என் மலர்
ஆட்டோமொபைல்
- உலகம் முழுக்க மொத்தத்தில் 1974 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.
- இந்த மாடலில் 3.7 லிட்டர் டுவின் டர்போ ஃபிலாட் 6 பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.
போர்ஷே நிறுவனத்தின் முற்றிலும் புதிய 911 டர்போ 50 ஆண்டுகளை கொண்டாடும் மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலின் இந்திய விற்பனை துவங்கியுள்ளது. இந்திய சந்தையில் புதிய போர்ஷே 911 (50 Years) மாடலின் விலை ரூ. 4.05 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடல் போர்ஷேவின் முதன்முதல் 911 டர்போ மாடல் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் உலகம் முழுக்க மொத்தத்தில் 1974 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.
இந்திய சந்தையில் போர்ஷே 911 டர்போ எஸ் மாடலின் விலையை விட புதிய மாடல் விலை ரூ. 7 லட்சம் வரை அதிகம் ஆகும். இதே போன்று 911 கரெரா மாடலை விட ரூ. 2 கோடியும், கரெரா 4 GTS மாடலை விட ரூ. 1.26 கோடியும் அதிகம் ஆகும். முந்தய 911 டர்போ எஸ் மாடலை போன்றே புதிய 911 டர்போ (போ 911 ) மாடலிலும் 3.7 லிட்டர் டுவின் டர்போ ஃபிலாட் 6 பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.
இந்த யூனிட் 650 ஹெச்பி பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.7 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 330 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
- கரென்ஸ் EV மாடல் அதன் ஐசி எஞ்சின் வெர்ஷனை விட வித்தியாசமாக இருக்கும்.
- கியா நிறுவனம் தனது EV9 பிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
கியா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் கரென்ஸ் எம்பிவி மாடலை அடுத்த ஆண்டு அப்டேட் செய்ய இருக்கிறது. காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய கரென்ஸ் மாடலுடன், கியா இந்தியா நிறுவனம் கரென்ஸ் EV மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே கியா கரென்ஸ் EV மாடல் டெஸ்டிங் செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதில் கரென்ஸ் EV மாடல் அதன் ஐசி எஞ்சின் வெர்ஷனை விட வித்தியாசமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
கரென்ஸ் EV மாடலின் பிளாட்பார்ம், பாடி மற்றும் பெரும்பாலான இன்டீரியர் அதன் ஸ்டான்டர்டு மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும். எனினும், ஸ்டைலிங் அடிப்படையில் காரின் முன்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடல் வெளியீட்டுக்கு முன் கியா நிறுவனம் தனது EV9 பிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி கியா நிறுவனம் தனது EV9 ஃபிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்கிறது. புதிய கரென்ஸ் EV மாடலின் பவர்டிரெயின் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கிரெட்டா EV மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.
- ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்பட்டுள்ளது.
- தென்னிந்தியாவில் 50 லட்சம் ஹோண்டா ஆக்டிவாவை விற்பனை செய்ய 16 ஆண்டுகள் தேவைப்பட்டது.
தென்னிந்தியாவில் 1 கோடி ஆக்டிவா ஸ்கூட்டரை விற்பனை செய்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் போன்ற யூனியன் பிரதேசங்களும் அடங்கும்.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் 50 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த இலக்கை எட்ட அந்நிறுவனத்திற்கு 16 ஆண்டுகள் தேவைப்பட்டது.
அதே சமயம் அடுத்த 50 லட்சம் ஸ்கூட்டியை விற்க 7 ஆண்டுகள் மட்டுமே அந்நிறுவனத்திற்கு தேவைபட்டுள்ளது.
