப்படும் வகையில் பல்வேறு தேவை கள் நிறை வேற்றப் பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு மருத்து வர்கள், செவிலி யர்கள், மருத்துவமனை பணி யாளர்கள் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை குணப்படுத்தி அவர்களை நலமுடன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். நிகழ்ச்சி யில் நகர துணை செய லாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், வீரமணி, ஜெயக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • பக்தர்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் அக்னிக் குண்டம் இறங்கியது மெய் சிலிர்க்க வைத்தது.
      • விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தசரா விழாவுடன் தொடங்கியது. சனிக்கிழமை சிறுமிகளின் புஷ்பாஞ்சலி நடை பெற்றது. ஞாயிற்றுக்கிழமை 1,503 பெண்கள் பங்கு பெற்ற திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

      அதனைத்தொடர்ந்து திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதை யொட்டி காலை பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், பூ வளர்த்தல், பால்குடம் எடுத்தல், உச்சிகால பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

      இரவு 7 மணிக்கு விரதமிருந்த பக்தர்கள் அனைவரும் அக்னி குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தனர். இதில் பக்தர்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் பக்தி பரவசத்துடன் அக்னிக் குண்டம் இறங்கியது மெய் சிலிர்க்க வைத்தது.

      விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கு தர்மகர்த்தா வும், முன்னாள் எம்.பி.யுமான ராமசுப்பு தலைமை தாங்கினார். திருவிழா வையொட்டி ஆலங்குளம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் பாது காப்புப் பணியில் ஈடுபட்டனர்.

      • மாரிமுத்து மீது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
      • விபத்து தொடர்பாக அப்துல் ரகுமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

      தென்காசி:

      தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 48). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் தென்காசியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர் மீது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

      இந்த விபத்தில் அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடி யாக அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகி ச்சை க்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து உயிரிழந்தார். இது தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கடைய நல்லூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (21) என்பவர் மீது தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் -பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.
      • போட்டியில் 19 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினார்.

      கடையநல்லூர்:

      கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் குமரன் தலைமை தாங்கினார்.

      ஷிபா மருத்துவமனை மருத்துவர் ஜவகர் சலீம், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் பிரேமா வரவேற்று பேசினார். பேராசிரியர் பால் மகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

      போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 19 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் இந்திய கபடி அணி தலைவர் மணத்தி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். குரு சித்திர சண்முக பாரதி போட்டி யினை ஒருங்கிணைத்தார்.

      நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன், தென்காசி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சரவணன், நகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் முகைதீன் கனி, நகர்மன்ற உறுப்பினர் சிட்டி திவான், அறங்காவலர் குழு உறுப்பினர் இடைகால் குமார், இளைஞரணி முருகானந்தம், வார்டு செயலாளர் சையது மசூது, நகர தகவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன், முன்னாள் கல்லூரி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுலைமான் மற்றும் பேராசிரியர்கள் கிருத்திகா, சண்முகப்பிரியா, சண்முக வடிவு, முருகன், மரகத கோமதி, ஆறுமுகம், சாம்சங் லாரன்ஸ்பால், மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.

      • பிளாஸ்டிக் பைகள், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்டவை பயன்பாட்டை தடுக்க வேண்டும்.
      • பொருட்கள் வாங்க செல்லும்பொழுது துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும்.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியருப்பதாவது:-

      தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தினை தென்காசி மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்திட ஏதுவாக மாவட்டம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

      இதனை மாவட்டம் முழுவதும் அமல்படுத்தி பசுமை மாவட்டமாக உருவாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தாள்களில் வழங்கப்படும் உணவு பொட்டலங்கள், பிளாஸ்டிக் மேசை விரிப்பு, பிளாஸ்டிக் கால் செய்யப்பட்ட தட்டுகள், தேநீர் குவளைகள், குடிநீர் பாட்டில்கள், பாக்கெட்டுகள் பயன்பாட்டை தடுக்க வேண்டும்.

      மேலும் பொதுமக்களும், வணிகர்களும் தடை செய் யப்பட்ட இந்த பொருட்களை பயன் படுத்துவதை கைவிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீட்டு கழிவுகளை மக்கும், மக்காத கழிவுகள் என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். மேலும் கடை வீதிகளில் பொருட்கள் வாங்க செல்லும்பொழுது துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும்.

      வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக அரசு அலுவ லர்களால் எவ்வித முன்னறி விப்புமின்றி திடீர் ஆய்வுகள் மேற் கொள்ளப் படும்.

      அப்போது அந்த பொருட் களின் பயன்பாடு கண்டறி யப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்வதோடு அபராதமும் விதிக்கப்படும்.

      இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

      ×