search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் போண்டா மணி பல நடிகர்களுடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
    • இவர் சுமார் 270 படங்களில் நடித்துள்ளார்.

    கே.பாக்யராஜ் நடித்த பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் போண்டா மணி. வடிவேலு, கவுண்டமணி, விவேக் உள்பட பல நடிகர்களுடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் சுமார் 270 படங்களில் நடித்துள்ளார்.


    நடிகர் போண்டா மணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார். 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் பதிவு செய்துள்ளார். வறுமையில் இருந்த போண்டா மணிக்கு திரைப்பிரபலங்கள் பலர் உதவி செய்தனர்.

    பல்லாவரம் பொழிச்சலூர் வாடகை வீட்டில் வசித்தபடி சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி நேற்றிரவு 11 மணிக்கு வீட்டில் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போண்டாமணியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


    விஜயகாந்த் சார்பில் வழங்கப்பட்ட நிதி உதவி

    இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் போண்டா மணி குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார். அதாவது, விஜயகாந்த் சார்பில் மறைந்த நடிகர் போண்டா மணியின் மனைவியிடம் நடிகர் மீசை ராஜேந்திரன், சாரப்பாம்பு சுப்புராஜ் ஆகியோர் நிதி உதவி வழங்கி இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    • வீரப்பன் வாழ்க்கை கதை 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸாக உருவாகியுள்ளது.
    • இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸை சரத் ஜோதி இயக்கியுள்ளார்.

    மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) என்கவுண்டரில் தனது முடிவை சந்தித்தார். இவரது வாழ்க்கை கதை 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸாக உருவாகியுள்ளது. இந்த சீரிஸை சரத் ஜோதி இயக்கியுள்ளார்.


    தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸை தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14- ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. வீரப்பனின் பெரும்பாலான கதைகளை போலீஸ் மற்றும் ஊடகங்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால், இந்த சீரிஸில் வீரப்பனே தன் கதையைச் சொல்வதனால் சுவாரஸ்யம் கூடுகிறது. 6 எபிசோடுகளை கொண்ட இந்த சீரிஸில் சில புனைவுக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் கூட்டுகிறது.


    இந்நிலையில், 'கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அதிக பார்வைகளை குவித்து வரவேற்பை பெற்று வருகிறது. இதன் அடுத்த பாகத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சலார்’.
    • இந்த படம் முதல் நாளில் ரூ. 178.7 கோடி வசூல் செய்தது.

    இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரத்விராஜ் நடித்துள்ளார். கே.ஜி.எஃப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரித்துள்ளது.


    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 178.7 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.


    சலார் போஸ்டர்

    அதன்படி, இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.295.7 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை நடிகர் பிரித்விராஜ் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து உறுதி செய்துள்ளார். 'சலார்' திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.


    • சந்தோஷ் பி. ஜெயக்குமார் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு அருண் மற்றும் கவுதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

    'ஹர ஹர மஹா தேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து', 'பொய்க்கால் குதிரை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'தி பாய்ஸ்'.


    இந்தத் திரைப்படத்தில் அவருடன் 'ஜெயிலர்' ஹர்ஷத், 'கலக்கப்போவது யாரு' வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் மற்றும் கவுதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சாம் ஆர் டி எக்ஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை முஜிபீர் ரஹ்மான் கவனித்திருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் முற்றிலும் வித்தியாசமான முயற்சியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை நோவா பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்குமார் மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.


    'தி பாய்ஸ்' திரைப்படம் குறித்து சந்தோஷ் பி. ஜெயக்குமார் பேசியதாவது, ''ஐந்து இளம் பேச்சுலர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் 'தி பாய்ஸ்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஐவரும் தங்களது இளமைக் காலத்தில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகினால் அவர்களின் எதிர்காலமும், வாழ்வும் எப்படி இருக்கும்? என்பதனை இதுவரை சொல்லப்படாத வகையில் கல்ட் சினிமாவாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. மாணவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் தான்'' என்றார்.


    தி பாய்ஸ் போஸ்டர்

    வித்தியாசமான பாணியில் தயாராகி இருக்கும் 'தி பாய்ஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் கல்ட் சினிமா என்பது இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கில் தெரிய வருகிறது. இதனால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

    • நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அன்னபூரணி’.
    • இப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'அன்னபூரணி'. நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.