- இந்த புல்லட் பைக்கின் விலை ரூ 1.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த பைக்கில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 பைக்கின் பெட்டாலியன் பிளாக் எடிசன் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
பழைய புல்லட் பைக்கின் ரெட்ரோ லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புல்லட் பைக்கின் விலை ரூ 1.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.2 எச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் முன்பக்க பிரேக்கிற்கு 300 மிமீ டிஸ்க்கும் பின்பக்க பிரேக்கிற்கு 153மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் கார் வாங்குபவர்களின் சுமார் 30 சதவீதம் பேர் பெண்கள்
- இந்தியாவில் 83% பேர் பெட்ரோல் கார்களையே வாங்க விரும்புகின்றனர்.
இந்தியாவில் கார் வாங்குபவர்களில் சுமார் 67 சதவீதம் பேர் முதல் முறையாக கார் வாங்குபவர்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சில்லறை விற்பனை தளமான ஸ்பின்னி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவில் முதன்முறையாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதை காட்டுகிறது.
அதே போல் இந்தியாவில் கார் வாங்குபவர்களின் சுமார் 30 சதவீதம் பேர் பெண்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கார் வாங்குபவர்களின் 83% பேர் பெட்ரோல் கார்களையே வாங்க விரும்புகின்றனர். 12% பேர் டீசல் கார்களையும் 5% பேர் சிஎன்ஜி கார்களையும் வாங்க விரும்புகின்றனர் என்றும் சிவப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிறம் கொண்ட கார்களையே அதிகமானோர் வாங்க விரும்புகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய பிஎம்டபிள்யூ கார் மொத்தத்தில் 500 யூனிட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
- இந்த காரில் 4.4 லிட்டர் வி8 டுவின் டர்போ ஹைப்ரிட் எஞ்சின் வழங்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யுவி-இன் புது வெர்ஷனை அறிமுகம் செய்தது. புது வெர்ஷன் XM லேபெல் என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 3 கோடியே 15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிஎம்டபிள்யூ XM ஸ்டாண்டர்டு வெர்ஷன் விலையை விட ரூ. 55 லட்சம் அதிகம் ஆகும்.
புதிய பிஎம்டபிள்யூ XM லேபெல் எடிஷன் மாடல் உலகளவில் 500 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் இந்தியாவில் ஒரே யூனிட் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய காரின் கிட்னி கிரில், விண்டோ லைன், அலாய் வீல்கள், ரியர் டிஃப்யூசர்-ஐ சுற்றி சிவப்பு நிற ஹைலைட் செய்யப்பட்டு உள்ளது.
வெளிப்புறம் பிஎம்டபிள்யூ இன்டிவிடியூவல் ஃபுரொஸென் கார்பன் பிளாக் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் 22 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. உள்புறத்தில் 14.9 இன்ச் அளவில் கர்வ்டு டிஸ்ப்ளே, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, மல்டி ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஆம்பியன்ட் லைட்டிங், அடாப்டிவ் M சஸ்பென்ஷன்கள், பொயெர்ஸ் அன்ட் வின்கின்ஸ் 20-ஸ்பீக்கர் கொண்ட மியூசிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
இதுவவரை பிஎம்டபிள்யூ உற்பத்தி செய்ததிலேயே மிகவும் சக்திவாய்ந்த கார் மாடல் என்ற பெருமையை புதிய பிஎம்டபிள்யூ XM லேபெல் பெற்றிருக்கிறது. இந்த காரில் 4.4 லிட்டர் வி8 டுவின் டர்போ ஹைப்ரிட் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த யூனிட் 748 ஹெச்பி பவர், 1000 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.8 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- புதிய டாடா பன்ச் மாடல் பத்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- இந்த கார் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் எஞ்சின் கொண்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2024 பன்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2024 டாடா பன்ச் விலை ரூ. 6.12 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் சிட்ரோயன் நிறுவனத்தின் சி3, ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
புதிய பன்ச் மாடலின் சென்டர் கன்சோலில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட், 10.25 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜர், ரியர் ஏசி வெண்ட்கள், முன்புறம் ஆர்ம்-ரெஸ்ட் வழங்கப்படுகிறது.
2024 டாடா பன்ச் மாடல் பத்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் அதன் முந்தைய வெர்ஷன் விற்பனை செய்யப்பட்டு வந்த நிறங்களிலேயே கிடைக்கிறது. இந்த காரிலும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.
இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதே கார் சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கிறது. பவர்டிரெயினை பொருத்தவரையில் இந்த கார் மொத்தம் ஏழு வெர்ஷன்களில் கிடைக்கிறது.
- மெக்கானிக்கல் அடிப்படையில் புதிய மாற்றங்களை பெற்றுள்ளது.
- இந்த பைக்கில் 312.2சிசி லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிளின் 2024 எடிஷனை அறிமுகம் செய்தது. புதிய அபாச்சி RR 310 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் அடிப்படையில் புதிய மாற்றங்களை பெற்றுள்ளது.
அதன்படி இந்த பைக்கின் ஒட்டுமொத்த டிசைன் அப்படியே உள்ளது. இத்துடன் புதிய அபாச்சி ஸ்டிக்கர்கள் தோற்றத்தை வித்தியாசப்படுத்துகின்றன. இந்த பைக்கின் ரேசிங் ரெட் நிறத்தின் விலை ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் பைக்கின் குயிக்ஷிப்டர் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 92 ஆயிரமும், பாம்பர் கிரே நிறத்திற்கான விலை ரூ. 2 லட்சத்து 97 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த பைக்கின் விங்லெட்கள் 3 கிலோ வரை டவுன்ஃபோர்ஸ் உறுவாக்கும் திறன் கொண்டுள்ளன. இத்துடன் டிரான்ஸ்பேரன்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய அபாச்சி பைக்கில் 312.2சிசி லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் எல்இடி லைட்கள், டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் உள்ளது.
- மோட்டோ ஜிபி அணியின் மான்ஸ்டர் எனர்ஜி நிறங்களை கொண்டிருக்கிறது.
- புதிய R15M மாடலில் 155சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் உள்ளது.
யமஹா நிறுவனத்தின் 2024 R15M மோட்டார்சைக்கிள் புது வடிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 2024 யமஹா R15M மோட்டோ ஜிபி எடிஷன் பெயரில் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக் யமஹாவின் மோட்டோ ஜிபி அணியின் மான்ஸ்டர் எனர்ஜி நிறங்களை கொண்டிருக்கிறது.
இதில் உள்ள பெயிண்ட் YZR-M1 MotoGP மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதன் பிரதான நிறம் கருப்பாகவும், ஆங்காங்கே புளூ மற்றும் சில்வர் நிற அக்சென்ட்கள் மற்றும் மான்ஸ்டர் எனர்ஜி லோகோ ஃபேரிங்கில் இடம்பெற்று இருக்கிறது. மோட்டோஜிபி ரசிகர்கள் தங்களது பைக்கில் ஃபேக்டரி ரேசிங் அணி நிறம் இருப்பதை நிச்சயம் விரும்புவர்.
யமஹாவின் புதிய R15 மாடலில் 155சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 18 ஹெச்பி பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த பைக் டிஎப்டி டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் முற்றிலும் புதிய 2024 யமஹா R15M மான்ஸ்டர் எனர்ஜி எடிஷன் விலை ரூ. 1 லட்சத்து 98 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- தற்போது 600,000 யூனிட் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம்.
- கடந்த ஆண்டு, நாங்கள் விற்பனை செய்த ஒவ்வொரு நான்காவது வாகனமும் சிஎன்ஜி மாடலாக இருந்தது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் 33% சிஎன்ஜி மாடல்கள் என அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தற்போது 13 சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் சிஎன்ஜி மாடலும் அடங்கும்.
மாருதியின் சிஎன்ஜி போர்ட்ஃபோலியோவில் ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ, ஈகோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா, எர்டிகா, பலேனோ, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா மற்றும் எக்ஸ்எல்6 போன்ற மாடல்கள் உள்ளன.
