என் மலர்
சினிமா செய்திகள்
- ரன்பீர் கபூர் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
- இந்த படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் இதன் ரன்னிங் டைம் 3 மணிநேரம் 21 நிமிடம் 23 நொடி எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ரன்னிங் டைமை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய்யுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Censor rating for ANIMAL is A :-)
— Sandeep Reddy Vanga (@imvangasandeep) November 22, 2023
3 hour 21 minutes 23 seconds & 16 frames is the Runtime :-)#AnimalTheFilm
Releasing on Dec 1st@VangaPictures@TSeries
- நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.
சென்னை:
நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மன்சூர் அலிகானின் பேச்சு தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை மாநகர போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. அவரது வீட்டுக்கு நேரில் சென்று போலீசார் சம்மனை வழங்கினார்கள். இதனை ஏற்றுக்கொண்டு மன்சூர் அலிகான் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் முன் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போதுதான் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமின் கிடைக்குமா என்பது தெரிய வரும்.
திரிஷா பற்றிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள மன்சூர் அலிகான் தான் பேசியதில் தவறு இல்லை என்று தெரிவித்திருந்தார்.
நடிகர் சங்கத்துக்கு எதிராகவும் அவர் பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார். டைரக்டர் பாரதிராஜா, செல்வமணி ஆகியோர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இருந்த நிலையிலும் மன்சூர் அலிகான் அதனை கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் அவர் முன்ஜாமின் கேட்டு கோர்ட்டை நாடியுள்ளார். இதனால் போலீசாரால் மன்சூர் அலிகானிடம் இன்று விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
- மன்சூர் அலிகான் விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் எழுப்பிய கேள்விக்கு நடிகை குஷ்பு பதில் அளித்தார்.
- அதில், சேரி மொழி என்று குஷ்பூ பயன்படுத்திய வார்த்தை சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.
சென்னை:
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சார்பில் குஷ்பூ கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையே, மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.மு.க. ஆதரவாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று குஷ்பு பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேரி மொழி என்று பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையான நிலையில், பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார்.
அதில், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற சொல்லைப் பயன்படுத்தினேன் என விளக்கம் அளித்துள்ளார்.
- கடக் சிங் படத்தை அனிருத் சௌதிரி இயக்கியுள்ளார்.
- இந்த திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி வெளியடப்பட இருக்கிறது.
இந்தியாவின் 54 வது சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.ஐ.) துவக்க விழா நடைபெறும் கோவாவில் பங்கஜ் த்ரிபாதி நடிப்பில் உருவாகி இருக்கும் 'கடக் சிங்'–கின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டிரைலரை ஜீ5 வெளியிடுகிறது.
அனிருத் சௌதிரி இயக்கத்தில் பங்கஜ் த்ரிபாதி, பார்வதி திருவோது, சஞ்சனா சாங்கி மற்றும் ஜெயா அஹ்சான் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியடப்பட இருக்கிறது.
இந்த திரைப்படம் வெவ்வேறு வடிவங்களில் உறவுகளின் முக்கியத்துவம், உறவுகள் எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களை அளிக்கின்றன என்பதை வெளிப்படுத்தும் கதையம்சம் கொண்டுள்ளது. இந்த படத்திற்கு ஷாந்தனு மொய்த்ரா இசையமைக்க, அவிக் முக்பத்யாய் ஒளிப்பதிவும், அர்காகமல் மித்ரா படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
- நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'கில்லர் கில்லர்' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷ் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- நடிகர் கமல்ஹாசன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகை அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜனவரியில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பிலும் இணையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான 'விருமாண்டி' திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் பேச்சு வழக்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தற்போது இவர் கமலுடன் மீண்டும் இணையவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
- சதீஷ் ஜி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "சூரகன்".
- இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் ஜி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "சூரகன்". தேர்ட் ஐ சினி கிரியேஷன் சார்பாக வி.கார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சுபிக்ஷா நடித்துள்ளார். இப்படத்தில் பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், கே.ஜி.எஸ். வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சதீஷ் ஜி குமார் ஒளிப்பதிவு இயக்கம் செய்துள்ள இப்படத்தில் இணைந்து ஜேசன் வில்லயம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் நடிகர் கார்த்திகேயன் பேசியதாவது, இந்த படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தனர். அசோகன் சார் சொன்னது போல் மனதளவிலும் நாங்கள் அனைவருமே விஜயகாந்த் சார் போல் தான் கடினமாக உழைத்தோம். இந்த படத்தில் எல்லோருமே அவர்கள் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். டேஞ்சர் மணி சார் எல்லாம், என்னைப் புதுமுகமாக நினைக்காமல், எனக்காக நிறைய மெனக்கெட்டு உழைத்தார்.
பணம் மட்டும் எல்லாவற்றையும் செய்துவிடாது, அன்பும் உழைப்பும் நம்பிக்கையும் தான் ஒரு விஷயத்தை உருவாக்கும். அது எங்கள் டீமிடம் இருந்தது. அச்சு ராஜாமணி அருமையான இசையை தந்துள்ளார். தியேட்டரில் கண்டிப்பாக இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். டிசம்பர் 1 திரையரங்குகளில் இப்படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. இங்கு வந்து எங்களை வாழ்த்திய எங்கள் டீமுக்கு ஆதரவாக இருந்த தனஞ்செயன் சாருக்கு நன்றி என்று பேசினார்.
- நடிகை விசித்ரா பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார்.
தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விசித்ரா. 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விசித்ரா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். 2001-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகினார்.
பின்னர் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தற்போது பிக்பாஸ் 7-வது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 51-வது எபிசோட்டில் போட்டியாளர்கள் அவர்கள் வாழ்வில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவம் குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அப்போது நடிகை விசித்ரா, "நான் ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ என் பெயர் கூட கேட்காமல் இந்த படத்தில் நடிக்கிறாயா? என் அறைக்கு வா என்று அழைத்தார். அன்று இரவு என் அறைக்கு சென்று தூங்கிவிட்டேன். அப்போது இருந்து பல்வேறு சிக்கல்கள் கொடுத்தார்கள்.
மாலையில் பலர் குடித்துவிட்டு அறையை வந்து தட்டுவார்கள். அதை எல்லாம் எப்படி சமாளிப்பது என வருத்தத்தில் இருந்தேன். அப்போது அந்த ஹோட்டல் மேனேஜர் ஆக இருந்தவர் தான் அறையை மாற்ற உதவி செய்தார். அந்த மேனேஜர் தான் இப்போது எனது கணவர்" என்று கூறினார்.
மேலும், 50-க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுடன் ஒரு சண்டைக் காட்சி எடுக்கும் போது தன்னை ஒரு துணை நடிகர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அதை கண்டு பிடித்து ஸ்டண்ட் மாஸ்டர் இடம் கூறிய போது அவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும் விசித்ரா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து இந்த சம்பவம் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த 'பலேவடிவி பாசு' (Bhalevadivi Basu) என்ற திரைப்படத்தில் நடிந்ததாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
- திருமண உறவுகளின் நுண்ணிய பிரச்சினைகளை பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசிய திரைப்படம் ‘இறுகப்பற்று’.
- இப்படம் பற்றிய ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் பாராட்டை பெற்றன.
இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஓடிடி வெளியீட்டிலும் உச்சம் தொட்டுள்ளது.
திருமண உறவுகளின் நுண்ணிய பிரச்சினைகளை பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசிய இத்திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கதை, திரைக்கதை, வசனங்கள், நடிகர்களின் நடிப்பு என படம் பற்றிய ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் பாராட்டை பெற்றன. மேலும், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டாப் 10 ட்ரெண்டிங் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியதாவது, "இறுகப்பற்று திரைப்படத்தின் அற்புதமான வரவேற்பு எங்களுக்கு அலாதியான மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. மக்களின் பாராட்டுகளை பணிவன்புடன் ஏற்றுக்கொள்கிறோம். உணர்வுப்பூர்வமான, உண்மைத்தன்மையை கொண்ட ஒரு கதைக்களம் பார்வையாளர்களிடம் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பதை பார்ப்பது ஊக்கமளிக்கிறது. ஆழமான, தனித்துவமான கதைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற எங்கள் அர்ப்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்" என்று கூறினார்.
- நடிகை கவுதமி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகை கவுதமி தனக்கு சொந்தமான சொத்துக்களை அழகப்பன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் மோசடி செய்து விற்று விட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் ஆகிய இருவரையும் ஆஜராகுமாறு 6 முறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை ஆஜராகவில்லை.
இந்த நிலையில் நடிகை கவுதமியிடம் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் ஆகியோருக்கு போலீசார் 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக கிடைத்த தகவலால் 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
- ஜிகர்தண்டா- 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தீக்குச்சி' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- திரைத்துறையில் முதன் முதலாக ஆரம்பித்த சங்கம் இது.
- இந்த சங்கத்தில் இரண்டு முறை தலைவராக இருக்கலாம் என்ற விதி உள்ளது.
தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தற்போது இசையமைப்பாளர் தீனா உள்ளார். இந்த சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இரண்டு முறை தலைவராக இருந்த தீனா மூன்றாவது முறையும் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இது குறித்து தீனாவிடம் இளையராஜா பேசியுள்ள ஆடியோ வைரலாகியுள்ளது.
அந்த ஆடியோவில் "திரைத்துறையில் முதன் முதலாக ஆரம்பித்த சங்கம் இது. இந்த இசையமைப்பாளர்கள் சங்கத்தை ஆரம்பித்தது எம்.பி.ஸ்ரீனிவாசன். இந்த சங்கத்தில் இரண்டு முறை தலைவராக இருக்கலாம் என்ற விதி உள்ளது. நீ ஏற்கெனவே இரண்டு முறை தலைவராக இருந்து விட்டாய்.
மூன்றாவது முறையாகவும் ஏன் போட்டியிடுகிறாய்? அடுத்தத் தலைமுறைக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டாமா? இந்த சங்கத்தில் தற்போது முறைகேடுகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். அதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஒரு தலைவராக நீ ஏற்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால், இதைச் சொல்கிறேன். நீ இரண்டு முறை தலைவராக இருந்து பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறாய். அந்த மனநிறைவோடு தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இளையராஜாவின் இந்த ஆடியோவிற்கு இசையமைப்பாளர் தீனா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "1960-ம் ஆண்டு எம்.பி.ஸ்ரீனிவாசன் போட்ட உத்தரவு இது என்று அண்ணா சொல்கிறார். சங்க விதிமுறைகள் கால மாற்றத்திற்கேற்றபடி மாறும். அதன்படி, ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். இளையராஜாவிடம் யாரோ தவறாக சொல்லி இருக்கிறார்கள். அவரை நேரில் பார்த்து இதுகுறித்து புரிய வைக்கப் போகிறேன். தேர்தல் நிச்சயம் நடக்கும்" என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.