search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • லபுசேன் பேட்டிங் செய்தபோது ஸ்டூவர்ட் பிராட் பெய்ல்ஸை மாற்றி வைத்தார்
    • அதன்பின் லபுசேன் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 295 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

    2-வது விக்கெட்டுக்கு மார்னஸ் லபுசேன் களம் இறங்கினார். 43-வது ஓவரை மார்க் வுட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை வீசி முடித்த நிலையில், ஸ்டூவர்ட் பிராட் ஸ்டம்ப் அருகில் சென்று இரண்டு பெய்ல்ஸை எடுத்து சற்று பார்த்த பின், இரண்டையும் மாற்றி வைத்தார். இதை பார்த்த லபுஸ்சேன் புன்னகை உதிர்த்து, அடுத்த பந்தை சந்திக்க தயாரானார்.

    என்ன ஆச்சர்யம்... அடுத்த பந்தில் லபுஸ்சேன் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


    அதற்குபின், ஸ்மித் 42 ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு ரன்களுக்கு ஓடியபோது, பேர்ஸ்டோவ் பந்தை பிடித்து ஸ்டம்பை தாக்கினார். அப்போது ஸ்மித் கிரீஸ்க்கு சற்று வெளியே நின்றிருந்தார். ஆனால், பெய்ல் ஸ்டம்பில் இருந்து விலகாமல் இருந்ததால் ரன்அவுட்டில் இருந்து தப்பினார்.

    இதனால் அவுட்டில் இருந்து தப்பிய ஸ்மித், 71 ரன்கள் சேர்த்தார். இது அவுட்டா? இல்லையா? என டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. ஸ்மித் அவுட்டில் இருந்து தப்பியதால் ஆஸ்திரேலியா 295 ரன்கள் சேர்த்து, 12 ரன்கள் முன்னிலை பெற்றது.

    ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 4-வது போட்டி மழையினால் டிரா ஆனது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் இங்கிலாந்து தொடரை சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து அணியில் 1893-ல் முதல் ஏழு பேட்ஸ்மேன்களில் 6 பேர் அரைசதம்
    • 500 ரன்களுக்கு மேல் எடுத்து சராசரி 5-க்கு மேல் என்பது 4-வது முறையாகும்

    இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 592 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முதல் ஏழு பேட்ஸ்மேன்களில் ஆறு பேர் 50 ரன்களை கடந்தனர்.

    இதன்மூலம் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் முதல் ஏழு பேரில் ஆறுபேர் அரைசதம் தொட்ட நிகழ்வு 2-வது முறையாக நிகழ்ந்துள்ளது. இதற்கு முன் 1893-ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் முதல் ஏழு பேரில் ஆறு பேர் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். தற்போது 130 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

    500 ரன்களுக்கு மேல் அடித்து 5-க்கு மேல் சராசரி வைத்திருப்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் இது 4-வது முறையாகும்.

    மான்செஸ்டர் டெஸ்டில் இங்கிலாந்து 107.4 ஓவரில் 592 ரன்கள் குவித்தது. சராசரி 5.49 ஆகும்.

    இதற்கு முன்,

    ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எஆஷஸ் 4-வது டெஸ்ட்டில் 130 வருட சாதனையை சமன் செய்த இங்கிலாந்து அணிதிராக 2022-ல் இங்கிலாந்து 107 ஓவரில் 657 ரன்கள் குவித்தது. சராசரி 6.50 ஆகும்.

    அயர்லாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து 82.4 ஓவரில் 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அப்போது ரன்ரேட் 6.33 ஆகும்

    2001-ம் ஆண்டு கொழும்பில் வங்காளதேசத்திற்கு எதிராக இலங்கை 103.3 ஓவரில் 555 ரன்கள் குவித்தது. சராசரி 5.36 ஆகும்.

    • மெட்வெதேவ் முதல் முறையாக விம்பிள்டன் காலிறுதிக்கு முன்னேற்றம்
    • ஜோகோவிச் 3-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்

    விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீரரான சிட்சிபாஸ் அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யுபேங்க்ஸ்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் தரம் நிலை பெறாத கிறிஸ்டோபர் 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிட்சிபாஸும் ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் 2-செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் கிறிஸ்டோபர் 7(7)-6(4) என 2-வது செட்டை கைப்பற்றினார.

    3-வது செட்டை சிட்சிபாஸ் 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 4-வது செட்டை கிறிஸ்டோபர் 6-4 எனக்கைப்பற்ற போட்டி 2-2 என சமநிலை பெற்றது. வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டிலும் கிறிஸ்டோபர் சிறப்பாக விளையாடி 6-4 எனக் கைப்பற்றினார். இதனால் சிட்சிபாஸ் 2-3 என தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் 7(8)-6(6),7(8)-6(6), 5-7, 6-4 என ஹுபர்ட் ஹர்காஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    முதல் நிலை வீரர் அல்காரஸ் கார்பியா 3-6, 6-3, 6-3, 6-3 என பெரேட்டினியை வீழ்த்தினார். 21-ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவை 6-ம் நிலை வீரர் ஹோல்ஜர் ருனே வீழ்த்தினார். 3-ம் நிலை வீரர் மெட்வெதேவ் 6-4, 6-2 என முன்னிலையில் இருந்தபோது, எதிர் வீரர் காயத்தால் வெளியேறியதால், மெட்வெதேவ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • முதல் இரண்டு போட்டிகளிலும இங்கிலாந்து வெற்றி
    • 3-வது போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றது

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னும், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 237 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 251 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்னை எடுத்து வெற்றி பெற்றது. முதல் டெஸ்டில் 2 விக்கெட்டிலும், 2-வது டெஸ்டில் 43 ரன்னிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது. 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி தொடக்கம்தான். இனிவரும் டெஸ்டுகளிலும் வெற்றி தொடரும். முதல் இரண்டு போட்டியில் தோற்றப் பிறகு 3-வது டெஸ்ட் முக்கியமானது. இதனால் நெருக்கடியில் பெற்ற இந்த வெற்றி சிறப்பானது. எங்கள் அணி வீரர்களின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் வருகிற 19-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

    • 2-வது நாள் ஆட்டத்தில் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
    • 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

    ஆஷஸ் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 19 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து, 2-வது நாள் ஆட்டத்தில் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    பென் ஸ்டோக்ஸ் மட்டுமே நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 26 ரன்கள் முன்னிலையுடன் 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதனால், 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

    மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்தது.

    இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 224 ரன்கள் தேவைப்படுகிறது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், இந்த இலக்கை அடைந்து இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    • விம்பிள்டன் டென்னிஸ் நடைபெறும் இடத்தில் தியானத்திற்கான அறை உள்ளது
    • தியான அறைக்கு ரசிகர்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என நிர்வாகம் வேண்டுகோள்

    இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் நடைபெறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விம்பிள்டன் டென்னிஸ் தொடரும் ஒன்று. இந்த போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக உலக ரசிகர்கள், தலைவர்கள் வருவதுண்டு.

    விம்பிள்டன் டென்னிஸ் பல மைதானங்களில் (கோர்ட் என அழைக்கப்படும்) நடைபெறும். கோர்ட் அருகே ரசிகர்கள் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்ய அறைகள் உள்ளன.

    கடந்த வருடம் 12-வது கோர்ட் அருகே உள்ள அறையில் ஒரு ஜோடி உடலுறவு கொண்டதாகவும், ரசிகர்கள் முகம் சுழித்ததாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து விம்பிள்டன் நிர்வாகத்திடம் புகாரும் அளிக்கப்பட்டது.

    பிரார்த்தனை மற்றும் தியானத்திற்கான இடத்தில் இப்படி செய்யலாமா?, அந்த இடத்தை ரசிகர்கள் பிரார்த்தனை மற்றும் தியானத்திற்காக பயன்படுத்த வேண்டும். பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் வாய்ப்பாக அந்த இடம் உள்ளது. அதை சரியான வழியில் பயன்படுத்துவதை எதிர் பார்க்கிறோம். அந்த இடத்திற்கான மதிப்பை ரசிகர்கள் வழங்க வேண்டும்'' என இங்கிலாந்து டென்னிஸ் கிளப்பு நிர்வாக தலைவர் சாலி பால்டன் தெரிவித்துள்ளார்.

    ''ஒரு ஜோடி அறையில் இருந்து மிகப்பெரிய புன்னகையுடன் வந்ததாகவும், பெண் கோடைக்கால ஆடை அணிந்திருந்ததாகவும், உள்ளே வேறு என்ன நடந்திருக்கும்'' என ரசிகர் ஒருவர் புகார் கூறியதாகவும், மற்றொரு ரசிகர் ''நெருக்கமாக இருக்கும்போது வெளிப்படும் சத்தம்'' கேட்டதாகவும் புகார் அளித்ததாக சாலி பால்டன் தெரிவித்துள்ளார்.