மாருதி சுசுகியின் மூத்த செயல் அதிகாரி பார்த்தோ பானர்ஜி, சிஎன்ஜி கார்கள் இப்போது எங்களின் ஒட்டுமொத்த விற்பனையில் 33% ஆகும். அதாவது நாங்கள் விற்கும் ஒவ்வொரு மூன்றாவது கார் சிஎன்ஜி மாடல் என்று தெரிவித்தார்.
மாருதி தனது சிஎன்ஜி கார் விற்பனையை ஆண்டுக்கு ஆண்டு 25%-க்கும் அதிகமாக அதிகரித்து FY25 இல் 600,000 யூனிட்களாக உயர்த்த இலக்கு வைத்துள்ளது.
"கடந்த ஆண்டு, நாங்கள் விற்பனை செய்த ஒவ்வொரு நான்காவது வாகனமும் சிஎன்ஜி மாடலாக இருந்தது. FY24 இல் நாங்கள் 477,000 யூனிட் சிஎன்ஜி வாகனங்களை விற்றோம். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் FY25 வரை 221,000 யூனிட்களை விற்றோம். தற்போது 600,000 யூனிட் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம்.
மாருதியின் ஒட்டுமொத்த கார் விற்பனையில் அதிகம் விற்பனையாகும் சிஎன்ஜி மாடல்களில் எர்டிகா, டிசையர், வேகன்ஆர் மற்றும் ஈகோ ஆகியவை அடங்கும். எர்டிகா சிஎன்ஜி 63%, டிசையர் 57%, வேகன்ஆர் 47% மற்றும் ஈகோ 48% யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.
- கார்னிவல் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும்.
- இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
கியா இந்தியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய கார்னிவல் மாடல் கார் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், புதிய கார்னிவல் மாடலுக்கான முன்பதிவு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய கியா கார்னிவல் மாடலுக்கான முன்பதிவுகள் வருகிற 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி துவங்குகிறது.
ஏற்கனவே புதிய கியா கார்னிவல் மாடலுக்கான முன்பதிவுகள் விற்பனை மையங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது கியா இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்கவுள்ளன. புதிய கார்னிவல் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கியா கார்னிவல் மாடல் இரண்டடுக்கு சன்ரூஃப், இருக்கைகளை எலெக்ட்ரிக் முறையில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி, வென்டிலேஷன் மற்றும் கால் வைக்கும் பகுதி, பவர் ஸ்லைடிங் கதவுகள், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், இரட்டை கர்வ்டு டிஸ்ப்ளேக்கள் மற்றும் ADAS சூட் வழங்கப்படுகிறது.
இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. முதற்கட்டமாக இந்த கார் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளது. அதன்பிறகு, இந்த காரின் பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது.
புதிய கியா கார்னிவல் மாடலில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் வழங்கப்படும் என்று தெரிகிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் புதிய கியா கார்னிவல் மாடலின் விலை ரூ. 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. கியா கார்னிவல் மாடலை தொடர்ந்து கியா EV9 மாடலின் விலையும் அறிவிக்கப்பட உள்ளது.
- அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்படுகிறது.
- புது மோட்டார்சைக்கிள் சிறு மாற்றங்களுடன் வெளியாகும் என்று தெரிகிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அப்டேட் செய்கிறது. புதுப்பிக்கப்பட்ட அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிள் அடுத்த வாரம் (செப்டம்பர் 16) இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.
2018 ஆம் ஆண்டு முதல் இந்த மோட்டார்சைக்கிள் பெருமளவு அப்டேட் செய்யப்படாமல் உள்ளது. இதுதவிர டிவிஎஸ் நிறுவனத்தின் ஃபேர்டு மோட்டார்சைக்கிள் மாடல் சமீபத்தில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. புது மோட்டார்சைக்கிள் பெருமளவு மாற்றங்கள் இன்றி வெளியாகும் என்று தெரிகிறது.
தற்போதைய அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிள் ரூ. 2 லட்சத்து 72 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புது மாடல் சிறு அப்டேட்களுடன் விற்பனைக்கு வரும் போது அதன் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.