search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா ராமசாமியாபுரம் சமுதாய நலக்கூட மண்டபத்தில் நடைபெற்றது.
      • விழாவை முன்னிட்டு விஸ்வ பிரம்ம ரத ஊர்வலம் நடைபெற்றது.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் நகர விஸ்வ பிரம்ம மகாஜனம் சங்கம் சார்பில் விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா ராமசாமியாபுரம் 4-வது தெருவில் உள்ள சமுதாய நலக்கூட மண்டபத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் இசக்கிராஜன், பொருளாளர் செண்பக நாராயணன், துணைத் தலைவர் சுப்புராஜ், துணைச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நகைத் தொழிலாளர் மத்திய சங்க மாநில தலைவர் சங்கரன் வரவேற்று பேசினார்.

      விழாவை முன்னிட்டு விஸ்வ பிரம்ம ரத ஊர்வலம் நடைபெற்றது. ராமசாமியாபுரம் 4-வது தெருவில் உள்ள விஸ்வகர்ம சமுதாய நலக்கூடத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய ரதவீதி வழியாக மீண்டும் சமுதாய நலக்கூடத்தை வந்தடைந்தது. இதில் சங்க நிர்வாகிகள் மாரியப்பன், வீரபாண்டியன், முத்துவேல், அருள் கணேசன், பரமசிவன், அருணாச்சலம், சிவக்குமார், சிங்கார வடிவேலு, முருகையா, சக்திவேல், வீரபுத்திரன், கைலாசம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ராஜா சங்கர் நன்றி கூறினார்.

      • வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பா.ஜ.க. சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
      • சிவகிரியில் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

      சிவகிரி:

      பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் நெல்கட்டும்செவல் பஞ்சாயத்து காட்டுப்புரம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் பா.ஜ.க. சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த ஆண்டு பிளஸ்-2 வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

      கணேசன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவரும், சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவருமான வக்கீல் ராம்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய பொது செயலாளர் தினேஷ், ஒன்றிய துணைத்தலைவர் கோமதி பாண்டியன், மாவட்ட மகளிரணி துணை தலைவர் சுதா, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கருப்பசாமி, கிளை தலைவர்கள் பால்ராஜ், கருப்பசாமி, செயற்குழு உறுப்பினர்கள் குருசாமி, சண்முகவேல், சத்யா, அய்யன் ராஜ், அய்யப்பன், மணிராஜ், ஸ்டீபன்சன், ஏசுராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

      சிவகிரி

      இதேபோல், சிவகிரியில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். வடக்கு ஒன்றிய செயலாளர் ஒரு சொல் வாசகன் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் கோதண்டராமன், மாவட்ட செயலாளர் அர்ஜூனன், ஓ.பி.சி. அணி மாவட்டத் துணைத்தலைவர் தங்கம், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராகவன், மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சேட்டு குமார், கருப்பையா, புலியூரான், முத்துச்சாமி, ஓ.பி.சி. அணி ஒன்றிய துணைத்தலைவர் ரஜினி கருப்பையா, கிளை தலைவர்கள் நடராஜன், மாரியப்பன், முத்துசாமி, பாலமுருகன், ராஜேஷ், மாடசாமி, ராஜேந்திரன், மாவட்ட ஒன்றிய அணி பிரிவு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாசு வடக்கு ஒன்றிய செயலாளர் ஒரு சொல் வாசகன் செய்திருந்தார்.

      • காளியம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
      • விழாவில் அய்யாத்துரைப் பாண்டியன் அன்னதானம் ஏற்பாடு செய்து அதனை தொடங்கி வைத்தார்.

      தென்காசி:

      கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைத்து கொடுக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகியும், தொழில் அதிபருமான அய்யாத்துரைப் பாண்டியன் அன்னதானம் ஏற்பாடு செய்து அதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊத்துமலை இளைய ஜமீன் குமரேசராஜா, பழனிச்சாமி, பூலோகராஜ், சுபிக்ஷா கருப்பசாமி, பண்பொழி கவுன்சிலர் கணேசன், பேச்சிமுத்து ஆனந்த், செல்வராஜ் மற்றும் பால அருணாசலபுரம் தேவேந்திர குல வேளாளர் நாட்டாண்மைகள் மாதவன், மகேஷ் மற்றும் கணேசன், மாடசாமி, ஆறுமுகசாமி, வேல்முருகன், மகேஷ், சாமி மாரிமுத்து, வேல்ராஜ், முத்துக்குமார், சாமித்துரை, கண்ணன், அரவிந்த் மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

      • விநாயகர் பூஜைக்காக பூக்களும் அதிக அளவில் விற்பனையாகும்.
      • சிவகாமிபுரம் பூ சந்தையில் பிச்சி பூ-ரூ.1,250-க்கு விற்பனையானது.

      தென்காசி:

      நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனை யொட்டி முழு முதற் கடவுளான விநாயகருக்கு படையலிட அவல், பொறி உள்ளிட்டவை வாங்குவது வழக்கம். மேலும் விநாயகர் பூஜைக்காக பூக்களும் அதிக அளவில் விற்பனையாகும்.

