என் மலர்
இது புதுசு
லேண்ட் ரோவர் டிபெண்டர் லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகம்
- லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிபெண்டர் லிமிடெட் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- இந்த கார் இரண்டு மற்றும் நான்கு கதவுகள் கொண்ட வெர்ஷன்களில் கிடைக்கிறது.
லேண்ட் ரோவர் நிறுவனம் டிபெண்டர் 75th லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. 1948 முதல் விற்பனை செய்யப்பட்டு வருவதை கொண்டாடும் வகையில் இந்த லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டிபெண்டர் லிமிடெட் எடிஷன் மாடல் இரு கதவுகள் கொண்ட 90 மற்றும் நான்கு கதவுகள் கொண்ட 110 ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய லேண்ட் ரோவர் டிபெண்டர் 90 மாடலின் விலை 85 ஆயிரத்து 995 யூரோக்கள் என்றும் 110 மாடல் விலை 89 ஆயிரத்து 995 யூரோக்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டிபெண்டர் லிமிடெட் எடிஷன் காரின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. சந்தையில் விற்பனையாகும் சிறந்த ஆப்ரோடர் மாடல்களில் ஒன்றாக டிபெண்டர் விளங்கி வருகிறது.
லேண்ட் ரோவர் டிபெண்டர் லிமிடெட் எடிஷன் மாடல் HSE வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், மூன்று ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், மெமரி சீட்கள், 11.4 இன்ச் பிவி ப்ரோ இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர லேண்ட் ரோவர் டிபெண்டர் லிமிடெட் எடிஷன் மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் என்ஜின் ஆப்ஷ்கள் லேண்ட் ரோவர் டிபெண்டர் ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.