என் மலர்
கார்
நெக்சான் EV ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நெக்சான் EV ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் பிரைம் மற்றும் மேக்ஸ் என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV ஜெட் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது ஜெட் எடிஷன் மாடல் ஆகும். புதிய நெக்சான் EV ஜெட் எடிஷன் விலை ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஜெட் எடிஷன் நெக்சான் EV பிரைம் மற்றும் மேக்ஸ் என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது.
புதிய நெக்சான் EV ஜெட் எடிஷன் மாடலின் வெளிப்புறம் டூயல் டோன் ஷேட் மற்றும் புதிய இண்டீரியர் வழங்கப்பட்டு இருக்கிறது. நெக்சான் EV ஜெட் எடிஷன் டாப் எண்ட் XZ+ வேரியண்டை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்டாண்டர்டு எடிஷனை விட ரூ. 20 ஆயிரம் விலை அதிகம் ஆகும். ஜெட் எடிஷன் மாடலில் ஸ்டார்லைட் எக்ஸ்டீரியர் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. இதன் ரூஃப் காண்டிராஸ்ட் பிரீமியம் சில்வர் நிறம் கொண்டிருக்கிறது.
இத்துடன் 16 இன்ச் அலாய் வீல்கள், ORVMகள், முன்புற கிரில், விண்டோ லைன் மற்றும் ரூப் லைன் உள்ளிட்டவைகளில் கிளாஸ் பிளாக் இன்சர்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் உள்புறம் டேஷ்போர்டு மற்றும் டோர் பேட்களில் பிரான்ஸ் நிறம் பூசப்பட்டு இருக்கிறது. லெதர் இருக்கைகளில் ஆயிஸ்டர் வைட் நிறம் பூசப்பட்டுள்ளது. இத்துடன் முன்புற இருக்கையின் ஹெட்ரெஸ்ட்களில் "#Jet" என ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது.
நெக்சான் EV ஜெட் எடிஷன் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் நெக்சான் EV பிரைம் ஜெட் எடிஷனில் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 127 ஹெச்பி பவர், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. நெக்சான் EV மேக்ஸ் ஜெட் எடிஷன் 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டிருக்கிறது. இது 141 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
விலை விவரங்கள்:
டாடா நெக்சான் EV பிரைம் XZ+ லக்ஸ் ஜெட் எடிஷன் ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம்
டாடா நெக்சான் EV மேக்ஸ் XZ+ லக்ஸ் ஜெட் எடிஷன் ரூ. 19 லட்சத்து 54 ஆயிரம்
டாடா நெக்சான் EV மேக்ஸ் XZ+ லக்ஸ் ஜெட் எடிஷன் (7.2 கிலோவாட் பாஸ்ட் ஏசி சார்ஜர்) ரூ. 20 லட்சத்து 05 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.