      இதனையொட்டி தென்காசி மாவட்டத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் பூ சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.1500-க்கு விற்பனையானது. பிச்சி பூ-ரூ.1,250, சம்பங்கி-ரூ.350, கேந்தி பூக்கள்-ரூ.40, கோழி கொண்டை-ரூ.50, முல்லை ரூ.1,000, பச்சை கொழுந்து-ரூ.40 என இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

      தென்காசி மாவட்டத்தில் பருவமழை போதிய அளவில் பெய்யாததால் வறட்சி காரணமாக தோட்டங்களில் பூக்கள் பயிரிட்ட விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுவதற்கு பெரிதும் சிரம் அடைந்தனர்.

      இதனால் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், திப்பணம்பட்டி, ஆவுடையா னூர், கல்லூரணி, சிவநாடா னூர், முத்து மாலைபுரம், பெத்த நாடார்பட்டி, சாலைப்புதூர், கரிசலூர், ஆலங்குளம், வீரகேர ளம்புதூர், ஆண்டிப்பட்டி, அத்தியூத்து, முத்து கிருஷ்ணபேரி போன்ற பகுதிகளில் பூக்கள் விளைச்சல் மிகவும் குறைந்து காணப்பட்டது.

      இதனால் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் பூக்களின் வரத்தும் கணிசமாக குறைந்தது. இதன் காரணமாகவே பூக்களின் விலை உயர்ந்துள்ளது எனவும், இன்றும், நாளையும் பூக்களின் விலை மேலும் உயரும் எனவும் வியாபாரிகள் கூறினர்.

      • போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
      • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

      தென்காசி:

      பிரைனோபிரைன் நிறுவனம் சென்னை டிரேடு சென்டரில் மாநில அளவிலான அபாகஸ் போட்டியை நடத்தியது. இப்போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 4-ம் வகுப்பு மாணவர்கள் ஹாரூன் ரஷீத், முகமது யக்யா, 3-ம் வகுப்பு மாணவி ஹாஸ்லின் ரிசா மற்றும் 5-ம் வகுப்பு மாணவி அப்சின் சனா ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

      • கடந்த ஆண்டு ஒரு மூட்டை நிலக்கடலை ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது.
      • நிலக்கடலைகளை தார்பாய்களில் கொட்டி காய வைத்து வருகின்றனர்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி, ஆவுடை யானூர், சிவசை லனூர், அரியப்பபுரம், திரவிய நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசா யிகள் அதிக அளவில் நிலக்கட லை பயிரிட்டு இருந்தனர்.

      நிலக்கடலை விளைச்சல் அடைந்துள்ளதால் அதனை எடுக்கும் பணியில் தீவிர மாக விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் மற்றும் தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் பெய்யாததால் கடலை விளைச்சல் குறைந்துள்ளதாகவும், வெள்ளை குட்டம் எனும் நோயும் தாக்கி உள்ளதால் நிலக்கடலை பருப்புகள் முழுமையான வளர்ச்சியை அடைய வில்லை. மேலும் கடந்த ஆண்டு ஒரு மூட்டை நிலக்கடலை ரூ.3 ஆயிரம் வரையில் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்து 600 முதல் 2 ஆயிரத்து 800 வரையே விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

      வயலில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கடலைகளை வெயிலில் காய வைப்பதற்காக வயலுக்குள்ளேயே தார் பாய்களில் கொட்டி காய வைத்து வருகின்றனர். நிலக்கடலை அறுவடை செய்யப்பட்ட செடிகளை கட்டுகளாக கட்டி மாடுகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

      • மாணவி மிருதுளா ஜனனி 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 3-வது இடம் பிடித்தார்.
      • வெற்றி பெற்ற மாணவிக்கு வெற்றிக்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட அளவிலான ஐ.பி.எல். சதுரங்க போட்டியானது பாவூர்சத்திரத்தில் உள்ள ஐ.பி.எல். சதுரங்க கலைக்கூடத்தில் நடைபெற்றது. இதில் இலஞ்சி பாரத் மாண்டி சோரி பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி மிருதுளா ஜனனி 12 வயதுக்குட் பட்டோ ருக்கான பிரிவில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிக்கு ஐ.பி.எல். சதுரங்க கலைக்கூடத்தின் சார்பாக பாராட்டுச் சான்றிதழும், வெற்றிக்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.

      வெற்றி பெற்ற மாணவியை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

      • செங்கோட்டை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன.
      • வருங்காலத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காணாமல் போய்விடும்.

      செங்கோட்டை:

      தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, இலஞ்சி, தேன்பொத்தை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன. இவர்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா காலத்தில் களிமண்ணால் விநாயகர் சிலை தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

      இதில் செங்கோட்டை நகர் பகுதியில் மட்டும் சுமார் 50 முதல் 60 விநாயகர் சிலைகளை பல்வேறு வடிவங்களில் வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப 1 அடி முதல் 7 அடி வரை சுத்த களிமண்ணால் விநாயகர் சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்வார்கள். இவற்றை செங்கோட்டை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் ரூ. 1,000 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்தனர்.

      இந்நிலையில் கடந்த சில வருடங்களாவே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக ஆந்திரா, புதுச்சேரி, விஜயவாடா, திருப்பதி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்க தேவையான கிழங்குமாவு, காகித கூழ், ரசா யனங்கள் உள்ளிட்ட வை கொண்டு வரப்பட்டு அதன் மூலம் சிலைகள் தயாரித்து சிலர் விற்பனை செய்கின்றனர்.

      இதனால் அந்த சிலைகள் பல வண்ணங்களில் மக்களை ஈர்க்கும் வகையில் உள்ளதால், செங்கோட்டை மக்கள் களிமண்ணால் தயாரிக்கும் சிலைகளுக்கு மவுசு குறைந்துவிட்டது. நாகரீக வளர்ச்சி என்று கூறிக்கொண்டு, நீர்நிலைக ளை மாசுபடுத்தும் ரசா யனங்கள் கலந்த சிலைகளையே மக்கள் அதிகம் விரும்புவதால், களிமண் சிலை விற்பனை குறைந்து விட்டதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிப்ப டைந்துள்ளதாகவும் செங்கோட்டை சிலை தயாரிப்பாளர்கள் குமுறு கின்றனர்.

      இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காணாமல் போய்விடும். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • ராஜா எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினார்.
      • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.

      சங்கரன்கோவில்:

      தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வீரா, வீர மணிகண்டன், கோமதிநாயகம், ஆறுமுகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      மேலும், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அவை தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் யூ.எஸ்.டி. சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • பகுதி சபா கூட்டத்திற்கு அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமை தாங்கினர்.
      • ஒவ்வொரு வார்டுகளிலும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

      சிவகிரி:

      பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் உள்ள 18 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிவகிரி பேரூராட்சியில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் பற்றிய விபரங்கள், மேற்படி திட்டங்களால் பயனடைந்த பகுதிகள் மற்றும் மக்கள் பற்றிய விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டது.

      கூடுதலாக தண்ணீர் வசதி

      பகுதி சபா கூட்டத்திற்கு அந்தந்த வார்டுகளின் கவுன்சிலர்கள் தலைமை தாங்கினர். 5-வது வார்டு ஜீவா நகரில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு விக்னேஷ் ராஜா தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, செயல் அலுவலர் வெங்கட கோபு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், தலைமை எழுத்தர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர்கள் மற்றும் வரித்தண்டலர்கள் ஆகியோர் வார்டு குழு செயலாளர்களாக கலந்து கொண்டனர்.

      ஒவ்வொரு வார்டுகளிலும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது கூடுதலாக வார்டுகளில் தண்ணீர் வசதி செய்து தரவேண்டும். கழிப்பிட வசதி இல்லாத இடங்களில் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். தெற்கு ரத வீதியில் கீரை கடை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பாலத்தினை உயர்த்தி புதுப்பித்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று அதிவிரைவில் அந்தந்த பகுதிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

      வாசுதேவநல்லூர்

      வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான பகுதி மக்கள் கலந்து கொண்டு திட்டப் பணிகளை பாராட்டியும், வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் கூட்டத்தில் தெரிவித்தனர். புதுமந்தை முனியாண்டி கோவில் வளாகத்தில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு பேரூராட்சிமன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பரமசிவன் முன்னிலை வகித்தார்.

      கூட்டத்தில் மகாதேவன், வனக்குழு தலைவர் போஸ் ராஜா, பேரூராட்சி அலுவ லகர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
      • நிகழ்ச்சியில் சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      சிவகிரி:

      பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரி பஸ் நிலையம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு யூனியன் சேர்மனும், வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

      தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      இதில் மருதுபாண்டியன், விக்னேஷ் ராஜா, துரைராஜ், ரத்தினராஜ், முருகன், முத்துலட்சுமி, வீரமணி, புல்லட் கணேசன், கார்த்திக், பிச்சை மணி, ராம்குமார், பரமசிவம், ஆனந்தா ஆறுமுகம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

      • விலையில்லா சைக்கிள்களை, மாணவ- மாணவிகளுக்கு சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.
      • நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      சிவகிரி:

      வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை, மாணவ- மாணவிகளுக்கு சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், வாசு தெற்கு ஒன்றிய செயலாளர் பூசைப்பாண்டியன், பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்ரமணியன், ம.தி.மு.க. வாசு. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், பேரூர் செயலாளர் பாசறை கணேசன், மாவட்ட பிரதிநிதி ராமர், தி.மு.க. நிர்வாகிகள் முத்தையா, கட்டபொம்மன், சுந்தர், செல்லத்துரை, ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளார் விக்கி, பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

      ×