search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    தீப்பிடித்து எரிந்த டாடா நெக்சான் EV - என்ன காரணம் தெரியுமா?
    X

    தீப்பிடித்து எரிந்த டாடா நெக்சான் EV - என்ன காரணம் தெரியுமா?

    • இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் டாடா நெக்சான் EV.
    • சமீபத்தில் இந்த மாடல் தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    மும்பையில் சில தினங்களுக்கு ஏற்பட்ட எலெக்ட்ரிக் வாகன விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மும்பையில் டாடா நெக்சான் EV மாடல் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்த உத்தரவிடும் முன்பே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    டாடா நெக்சான் EV மாடல் தீப்பிடித்து எரியும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பங்குதாரர்கள் வலியுறுத்தினர்.

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில், நெக்சான் EV தீப்பிடித்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய தீ விபத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, இந்திய அறிவியல் கழகம் மற்றும் கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சம்பவம் பற்றி முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நிறைவு பெற்றதும், தீ விபத்துக்கான காரணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். எங்களின் வாகனங்கள் மற்றும் அவற்றை பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்," என தெரிவித்து இருக்கிறது.

    Next Story
    ×