search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் 'கண்ணகி'.
    • 'கண்ணகி' திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் 'கண்ணகி'. இந்த படத்தில் அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட், இ5 என்டர்டெயின்மென்ட் (E5 ENTERTAINMENT) இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


    சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. 'கண்ணகி' திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.


    இந்நிலையில், 'கண்ணகி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது செய்தியாளர் பயில்வான் ரங்கநாதன், நடிகை கீர்த்தி பாண்டியனிடம் "வீட்டுக்குள்ள தான் கணவன் மனைவி சண்டை என்றால் , இந்த வாரம் உன் படம் வருகிறது, உன் கணவன் (அசோக் செல்வன்) படம் வருகிறது எந்த படம் வெற்றி பெரும்?" என்று கேள்வி எழுப்பினார். இதை கேட்டதும் கடுப்பான கீர்த்தி பாண்டியன், "எங்க வீட்டிற்கு வந்து பார்த்தீர்களா நாங்கள் சண்டைப்போட்டதை. போட்டியும் இல்லை சண்டையும் இல்லை" என்று பதிலளித்தார்.

    • சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. "அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'அயலான்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இதனை படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. 'அயலான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
    • இதன் முதல் படைப்பான 'பைட் கிளப்' டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.


    இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக 'பைட் கிளப்' என்ற திரைப்படத்தை வெளியிடுகிறார். இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


    இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பெயரில் பேஸ்புக் தளத்தில் ஆபாச வீடியோ பரவியது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவத:-

    நான் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இருக்கிறேன். வேறெந்த சமூக வலைதளத்தில் இல்லை. வேறு தளங்களில் என் பெயரில் கணக்குகள் இருந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம். அன் பாலோ செய்து விடவும் என பதிவிட்டுள்ளார்.

    • நடிகர் ரஜினிகாந்த் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்', இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    லால் சலாம்- வேட்டையன்

    இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தின் மூலமாக தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் பலர் ரஜினிகாந்த் கோவிலுக்கு பாலாபிஷேகம் செய்து பொது மக்களுக்கு உணவு வழங்கினார்கள்.


    திருவண்ணாமலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

    இந்நிலையில், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.

    • 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
    • இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.

    அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    பைட் கிளப் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'பைட் கிளப்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதற்கு லோகேஷ் கனகராஜ் வழங்கும் முதல் படத்திற்கே 'ஏ'சான்றிதழா? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் நேற்று (டிசம்பர் 12) தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலத்தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி லால் சலாம் படத்தின் மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிக பார்வையளர்களை கடந்தது. தற்போது வரை இந்த வீடியோ 1.6 மில்லியனுக்கும் அதிக பார்யைாளர்களை கடந்துள்ளது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் விஷ்னு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, தம்பி ராமையா, அனந்திகா சனில்குமார், விவேக் பிரசன்னா, தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு விஷ்னு ரங்கசாமி, படத்தொகுப்பு பிரவீன் பாஸ்கர் செய்துள்ளார்.


    • தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
    • தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படம் திரைக்கு வந்ததும் இமயமலைக்கு சென்று கோவில்களில் தரிசித்துவிட்டு திரும்பி இருக்கிறார். அடுத்த புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இது ரஜினிக்கு 170-வது படம். சூர்யாவை வைத்து 'ஜெய்பீம்' படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் இயக்கியுள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்தது. தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது.

    இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், தலைவர் 170 படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், தலைவர் 170 பெயரில் உருவாகி வந்த படத்துக்கு 'வேட்டையன்' என்று படக்குழு பெயரிட்டுள்ளது. மேலும் பட தலைப்புடன் படக்குழு டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    • தனக்கென ஒரு பாணியை வகுத்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக ப்ரூஸ் திகழ்ந்தார்
    • ஒவ்வொரு நொடியையும் அவருடன் செலவிடுகிறோம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

    1990களில் முன்னணி ஹாலிவுட் கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ப்ரூஸ் வில்லிஸ் (Bruce Willis).

    வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அவற்றில் தனி முத்திரையுடன் நடித்து, பிற முன்னணி ஹாலிவுட் கதாநாயகர்களான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், சில்வெஸ்டர் ஸ்டாலோன், ஜாக்கி சான் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக தனது திரைப்படங்களையும் வசூலை குவிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படங்களாக அமைத்து கொண்டார்.

    தற்போது 68 வயதாகும் ப்ரூஸ் வில்லிஸிற்கு எம்மா ஹெமிங் எனும் மனைவியும் மேபல் மற்றும் எவ்லின் என இரு மகள்களும் உள்ளனர்.

