search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் பாலா பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார்.

    சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


    இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார்.சமீபத்தில் நகைச்சுவை நடிகர் பாலா ஈரோடு மாவட்டம் குன்றி ஊராட்சி மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார்.

    இந்நிலையில், சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் குடும்பங்களுக்கு நேரில் சென்று நடிகர் பாலா பண உதவி செய்துள்ளார். அதாவது, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளார்.


    இதுகுறித்து பாலா பேசியதாவது, "என்னை வாழவைத்த சென்னைக்கு என்னால் முடிந்த உதவி இது. என் கணக்கில் இருந்த சுமார் ரூ.2.15 லட்சத்தை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.1000 கொடுத்து இருக்கிறேன்" என்றார். இவருக்கு மக்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
    • வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

    நடிகர் விஜய் சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் `மிச்சாங்' புயல் கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும், போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

    வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

    இந்த வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்ய கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம்... துயர்துடைப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
    • மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.


    மீட்கப்பட்ட நமீதா குடும்பம்

    இந்நிலையில், சென்னை, துரைப்பாக்கத்தில் 6 அடி உயர வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகை நமீதா அவரது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகள், நாய்க்குட்டிகளை படகில் சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நாக சைதன்யா நடித்துள்ள வெப் தொடர் ‘தூத்தா’.
    • இந்த வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'தூத்தா' (Dhootha). இதில், நடிகர் நாக சைதன்யா, பார்வதி, பிரியா பவானி சங்கர், பிராச்சி தேசாய், பசுபதி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.


    இதைத்தொடர்ந்து 'தூத்தா' வெப் தொடரின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவிடம் அவரின் இந்தி அறிமுகம் சரியாக அமையாதது பற்றி கேட்கப்பட்டது.

    அவர் பேசியதாவது, "எனது இந்தி அறிமுகமான 'லால் சிங் சத்தா' சரியான வரவேற்பைப் பெறவில்லை என்று கேட்கிறார்கள். அதனால் எனக்கு வருத்தம் ஏதுமில்லை. அந்தப் படத்தில் அமீர்கானுடன் நடித்ததில் கற்றுக்கொண்டது அதிகம். அதனால் அதில் நடித்ததில் மகிழ்ச்சிதான்" என்று பேசினார்.

    • ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’.
    • இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    அனிமல் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, "அனிமல்" திரைப்படம் ஐந்து நாட்களில் ரூ. 481 கோடியே வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடியை வசூல் செய்ததைத் தொடர்ந்து 'அனிமல்' திரைப்படமும் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சந்தோஷ் நாராயணன் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், "10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் பகுதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு, முழங்கால் அளவு தண்ணீர், குறைந்தது 100 மணிநேரம் மின்வெட்டு என்பது முகத்தில் அறையும் உண்மை. இது ஒரு ஏரியோ அல்லது தாழ்வான பகுதியோ அல்ல. சென்னையின் மற்ற பகுதிகளை விட எங்களிடம் ஏராளமான திறந்தவெளி நிலங்களும், குளங்களும் உள்ளன. வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழை நீர் மற்றும் கழிவுநீர் ஒரே ஒரு பாசனக் கால்வாயில் சென்று சேர்வதற்கு வழிவகுத்துள்ளது. அது ஒவ்வொரு முறையும் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்புகளை தாக்குகிறது.


    இந்த நேரத்தில் ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசரநிலை ஆகியவை மரணத்தில் முடிகிறது. எங்கள் பகுதி மக்களைச் சென்றடையவும், அவர்களுக்கு ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் தொட்டிகளை நிரப்பவும், மீட்பு மற்றும் பிற முக்கியமான தேவைகளுக்கு உதவவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் நிரந்தரமாக உள்ளன.

    சென்னைவாசிகளின் நம்பிக்கைக்கு பாராட்டுகள், நான் செல்லும் இடங்களில் எல்லாம் மிகவும் நெகிழ்ச்சியும் நேர்மறை எண்ணங்களும் நிலவுகின்றன. தீர்வுக்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் ‘பார்க்கிங்’ திரைப்படம் வெளியானது.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு', 'எல்.ஜி.எம்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பார்க்கிங்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    ஹரிஷ் கல்யாண் பதிவு

    இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    • சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
    • மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.


    இந்நிலையில், இயக்குனர் தங்கர் பச்சான் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும்.

    இவ்வேளையில் உச்ச நட்சத்திர திரைப்பட நடிகர்களும், அவரவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்தால்தான் உங்களை உயர்த்தி விடும் இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றி கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ’டங்கி’.
    • இப்படம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டங்கி'. இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் டாப்சி பன்னு, போமன் இரானி, விக்கி கவுசல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, 'டங்கி' திரைப்படம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், டங்கி படத்தின் டிராப்-4, ராஜ்குமார் ஹிரானியின் அன்பான உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது. ரயிலில் நடிகர் ஷாருக்கான் பயணிப்பதுடன் தொடங்கும் கதையானது, அதைத் தொடர்ந்து படத்தில் நடைபெறும் சாகசத்துக்கான தொனியில் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.


    பஞ்சாபில் உள்ள ஒரு அழகிய கிராமத்துக்கு சென்று நண்பர்கள் மனோ, சுகி, புக்கு, மற்றும் பாலி ஆகிய இருவரும் லண்டனுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கனவைக் கொண்ட குழுவைச் சந்திக்கும் ஹார்டியுடன் (நடிகர் ஷாருக்கானின் கதாபாத்திரம்) தொடங்கிறது. அற்புதமான விசித்திரக் கதாபாத்திரங்களை இந்த டிராப்-4 அறிமுகப்படுத்துகிறது.



    • கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 'ஜப்பான்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.


    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜப்பான்' திரைப்படம் 11-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
    • அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டனர்.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


    காரப்பாக்கத்தில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதேபோல், பாலிவுட் நடிகர் அமீர் கானும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டனர்.


    இந்நிலையில், நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கானை அஜித் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், "பொதுவான நண்பர் ஒருவரின் மூலம் எங்களின் நிலைமையை அறிந்து, எப்போதும் உதவும் குணம் கொண்ட நடிகர் அஜித் எங்களைப் பார்க்க வந்தார். மேலும் எங்களது போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தார். லவ் யூ அஜித்" என பதிவிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை ரித்திகா பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் தற்போது ரஜினியின் 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    கடந்த 2016-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.


    இதைத்தொடர்ந்து அசோக் செல்வன் - ரித்திகா நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவரது கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது. மேலும், இவர் 'ஷிவலிங்கா', 'குரு', 'கொலை' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ரஜினியின் 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகை ரித்திகா சிங்கிற்கு இந்த படத்தின் படப்பிடிப்பின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ரித்திகா சிங், "ஓநாய் மனிதனுடன் சண்டை போட்டது போலாகி விட்டது. படப்பிடிப்பின்போது கண்ணாடி இருக்கிறது என்று அனைவருமே எச்சரித்த போதிலும், நிலைதடுமாறி அதில் விழுந்து காயமடைந்துவிட்டேன்.


    காயமடைந்த ரித்திகா சிங்

    கண்ணாடி துகள்கள் ஆழமாக இறங்கிவிட்டன. சிகிச்சை பெற்று முழுமையாக உடல்நலம் பெற்ற பின்னர் படப்பிடிப்பில் பங்கேற்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார். ரித்திகா சிங் வேகமாக குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    ×