    அந்த அறையில் சேர், மடிக்கக் கூடிய மேஜை, சார்ஜ் செய்யும் வசதி ஆகியவை உள்ளன.

    • உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29% சரிவு ஏற்பட்டுள்ளது
    • உக்ரைனுக்கு உதவ இங்கிலாந்தில் சர்வதேச உக்ரைன் மீட்பு மாநாடு 2023

    ரஷியப் படைகளுக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு அதன் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உதவி செய்யப்போவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்திருக்கிறார்.

    ரஷியாவுடனான போரினால் பொருளாதார ரீதியாக உருக்குலைந்திருக்கும் உக்ரைனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடும் நோக்கில், 61 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களும், உலகளாவிய முதலீட்டாளர்களும் லண்டனில் இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். உக்ரைன் எதிர்பார்க்கும் உதவிகளை திட்டமிடுவதற்காக "சர்வதேச உக்ரைன் மீட்பு மாநாடு 2023" என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

    ரஷிய-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29% சரிவு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் தனது நிதியாதாரத்தை வலுப்படுத்த தனியார்துறை முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் உதவியை எதிர்பார்க்கிறது. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட முக்கிய பொது சேவைகளை மேம்படுத்த உக்ரைன் உலக வங்கி கடன்களை பெறுவதற்கு இங்கிலாந்தின் ஆதரவு வழிவகுக்கும்.

    இதுகுறித்து ரிஷி சுனக், "ஒரு துடிப்பான, ஆற்றல்மிக்க, ஆக்கப்பூர்வமான மற்றும் அடங்கிப்போக மறுக்கும் நாடு உக்ரைன். எனவே, எங்கள் நட்பு நாடுகளுடன் சேர்ந்து உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் எதிர்தாக்குதலுக்கான எங்கள் ஆதரவை அளித்து இந்த போரில் அவர்கள் வெற்றிபெறும் வரை உக்ரைனுடன் நாங்கள் நிற்போம்" என கூறியுள்ளார்.

    மொத்த ஆண்டு வருமானம் $1.6 டிரில்லியனுக்கும் அதிகமாக உள்ள 38 நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், உக்ரைனின் மீட்பு மற்றும் புனரமைப்புக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. விர்ஜின், சனோஃபி, பிலிப்ஸ், ஹூண்டாய் மற்றும் சிட்டி ஆகிய பல பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தகம், முதலீடு, மற்றும் நிபுணத்துவப்பகிர்வு ஆகியவற்றை ஊக்குவிக்க "உக்ரைன் வணிக உடன்படிக்கை" எனும் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

    மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் புனரமைப்புத் திட்டங்களுக்கு உதவ இங்கிலாந்து ஆரம்பகட்டத்தில் 20 மில்லியன் பவுண்டு, பிறகு தனித்தனியாக 250 மில்லியன் பவுண்டு அளவிற்கு மேம்பாட்டு நிதியையும் வழங்கும். அதில் பாதிக்குமேல், ஐக்கிய நாடுகள் மற்றும் செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளின் மூலம் மனிதாபிமான நோக்கில் முன்னணியில் நின்று சேவையாற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க பயன்படும்.

    ஒட்டுமொத்தமாக, ரஷிய-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு இங்கிலாந்து உக்ரைனுக்கு 347 மில்லியன் பவுண்டு உதவி செய்திருக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனா தொற்று காலத்தில் விருந்தில் கலந்த கொண்டார்
    • சிறப்புக்குழு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது

    இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன். கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது நாடு தழுவிய ஊரடங்கு இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டது. அப்போது இவர் தனது அலுவலகத்தில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னும் அந்த பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.

    அவர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடத்த சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒருவேளை அவர் தவறாக பயன்படுத்தினார் என இந்தக்குழு அறிக்கை தாக்கல் செய்தால், நாடாளுமன்றத்தில் இருந்து 10 நாட்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்.

    இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெற்ற இருக்கிறது.

    ''நாடாளுமன்றத்தில் விட்டு வெளியேறுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதுவும் தற்போதை நிலையில்... சிலருடைய குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரம் இல்லாமலும், குறைந்தபட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்ளின் ஒப்புதல் கூட இல்லாமலும் சிலரால் நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன்.

    விசாரணைக்குழுவிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் என்ன வியப்பு என்றால், என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தனர் என்பது தெரியவந்தது'' என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் அவரது 2-வது மகனும், இளவரசருமான ஹாரிக்கு 10-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    • இளவரசர் ஹாரி, தந்தையின் முடிசூட்டு விழாவில் மட்டும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகனும், பட்டத்துக்கு இளவரசருமான சார்லஸ் (வயது 73) மன்னராக அறிவிக்கப்பட்டார்.

    அவர் மன்னராக முடிசூட்டும் விழா அடுத்த மாதம் 6-ந்தேதி லண்டனில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவ்விழாவில் அரசு குடும்பத்தினர் உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் அவரது 2-வது மகனும், இளவரசருமான ஹாரிக்கு 10-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவர் அரச குடும்பத்தினரில் 10-வது வரிசைக்கு பின்னால் அமர்ந்திருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தந்தை சார்லஸ், சகோதரரான இளவரசர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரச குடும்பத்தில் இருந்து விலகிய ஹாரி, தனது மனைவி மேகன், குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முடிசூட்டு விழா 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இளவரசர் ஹாரி, தந்தையின் முடிசூட்டு விழாவில் மட்டும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு சென்றார்.
    • தடை செய்யப்பட்ட பகுதிக்கு ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை அழைத்து சென்றுள்ளார்.

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு சென்றார். மேலும் தனது வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றார். அந்த பூங்கா பகுதியில் நாயை அழைத்து வர தடை உள்ளது. ஆனால் அதை மீறி ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை பூங்காவுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், விதியை நினைவுப்படுத்தினார். இதையடுத்து நாய் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ரிஷி சுனக் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    ஏற்கனவே அவர் கொரோனா கட்டுப்பாட்டை மீறி விருந்தில் பங்கேற்றது, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது ஆகிய சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள விண்வெளி தளத்தில் ராக்கெட் வைக்கப்பட்ட விமானம் புறப்பட்டது.
    • இங்கிலாந்தின் ராக்கெட் ஏவுதல் திட்டம் தோல்வியில் முடிந்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து முதல் முதலாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கி அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது.

    விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் போயிங் 747 விமானத்தில் 70 அடி உயர லாஞ்சர் ஒன் ராக்கெட்டை பொருத்தி அதில் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்தது. அதன்பின் போயிங் விமானத்தில் 9 செயற்கை கோள்கள் பொருத்தப்பட்ட ராக்கெட் இணைக்கப்பட்டது.

    பின்னர் இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள விண்வெளி தளத்தில் ராக்கெட் வைக்கப்பட்ட விமானம் புறப்பட்டது. பின்னர் திட்டமிட்டபடி அயர்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் ரெுங்கடலில் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.

    ஆனால் ராக்கெட் 9 செயற்கை கோள்களை சுற்று வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தவில்லை. இதனால் இங்கிலாந்தின் ராக்கெட் ஏவுதல் திட்டம் தோல்வியில் முடிந்தது.

    இது தொடர்பாக விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் கூறும்போது, "செயற்கை கோள்கள் சுற்றுப் பாதையை அடைவது பற்றிய எங்களின் முந்தைய டுவிட்டை அகற்றுகிறோம். எங்களால் முடிந்தால் கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்வோம்" என்று தெரிவித்தது.

    இங்கிலாந்து மண்ணில் முதல் முதலாக விண்ணில் ஏவிய ராக்கெட் தோல்வியில் முடிந்ததால் விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்தனர். இப்பணி வெற்றிகரமாக முடிந்திருந்தால் பூமியின் சுற்றுப்பாதையில் ராக்கெட் அனுப்பும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாக இருந்திருக்கும்.

    இங்கிலாந்து தயாரித்த செயற்கைகோள்கள் வெளிநாட்டு விண்வெளி நிலையங்கள் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • எழுத்தாளர் டேம் ஹிலாரி மாண்டலின் மரணத்தால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம்.
    • அற்புதமான பணியை அவர் எங்களுக்கு விட்டுச் சென்றதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

    புக்கர் பரிசு பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் (70) காலமானார். இதுகுறித்து அவரது வெளியீட்டாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து 4வது எஸ்டேட் புக்ஸ் கூறுகையில், " எங்கள் அன்பான எழுத்தாளர் டேம் ஹிலாரி மாண்டலின் மரணத்தால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம். மேலும், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், குறிப்பாக அவரது கணவர் ஜெரால்ட்ருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இது ஒரு பேரழிவு தரும் இழப்பு. அத்தகைய அற்புதமான பணியை அவர் எங்களுக்கு விட்டுச் சென்றதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம் முடியும்" என்று குறிப்பிட்டார்.

    ×