என் மலர்
- ஆடம்பர வசதிகளுடன் கூடிய வீடு.
- கல்கி 2898ஏ.டி. படம் சர்வதேச அளவில் ரூ.800 கோடி வசூலை பெற்றுள்ளது.
பாகுபலி படத்தின் மூலம் இந்திய திரையுலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் பிரபாஸ். தெலுங்கு திரை உலகில் பல பிளாக்பஸ்டர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கல்கி 2898ஏ.டி. படம் சர்வதேச அளவில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடி வசூலை பெற்றுள்ளது.
இந்தநிலையில் பிரபாசுக்கு சொந்தமான ஆடம்பர வீடு மற்றும் சொத்துக்கள் விபரம் பற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் அவருக்கு ஆடம்பர வசதிகளுடன் கூடிய வீடு உள்ளது.
நவீன பாரம்பரிய வடிவமைப்புகளுடன் வீட்டில் உட்புற வேலைப்பாடுகள் அமைந்துள்ளது. வீட்டின் ரூ.1.5 கோடி மதிப்பிலான உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடம் மற்றும் தோட்டம், ஆடம்பரமான சூழல், படிக்கட்டுகள், திரையரங்கம், ஜிம்னாசியம், ஸ்பா, வீட்டு வளாகத்தில் புல்வெளிகள், நீச்சல் குளம், தாவரங்கள் வெளிகாற்றை வாங்க கூடிய அழகிய மாடி, இரவு விருந்துக்கு என தனி அறைகள் உள்பட பல்வேறு ஆடம்பர வசதிகளுடன் பிரபாசின் கனவு இல்லம் அமைந்துள்ளது.
மேலும் பிரபாசுக்கு இத்தாலியில் உள்ள கிராமப்புற வில்லா, அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்கு மட்டுமின்றி வருமானத்துக்கும் வசதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.40 லட்சம் வருமானம் வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள். எங்களுக்கு ஜாதி, மதம், இனம் எதுவுமே கிடையாது.
- எல்லா தரப்பு மக்களையும் அரவணைத்த மனிதரை நாங்கள் இழந்துள்ளோம்.
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நடிகர் சாய் தீனா இன்று அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்கள் பூர்வகுடி மக்களின் எழுச்சி நாயகன் எங்கள் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். இது எங்களுக்கு ஈடுசெய்யமுடியாத மிகப்பெரிய இழப்பு. எங்கள் அண்ணன் இருந்தபோது எங்களுக்கு எல்லாமே இருந்தது. இப்போது எங்களின் மொத்த அதிகாரமும் போய்விட்டது. எங்கள் அண்ணனை இழந்த பிறகு மீண்டும் 100 வருடம் பின்னாடி போனது போல எங்களுக்கு பயம் வந்துள்ளது.
நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள். எங்களுக்கு ஜாதி, மதம், இனம் எதுவுமே கிடையாது. எங்களுக்கு மனிதநேயம் மட்டும்தான் உள்ளது. எங்கள் முன்னாடி யார் இருந்தாலும் அவர்களை மனிதர்களாக மட்டும் தான் பார்ப்போம். எந்த அடையாளமும் இல்லாத மனிதர்களாக வாழ ஆசைப்படும் மக்கள் நாங்கள். இது அம்பேத்கர் சொன்ன வார்த்தை.
எங்களுக்கு சாதி, மத, இனம், பேதம் எதுவுமே கிடையாது. எல்லா மனிதர்களையும் நேசிப்பவர்கள் நாங்கள். எங்களுக்கு சாதியில்லை. எங்களை பார்ப்பவர்கள் தான் சாதியாக அடையாளப்படுகிறார்கள். இங்கிருந்த எல்லா தரப்பு மக்களையும் அரவணைத்த மனிதரை நாங்கள் இழந்துள்ளோம்" என்று உருக்கமாக தெரிவித்தார்.
- கடைசி தோட்டா படம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது.
- இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.
'லோக்கல் சரக்கு' படத்தை தொடர்ந்து ஆர்.வி.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்து தயாரிக்கும் படம் 'கடைசி தோட்டா'. அறிமுக இயக்குநர் நவீன் குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் டத்தோ ராதாரவி, வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரீஜா ரவி, யாஷர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
மோகன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு நீலு குமார் வசனம் எழுதியிருக்கிறார். லோகேஷ்வர் படத்தொகுப்பு செய்ய, சரவணன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சினேகன் மற்றும் பாலு பாடல்கள் எழுதியுள்ளனர். வேலண்டினா மற்றும் யுகேஷ் ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளனர்.
இந்த படம் தொடர்பான விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய டத்தோ ராதாராவி நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்றார். மேலும், அவர் அழைத்தால் அவரது கட்சியில் இணைய தயார் என்றும் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "கடைசி தோட்டா ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர். ஒரு ரிசார்ட்டில் நடக்கும் கதையை இயக்குநர் நவீன் குமார் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார். படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது."
"இந்த படத்தில் நான் தான் நாயகன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் நாயகன் அல்ல, கதையின் நாயகன். அனைவருக்கும் நல்ல கதாபாத்திரம் தான், ஆனால் கதை கரு என் பக்கம் இருப்பதால், என்னை நாயகன் என்று சொல்கிறார்கள். வனிதா விஜயகுமாருக்கும் சிறப்பான வேடம். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்."
"நடிகைகள் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும், இதை நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறேன், ஆனால் அதை யாரும் கேட்பதில்லை. இந்த நிகழ்ச்சியில் கூட வனிதா கலந்துக்கொள்ளவில்லை என்பது படக்குழுவுக்கு வருத்தம் தான்."
"சினிமாவில் எனக்கு 50 வது ஆண்டு, நான் இதையும் தாண்டி நடித்துக் கொண்டிருப்பேன். நடிகன் என்பவன் இறந்தும் நடிப்பவன். அவன் இறப்பு வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லாவா, அதேபோல் அவன் இறந்தாலும் அவன் நடித்த கதாபாத்திரங்களும், காட்சிகளும் அடிக்கடி ரசிகர்கள் கண் முன் வந்துக்கொண்டு தான் இருக்கும். அதனால், என்னுடைய நடிப்பு பயணம் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கும். தற்போது நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. விஜய் அரசியலுக்குள் நுழைந்திருப்பது வரவேற்க வேண்டியது தான். அவர் என்னை அழைத்தால் நிச்சயம் நான் அவருடன் இணைவேன்.," என்று தெரிவித்தார்.
விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தின் பின்னணி இசையை தரண்குமார் அமைக்கிறார்.
- இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகிறது.
எஸ்ஆர் பிரபாகரன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் புதிய படம் றெக்கை முளைத்தேன். எஸ்ஆர் பிரபாகரனின் ஸ்டோன் எலிஃபேண்ட் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள றெக்கை முளைத்தேன் படத்திற்கு யுஏ சான்று வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தை தயாரித்ததோடு, எஸ்ஆர் பிரபாகரனே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்க்களுக்கானது. படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குற்ற பிரிவு அதிகாரியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.
இவருடன் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவாரவி, மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். இந்த படத்தின் பின்னணி இசையை தரண்குமார் அமைக்க பாடல்களுக்கு தீசன் இசையமைக்ககிறார்.
கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவில், பிஜு டான் போஸ்கோ படதொகுப்பு செய்ய, கார்த்திக்துரை நிர்வாக தயாரிப்பு பணிகளை செய்துள்ளனர். இந்த படத்தை A.முனிஸ்வர், K.தீரா இணைந்து தயாரித்துள்ளனர். "றெக்கை முளைத்தேன்" திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தின் படப்பிடிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
- இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் உருவாகும் புதிய படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஞானவேல் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வேட்டையன் படத்தின் டப்பிங் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக பகத் பாசில் தனது காட்சிகளுக்கு டப்பிங் செய்து வருகிறார். இந்த அக்டோபர் மாதம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- தளபதியுடன் 80 நாட்கள் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விமல். இவர் விஜய் நடித்த கில்லி, குருவி படங்களிலும் அஜித் குமார் நடித்த கிரீடம் படத்திலும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தில் நடித்தார். இதில் அவரது நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. பின்னர், இவர் பல குறைந்த பட்ஜெட் தயாரிப்பில் உருவாகும் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது போஸ் வெங்கட் தயாரிப்பில் நடிகர் விமல் 'சார்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக இளைஞரணி சார்பில் சென்னையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் எனது தம்பிகளுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இவர்கள் என்னை அன்பாக அழைத்தார்கள், அதுமட்டுமின்றி தளபதி அவர்களின் கில்லி படம் மூலம் அறிமுகமானேன். தளபதியுடன் 80 நாட்கள் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த பாசத்திலும், தம்பிகளின் அழைப்பின் பேரிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். கட்சியில் இணைவது குறித்து தற்போதைக்கு எந்த யோசனையும் இல்லை.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் இறப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்களையும் அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- திரைப்பட தொடக்க விழா பூஜை இன்று காலை நடந்தது.
- நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்.
நகைச்சுவை நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர். இவரது படங்கள் இல்லாத வெள்ளிக்கிழமையே இல்லை எனக் கூறலாம். அத்தனை படங்களிலும் பிசியாக நடித்து வருபவர், யோகி பாபு. நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் யோகிபாபு நடிக்கும் 'கான்ஸ்டபிள் நந்தன்' திரைப்பட தொடக்க விழா பூஜை இன்று காலை நடந்தது. இதில் நடிகர்கள் யோகி பாபு, ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஜான் லான்டௌ உயிரிழப்பை அவரது மகன் உறுதிப்படுத்தினார்.
- இவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால நண்பர் ஆவார்.
உலகளவில் புகழ்பெற்ற திரைப்படங்களான டைட்டானிக் மற்றும் அவதார் உள்ளிட்டவைகளை தயாரித்த தயாரிப்பாளர் ஜான் லான்டௌ (63) உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகன் ஜேமி லான்டௌ உறுதிப்படுத்தினார்.
இவரது உயிரிழப்புக்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இவர் கடந்த வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் உயிரிழந்துள்ளார். இவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால நண்பரும், தயாரிப்பாளரும் ஆவார்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லான்டௌ முதல் முறையாக ஜேம்ஸ் கேமரூனுடன் பணியாற்றுவது பற்றி பேசினார். அப்போது அவர் கூறும் போது, "ஜிம் கொஞ்சம் சந்தேக குணம் கொண்டவர் என்று நினைக்கிறேன். இதனால், நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்," என்றார்.
ஜூலை 23, 1960 ஆண்டு நியூ யார்க்கில் பிறந்தவர் ஜான் லான்டௌ. இவரது பெற்றோர் எலி லான்டௌ மற்றும் எடி லான்டௌ அமெரிக்க ஃபிலிம் தியேட்டரை துவங்கி படங்களை தயாரித்து வந்தனர். இவர் பாராமௌன்ட் உடன் இணைந்து கேம்பஸ் மேன் படத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ஆனார்.
இதைத் தொடர்ந்து இவர் டிஸ்னியுடன் இரண்டு படங்களை இணைந்து தயாரித்துள்ளார். இவர் கடைசியாக அவதார் படத்தின் அடுத்த பாகங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வந்தார்.
- இயக்குநர் வெற்றிமாறன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
- பொதுமக்கள் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மற்றும் எம்பாமிங் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டில் அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு சிறிது நேரம் வைக்கப்பட்டு குடும்ப சடங்குகள் செய்யப்பட்டது.
இதன்பின், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஆம்ஸ்ட்ராங் உடல் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது,
ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை வன்மையாக கண்டிக்கதக்கது. அவர் பல்வேறு இளைஞர்களுக்கு கல்விக்கு பெரும் உதவி செய்து இருக்கிறார். அவர் உதவியால் படித்து பல்வேறு துறைகளில் இளைஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவரை ரோல் மாடலாக வைத்து இன்னும் பல இளைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு அவரை சார்ந்து உள்ளவர்களுக்கு மாபெரும் இழப்பு. ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அரசு அனுமதிக்காததை அடுத்து நீதிமன்றத்தை அணுகி இருப்பது நல்ல முடிவு என்று கருதுகிறேன். சரியாக தீர்ப்பு வரும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
- ஹைட்ரஜன் பெராக்சைடு சிகிச்சை தொடர்பான சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது.
- மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாரும் தாங்களாகவே மருந்துகள் எடுக்கக் கூடாது.
மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, சில வருட சிகிச்சைக்குப் பின் தற்போது குணமடைந்துள்ளார். இதனையடுத்து நடிப்பில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
சமந்தா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபிட்னஸ் தொடர்பான பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'நெபுலைசர்' கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அத்துடன் "ஒரு பொதுவான வைரலுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயற்சி செய்து பாருங்கள். அதில் ஒரு வழி, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஹைட்ரஜன் பெராக்சைடு சிகிச்சை தொடர்பான சமந்தாவின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.
இதனையடுத்து, பலரும் சமூக வலைத்தளங்களில் சமந்தாவை விமர்சிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பேட்மிட்டன் வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், 'மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாரும் தாங்களாகவே மருந்துகள் எடுக்கக் கூடாது என்று கூறப்பட்டு வரும் நிலையில் சமந்தாவின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. சமந்தா கூறுவது போல் யாரும் செய்ய வேண்டாம். உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகி அவர்களுடைய அறிவுரையின்படி தான் மருந்துகளை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இறுதியாக இத்தகைய விமர்சனங்களுக்கு சமந்தா பதில் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய சொந்த அனுபவத்தை தான் நான் பகிர்ந்தேன். இருப்பினும் பொதுவெளியில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
- சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- சக்தி சிதம்பரத்துடன் இணைந்து பிரபு தேவா மூன்றாம் முறை பணியாற்றியுள்ளார்.
பிரபு தேவா தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து பல படங்களை லைன் அப்பில் வைத்துள்ளார்.
முசாசி, பேட்ட ராப், ஃபளாஷ் பேக், வுல்ஃப் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது, தற்பொழுது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரபு தேவா சாண்டிவிச்சிற்குள் இருக்கிறார், அந்த சாண்ட்விச்சை படத்தின் பெண் கதாப்பாத்திரங்கள் தூக்கி செல்கின்றனர்.
சக்தி சிதம்பரத்துடன் இணைந்து பிரபு தேவா மூன்றாம் முறை பணியாற்றியுள்ளார். இதற்கு முன் சார்லி சாப்லின்2002 , சார்லி சாப்லின்-2 2019 என்ற படங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இவருடன் அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், சாய் தீனா, யாஷிகா ஆனந்த் மற்றும் மதுசுதன் நடித்துள்ளனர்.
இப்படத்தில் பிரபு தேவா படம் முழுக்க ஒரு பிணமாக நடித்துள்ளார், தென்காசியை சேர்ந்த குடும்பம் இந்த பிணத்தை கொடைக்கானலில் சேர்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனை அவர்கள் எவ்வாறு செய்தார்கள் என்பதை மிகவும் நகைச்சுவை நிறைந்த கதைக்களமாக இயக்கியுள்ளார்.
படம் விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2016 ஆம் ஆண்டு மமூட்டி நடிப்பில் வெளிவந்த கசாபா திரைப்படத்தை நித்தின் ரென்ஜி பானிக்கர் இயக்கினார்.
- நாகேந்திரன்ஸ் ஹனிமூன் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு மமூட்டி நடிப்பில் வெளிவந்த கசாபா திரைப்படத்தை நித்தின் ரென்ஜி பானிக்கர் இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
அதற்கடுத்து சுரேஷ் கோபி மற்றும் ரெஞ்சி பானிக்கர் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான காவல் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன் ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்றது.
தற்பொழுது அடுத்ததாக நித்தின் , நாகேந்திரன்ஸ் ஹனிமூன் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இத்தொடரில் சூரஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் கிரேஸ் ஆண்டனி, கனி கஸ்தூரி, ஷ்வேதா மேனன், அல்ஃபி பஞ்சிகரன் மற்றும் நிரஞ்சனா அனூப் ஆகியோர் நடித்துள்ளனர்.
வெப் தொடர் டிஸ்னி பிளாஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் இன்று ஜூலை 6 வெளியானது.
வேலை இல்லாத நாகேந்திரன் வெவ்வேறு பெயர்களில் 5 பெண்களை திருமணம் செய்கிறார். இவர் எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்பதை டிரைலர் காட்சிகள் வெளிப்படுத்தவில்லை. முற்றிலும் ஒரு நகைச்சுவை தொடராக நித்தின் இதை இயக்கியுள்ளார். தொடரின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இத்தொடர், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.