search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டிரைலர் குறித்த அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டு இருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.
    • கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை இன்று வெளியிடுவதாக இயக்குநர் வெங்கட் பிரபு உறுதி

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டிரைலர் குறித்த அப்டேட் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

    ஆனால் 6 மணிக்கு ட்ரைலர் அப்டேட் வெளியாகவில்லை. இதனையடுத்து, கோட் படத்தின் புதிய போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் அர்ச்சனா பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், "டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தேன். ஆனால் ட்ரைலரின் சிறந்த வெர்ஷனை உருவாக்க இன்னும் நேரம் தேவைப்படுகிறது. இப்போதைக்கு இந்த சின்ன ட்ரீட், விரைவில் தளபதியை திரையில் காண்போம்"பதிவிட்டுள்ளார்.

    ட்ரைலர் அப்டேட் வெளியாகவில்லை என்றாலும் கோட் படத்தின் புதிய போஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

    இந்நிலையில், கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை இன்று வெளியிடுவதாக இயக்குநர் வெங்கட் பிரபு உறுதி அளித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மகேஷ்பாபு நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார்.
    • ரசிகர்கள் செல்பி எடுக்க போட்டி போட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார்.

    அலிப்பிரி நடப்பாதை வழியாக தனது மனைவி நம்ரதா ஷிரோத்கர் மகன் கவுதம், மகள் சிதாரா ஆகியோருடன் திருப்பதி மலைக்கு நடந்து வந்தார்.

    நடைபாதையில் வந்த பக்தர்கள் மகேஷ் பாபு மற்றும் குடும்பத்தினருடன் செல்பி எடுக்க போட்டி போட்டனர். இதனால் அலிபிரி நடைபாதையில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் நடைபாதைக்கு வந்து மகேஷ்பாபு குடும்பத்தினரை பத்திரமாக திருப்பதி மலைக்கு அழைத்துச் சென்றனர்.

    மகேஷ் பாபு குடும்பத்தினருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இன்று காலை மகேஷ்பாபு குடும்பத்தினர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவரை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதோடு, தொடர்ந்து ஹாரன் அடித்தபடி வந்துள்ளார்.
    • சிசிடிவி காட்சிகளுடன் இயக்குநர் சேரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    கடலூரில் தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குனர் சேரன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் பெரியகங்கணா குப்பத்தின் வழியாக இயக்குநர் சேரன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் தனியார் பஸ் ஒன்று வந்தது. அதன் டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதோடு, தொடர்ந்து ஹாரன் அடித்தபடி வந்துள்ளார்.

    இதனால் கோபமடைந்த சேரன் தனது காரை சாலையில் நிறுத்தி கீழே இறங்கினார். பின்னால் வந்த தனியார் பஸ்சும் சாலையில் நின்றது.

    இயக்குநர் சேரன் தொடர்ந்து ஹாரன் அடிப்பதாக கூறி தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் சேரனை சமாதானம் செய்து அனுப்பி வைத்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் கடலூரில் தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குனர் சேரன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சிசிடிவி காட்சிகளுடன் இயக்குநர் சேரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில், இயக்குநர் சேரன் நடுவழியில் தகராறு செய்தது தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அந்தகன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    • ஒவ்வொரு பண்டிகை தினத்திலும் சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்தகன் படக்குழு வெளியிட்டு வந்தது.

    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் பிரசாந்த், பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். தற்போது சினிமாத்துறைக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

    அவர் நடிப்பில் சென்ற வாரம் வெளியான அந்தகன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    அந்தகன் படம் வெளியானத்தை அடுத்து, சுதந்திர தினத்தன்று அந்தகன் படத்தின் சிறப்பு போஸ்டர் வராதா? என்று நெட்டிசன்கள் இன்று மீம்ஸ்களை பறக்கவிட்டு வந்தனர்.

    ஏனெனில் கடந்த 2 ஆண்டுகளாக ஒவ்வொரு பண்டிகை தினத்திலும் சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்தகன் படக்குழு வெளியிட்டு வந்தது. படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப்போனாலும் சிறப்பு போஸ்டர் மட்டும் தவறாமல் விடும். இந்த சிறப்பு போஸ்டர்கள் அந்த சமயத்தில் இணையத்தில் வைரலாகின.

    இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்தகன் படத்தின் சிறப்பு போஸ்டரை நடிகர் பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சிறப்பு போஸ்டரை பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
    • இப்படத்தில் வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார்.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித் நடிக்கும் 62 - வது படமாக இது உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர் இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இதுதவிர பல்வேறு பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

    நடிகர் அஜித் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து ஆக்சன் கிங் அர்ஜுன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    அப்டேட் விடாமல் இருந்து வந்த விடாமுயற்சி படக்குழு தற்போது அடிக்கடி அப்டேட் கொடுத்து வருவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
    • கேட்காமலே மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து ஜாதகம் பார்த்து பகிரங்கமாக வெளியிடுவது தவறு என்றும் கண்டித்தனர்.

    நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யாவுக்கும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலாவுக்கும் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

    இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் நாகசைதன்யா சோபிதா துலிபாலா ஜாதகத்தை பரிசீலித்ததாகவும் பொருத்தம் சரியில்லை என்றும் இருவரும் 2027-ல் பிரிந்து விடுவார்கள் என்றும் அவர்களின் பிரிவுக்கு ஒரு பெண் காரணமாக இருப்பார் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்த தகவல் வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிடர் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. தெலுங்கு சினிமா சங்கங்கள் சார்பில் மகளிர் ஆணையத்தில் ஜோதிடர் மீது புகார் செய்யப்பட்டது. கேட்காமலே மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து ஜாதகம் பார்த்து பகிரங்கமாக வெளியிடுவது தவறு என்றும் கண்டித்தனர்.

    இதையடுத்து தெலுங்கு மகளிர் ஆணையம் ஜோதிடருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வருகிற 22-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமரன் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி திரைக்கு வருகிறது.
    • இப்படத்தில் ராணுவ உயர் அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

    இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படத்தில்"முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

    மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    அமரன் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரன் படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தங்கலான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
    • தங்கலான் படக்குழுவிற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தங்கலான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் தங்கலான் படக்குழுவிற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "லானே தங்கலானே வெல்கவே நீ ஆதியோனே. பா ரஞ்சித் அண்ணா, விக்ரம் சாரின் உழைப்பின் வழி பெரும் வெற்றிக்கு தயாராகும் மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் ப்ரியமும்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தங்கலான் திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 15) வெளியாக இருக்கிறது.
    • தங்கலான் திரைப்படம் பண்டையக்கால கதையம்சம் கொண்டுள்ளது.

    இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தங்கலான் திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 15) வெளியாக இருக்கிறது.

    உலகம் முழுக்க வெளியாக இருக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள தங்கலான் திரைப்படம் பண்டையக்கால கதையம்சம் கொண்டுள்ளது. இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு தெரிந்த மிகவும் கடினமாக உழைக்கும் நடிகர்களில் ஒருவரான சியான் விக்ரமின் தங்கலான் படத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • கோட் படத்தின் டிரைலர் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அர்ச்சனா தெரிவித்திருந்தார்.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டிரைலர் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

    ஆனால் 6 மணிக்கு ட்ரைலர் அப்டேட் வெளியாகவில்லை. இதனையடுத்து, கோட் படத்தின் புதிய போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் அர்ச்சனா பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், "இன்று டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தேன். ஆனால் ட்ரைலரின் சிறந்த வெர்ஷனை உருவாக்க இன்னும் நேரம் தேவைப்படுகிறது. இப்போதைக்கு இந்த சின்ன ட்ரீட், விரைவில் தளபதியை திரையில் காண்போம்"பதிவிட்டுள்ளார்.

    ட்ரைலர் அப்டேட் வெளியாகவில்லை என்றாலும் கோட் படத்தின் புதிய போஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.
    • எமர்ஜென்சி திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    மும்பை:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்தப் படத்தை அவரே இயக்கி, தயாரித்துள்ளார். ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் கங்கனா ரணாவத் வெற்றி பெற்று எம்.பியான பின் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்தப் படம் வெற்றியடைய பெரிதும் நம்பிக்கையுடன் காத்துள்ளார் கங்கனா ரணாவத். எமர்ஜென்சி திரைப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ளது.

    இந்நிலையில், எமர்ஜென்சி திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது கங்கனா ரணாவத் பேசியதாவது:

    ஷாருக் கான், அமிர் கான், சல்மான் கான் என 3 பேரையும் எனது தயாரிப்பு, இயக்கத்தில் நடிக்க வைக்க மிகுந்த ஆசையாக உள்ளது. நன்றாக நடிக்கவும், அவர்களை அழகாக திரையில் காண்பிக்கவும் ஆசை. அவர்களால் மிகப்பெரிய மக்கள் கூட்டத்துடன் ஒன்றிணைய முடியும்.

    அதனால் அவர்களால் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்க முடியும். அவர்கள் திறமைசாலிகள் மட்டுமல்ல அவர்களால் இந்தி சினிமாவுக்கு நல்ல வருமானமும் கிடைக்கின்றன. அதற்காக அவர்களுக்கு மிகவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.

    ×