    துரதிர்ஷ்டவசமாக, கடந்த பிப்ரவரி மாதம் "ஃப்ரன்டோ டெம்போரல் டிமென்சியா" (FTD) எனப்படும் மருத்துவ தீர்வு இல்லாத மூளை நோயினால் ப்ரூஸ் பாதிக்கப்பட்டார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் அறிவித்தனர்.

    இத்தகவல், உலகெங்கும் உள்ள ப்ரூஸ் வில்லிஸின் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    "சில வருடங்களாகவே ப்ரூஸ் வாழ்வில் நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் அதிகம் இருந்தாலும், 2 மாதங்களாக அவருக்கு கெட்ட நாட்களையே அதிகம் அனுபவிக்கும்படி உள்ளது. இது எங்கள் மொத்த குடும்பத்தையும் ஒன்றாக இணைத்துள்ளது. அவர் வாழ்வில் இன்னும் எத்தனை நாட்கள் மீதமுள்ளது என தெரியவில்லை. எனவே, கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் அவருடன் இருந்து முழுவதுமாக உணர்ந்து செலவிடுகிறோம்" என ப்ரூஸின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


    மூளை திசுக்களை தாக்கும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் அன்பு, ஆதரவு, அரவணைப்பு மிக முக்கியம் என்றும் அது நோயின் தீவிரத்தன்மையை கட்டுக்குள் கொண்டு வரும் என்றும் நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே, "ஜான் மெக்லேன்" எனும் நியூயார்க் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் ப்ரூஸ் வில்லிஸ் கதாநாயகனாக நடித்து 1988ல் வெளிவந்த டை ஹார்டு (Die Hard) திரைப்படம் 45 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அமெரிக்காவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்டார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • ஸ்டார் படத்தில் கவின் நாயகனாக நடித்துள்ளார்.


    டாடா பட வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் "ஸ்டார்" என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கவினுடன் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை எழில் அரசு மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பிரதீப் இ செய்துள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக இருக்கும் ஸ்டார் படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.


    நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டார் படத்தின் "காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்" என்ற பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். யுவன் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

    • இந்திய கிரிக்கெட்டில் முன்னணி வீரராக விராட் கோலி உள்ளார்.
    • விராட் - அனுஷ்கா ஜோடி திருமண நாளை கொண்டாடினர்.

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி நேற்று தங்களின் ஆறாவது திருமண நாளை கொண்டாடினர். இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருமண நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.


    உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நடைபெற்ற திருமண நாள் கொண்டாட்டத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா கருப்பு நிற உடை அணிந்திருந்தனர். இது தொடர்பான பதிவில், " இன்றைய தினம் காதலன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் முழுமையாக கழிந்ததால், கிராமில் பதிவிட அதிக தாமதம் ஆகி விட்டது. 6+ இன்ஃபினிட்டி எமோஜி, காதல் சின்னம் எமோஜி, எனது நியுமெரோ யூனோவுடன்" என குறிப்பிட்டு கோலியுடன் கட்டியணைத்து நிற்கும் புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா பகிர்ந்துள்ளார்.



    அனுஷ்கா ஷர்மா மட்டுமின்றி விராட் கோலியும் தனது இன்ஸ்டாகிராமில் அனுஷ்கா ஷர்மாவுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

    • நடிகர் ரஜினிகாந்த் இன்று 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து.

    இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை ஒட்டி பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள், பொது மக்களின் தொடர்ச்சியான பதிவுகளால் சமூக வலைதளங்களில் #HappyBirthdayRajinikanth, #HappyBirthdaySuperstar போன்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகி வருகின்றன.

     


    அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த்-க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தவிர, சமூக வலைதளலத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அன்பிற்கினிய நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    மேலும் திரையுலகில் ரஜினிகாந்த்-இன் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்த பதிவில், "அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ள பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா," என்று குறிப்பிட்டுள்ளார்.



    நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், "தமிழ் சினிமாவில் தலைமுறைகள் கடந்து எல்லோரையும் மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்-க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    இயக்குனர் பா இரஞ்சித் வெளியிட்டுள்ள பதிவில், "பெரும் மதிப்பிற்குறிய #superstar அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில், "ஒரேயொரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    லால் சலாம் படத்தில் நடித்துள்ள விஷ்னு விஷால், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா" என்று குறிப்பிட்டுள்ளார்.



    இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ள பதிவில், "பேரரசர், தலைவா ரஜினிகாந்த்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "அன்பு சகோதரர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் டெல்லியில் இருந்து ரஜினிகாந்துக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club).
    • இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

    அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதைத்தொடர்ந்து முதல் பாடலான 'யாரும் காணாத' பாடலின் வீடியோவும் வெளியானது.

    இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான 'இராவணமவன்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.



    ×