    அன்னபூரணி போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'அன்னபூரணி' திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டங்கி’.
    • இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார்.

    ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'டங்கி'. இந்த படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேக கதாபாத்திரங்களுடன் நடித்துள்ளனர்.


    ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். 'டங்கி' திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.



    இந்நிலையில், 'டங்கி' திரைப்படம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கிவிட்டது. இத்திரைப்படம் இதுவரை ரூ.30 கோடியை வசூலித்திருந்தாலும், முதல் நாளில் இருந்ததை விட வார இறுதியில் 40 முதல் 50 சதவீதம் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. குடும்பங்கள் 'டங்கி' திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். அழகான ரொமான்ஸ் டிராமா திரைப்படமான 'டங்கி' பாக்ஸ் ஆபிஸிலும் கலக்க ஆரம்பித்துள்ளது.

    • கார் ரேஸ்களை மையமாக கொண்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் வின் டீசல்
    • தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் என்னை பணிநீககம் செய்தனர் என்றார் அஸ்டா

    கார் பந்தயங்களை மையக்கருவாக வைத்து 2001ல் வெளியான ஹாலிவுட் திரைப்படம், தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ் (The Fast and the Furious). இத்திரைப்படம் உலகெங்கும் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் பல பாகங்கள் தொடர்ந்து வெளிவந்தன.

    இத்திரைப்படத்தில் இணை கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றவர், வின் டீசல் (Vin Diesel). இவர் ஒன் ரேஸ் புரொடக்ஷன்ஸ் (One Race Productions) எனும் பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

    வின்னின் அலுவலகத்தில் பணி புரிந்தவர் அஸ்டா ஜொனாஸ்ஸன் (Asta Jonasson) எனும் பெண்.

    வின் டீசல் மீது அஸ்டா பாலியல் குற்றம் சாட்டி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தனது புகாரில் அஸ்டா தெரிவித்திருப்பதாவது:

    ஒன் ரேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் போது, அட்லான்டா மாநிலத்தில் ஒரு நட்சத்திர ஓட்டல் அறையில் வின் டீசல் என்னிடம் முறையற்று நடக்க முயன்றார். நான் மறுத்து சம்மதம் தெரிவிக்காத போதிலும் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். அங்குள்ள ஒரு குளியலறையை நோக்கி நான் பயந்து, அலறி கொண்டே ஓடினேன். ஆனால் வின் டீசல் என்னை விடாமல் பலவந்தமாக பாலியல் ரீதியாக தாக்கினார். அது மட்டுமில்லாமல் என் முன்னிலையில் ஆபாசமாக நடந்து கொண்டார். தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் என்னை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    9 நாட்களே வேலையில் இருந்த ஒரு பணியாளர் 13 வருடங்களுக்கு முன் நடந்ததாக கூறும் இந்த புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என வின் டீசல் தெரிவிப்பதாக அவரது வழக்கறிஞர் ப்ரையன் ஃப்ரீட்மேன் தெரிவித்துள்ளார்.

    • நடிகர் போண்டா மணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார்.
    • பல்லாவரம் பொழிச்சலூர் வாடகை வீட்டில் வசித்தபடி சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி வறுமையில் வாழ்ந்து வந்தார்.

    கே.பாக்யராஜ் நடித்த பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் போண்டா மணி. வடிவேலு, கவுண்டமணி, விவேக் உள்பட பல நடிகர்களுடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கோயம்புத்தூர் மாப்ளே, வின்னர், வசீகரா, ஏய், வேலாயுதம், என்னைப் பார் யோகம் வரும் உள்பட சுமார் 270 படங்களில் நடித்துள்ளார்.



    நடிகர் போண்டா மணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார். 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் பதிவு செய்துள்ளார்.

    பல்லாவரம் பொழிச்சலூர் வாடகை வீட்டில் வசித்தபடி சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி வறுமையில் வாழ்ந்து வந்தார். அவருக்கு திரை பிரபலங்கள் பலர் உதவி செய்து வந்தனர். இதையடுத்து நடிகர் போண்டா மணி நேற்றிரவு 11 மணிக்கு வீட்டில் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போண்டாமணியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


    இந்நிலையில், போண்டா மணிக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் விஜயகாந்த் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர்.
    • இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல் பாடலான 'ஜாபிலம்மா' என்ற பாடல் ரிலீஸாகுவதற்கு முன்பே சமூக வலைதளத்தில் லீக்கானதால் பாடல் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.


    இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை தில் ராஜு பகிர்ந்துள்ளார். அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தில் ராஜு 'கேம் சேஞ்சர்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

    • 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.
    • இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது.

    12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது.


    தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. இப்படி பல பாராட்டுகளை இப்படம் பெற்றாலும் அப்போது வசூல் ரீதியாக சற்று சரிவை சந்தித்ததாக கூறப்பட்டது. பின்னர், பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் பலரும் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை பாராட்டி பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதில், தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிடப்போவதாகவும் தகவல் வெளியானது.


    இந்நிலையில், ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். என்ன சொல்லனும் என்று தெரியல ரொம்ப கஷ்டமா இருக்கு. மன்னிப்பு மட்டும் தான் கேட்க முடியும்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகர் பார்த்திபன், "அதற்கு பதில் … பெரும் முயற்சியுடன் வரும் சிறு படங்களை முதல் நாள் பார்த்து ஆதரியுங்களேன்" என்று பதிலளித்துள்ளார்.


    • இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் நடிகர் போண்டா மணி உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250 திரைப்படங்களுக்கு மேல் போண்டா மணி நடித்துள்ளார்.

    சென்னை:

    கே.பாக்யராஜ் நடித்த பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் போண்டா மணி.

    வடிவேலு, கவுண்டமணி, விவேக் உள்பட பல நடிகர்களுடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கோயம்புத்தூர் மாப்ளே, வின்னர், வசீகரா, ஏய், வேலாயுதம், என்னைப் பார் யோகம் வரும் உள்பட சுமார் 270 படங்களில் நடித்துள்ளார்.

    நடிகர் வடிவேலுவுடன் இவர் நடித்த, அண்ணே போலீஸ்காரங்க வருவாங்க எதுவும் சொல்லிடாதீங்க. அடிச்சுகூட கேட்பாங்க அப்பவும் எதுவும் சொல்லிடாதீங்க என்று குளத்தில் மூழ்கி செல்லும் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமானது.

    இதற்கிடையே, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார். 2 கிட்னியும் செயலிழந்த நிலையில் மாற்று கிட்னி அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் பதிவு செய்துள்ளார்.

    பல்லாவரம் பொழிச்சலூர் வாடகை வீட்டில் வசித்தபடி சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி வறுமையில் வாழ்ந்து வந்தார். அவருக்கு திரை பிரபலங்கள் பலர் உதவி செய்து வந்தனர்.

    இந்நிலையில், நேற்றிரவு 11 மணிக்கு வீட்டில் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    போண்டா மணி ஒரு இலங்கை தமிழர் ஆவார். கேவிஸ்வரன் என்ற பெயருடன் இலங்கையில் இருந்து அகதியாக தமிழகத்துக்கு வந்தார். பசியின் காரணமாக அடிக்கடி போண்டா வாங்கி சாப்பிடுவதால் நண்பர்கள் அவரை போண்டா மணி என்றழைத்தனர். இதுவே சினிமாவிலும் அவருக்கு பெயராக அமைந்தது.

    இலங்கை போரில் போண்டா மணியின் தந்தை அவர் கண் முன்பே குண்டடிப்பட்டு இறந்துவிட்டார். தாயார் காணாமல் போய்விட்டார்.

    போண்டா மணிக்கு நடிகர் வடிவேலு தான் பெண் பார்த்து திருமணம் செய்துவைத்தார். போண்டா மணிக்கு மாதவி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் வேல்ஸ் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப் படிப்பும், மகன் 11-வது வகுப்பும் படித்து வருகின்றனர்.

    போண்டாமணியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் தந்தை உயிரிழப்பு.
    • இவரது உடல் அவரின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

    இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் தந்தை சூலி ராமு( 23:12:2023) இன்று நற்பகல் 2 மணியளவில் மதுரையில் காலமானார் இவருக்கு வயது 74. மதுரை அருகே உள்ள அவரது பூர்வீகமான ஒத்தவீடு கிராமத்தில் நாளை (24:12:2023) பகல் 2 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் மற்றும் கொம்பு வெச்ச சிங்கம்டா போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.ஆர். பிரபாகாரன். இவர் கடைசியாக இயக்கி ஒ.டி.டி. தளத்தில் வெளியான "செங்கலம்" இணைய தொடர் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ×