என் மலர்
- ஜெயின் கோசலாவில் மாடுகளை ஒப்படைக்கப்படும்
- மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் தெரிவித்தனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம், 14-வது வார்டுக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் மெயின் ரோடு மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றி திரிகிறது.
செல்பவர்கள், வாகன ஓட்டிகளை மாடுகள் முட்டி விபத்து ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின்படி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு சாலைகளில் சுற்றித்திரிந்த 5 மாடுகள் பிடிக்கப்பட்டது.
பிடிக்கப்பட்ட மாட்டின் அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மாநகராட்சிக்கு அபராதமாக கட்ட வேண்டும், பணம் கட்ட தவறினால் கோட்டை சுற்று சாலையில் உள்ள ஜெயின் கோசலாவில் மாடுகளை ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
- மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
- சான்றிதழ் வழங்கப்பட்டது
வேலூர்:
சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் அடிமுறை பயிற்சி முகாம் இன்று நடந்தது.
முகாமிற்கு அருங்காட்சி யக காப்பாட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 83 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவிகளுக்கு போதி தர்மா கலைப் பள்ளி சார்பில் பயிற்சி சிபிராஜ் அடிமுறை பயிற்சியான சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தார். பிடிவர்மம் குறித்து சித்த வைத்தியர் கோபி பயிற்சி அளித்தார்.
இதையடுத்து ஓவிய பயிற்சியாளர் ஓவியம் வரைவது குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சியில் கலந்து கொண்ட 83 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- நடனம் ஆடும்போது ஒருவரை ஒருவர் முட்டியதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர் அருகே உள்ள சின்ன தெள்ளூர் கிராமத்தில் நேற்று கெங்கை அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. நேற்று இரவு சாமி ஊர்வலம் சென்றது.
அப்போது அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 35) ஊர்வலத்தில் நடனம் ஆடினார்.
அப்போது 5 பேர் கொண்ட கும்பல் நடனம் ஆடினர். இதல் நடனம் ஆடும்போது ஒருவரை ஒருவர் முட்டி உள்ளனர். இதனால் அருண்குமாருக்கும் கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த 5 பேர் கொண்ட கும்பல் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து அருண்குமாரின் கழுத்தில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அருண்குமாரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை பீர் பாட்டிலால் குத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.