என் மலர்
சினிமா செய்திகள்
- தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு முன்பே அறிவித்திருந்தது.
கேப்டன் மில்லர் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 'கேப்டன் மில்லர்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லியோ'.
- இப்படம் வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
லியோ போஸ்டர்
இப்படம் வெளியான சில நாட்களிலேயே ரூ.540 கோடியை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது. ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரூ.525 கோடி வசூல் செய்த நிலையில் 'லியோ' திரைப்படம் அதன் வசூலை முறியடித்துள்ளதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் ஓவர் சீஸ் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் ரூ.201 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
- ’புது புது அர்த்தங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி வெற்றி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சித்தாரா.
- இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
தமிழ் சினிமாவில் 90-களில் இயக்குனர் கே.பாலசந்தரின் 'புது புது அர்த்தங்கள்' படத்தின் மூலம் அறிமுகமாகி வெற்றி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சித்தாரா. தமிழ், தெலுங்கு, மளையாளம், கன்னடம் என வெவ்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
சித்தாரா நீண்ட இடைவெளிக்குப் பின் சன் டிவியில் மீண்டும் நடிக்கும் புத்தம் புதிய நெடுந்தொடர் "பூவா தலையா" கடந்த அக்டோபர் 30-ந்தேதி முதல் பகல் 12.30 மணிக்கு திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வருகிறது. சித்தாராவுடன் தர்ஷனா ஸ்ரீபால் மற்றும் சுவேட்டா ஸ்ரிம்டன் இளம் நாயகிகளாகவும், கிஷோர்தேவ் கதாநாயகனாகவும் நடிக்கிறார்கள்.
கதைக்கு பக்கபலமான கதாபாத்திரத்தில் தவசி, லிட்டில் ஜான் போன்ற திரைப்படங்களிலும், பூவிலங்கு தொடரில் கதாநாயகியாக நடித்த சவுமியா நீண்ட இடைவெளிக்குப்பின் திரையில் தோன்றுகிறார். இவர்களுடன் வையாபுரி, மறைந்த ஆர்.எஸ்.சிவாஜி, விஜயபாபு, ராம்ஜி, லதா ராவ், ஈரமான ரோஜாவே சிவா, பாண்டி கமல் மற்றும் முன்னணி சின்னத்திரை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் "பூவா தலையா" தொடரை வெற்றிகரமாக ஓடிய "மகராசி" நெடுந்தொடரின் தயாரிப்பாளர்கள் அனுராதா சரின் மற்றும் ஆர்.சதீஷ் குமார் தங்களது நிறுவனமான "சிட்ரம் ஸ்டுடியோஸ்' சார்பில் தயாரித்து வருகிறார்கள்.
- தெலுங்கு படமான "மை நேம் இஸ் ஸ்ருதி," விரைவில் வெளியாக உள்ளது.
- "கார்டியன்" டீசரும் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது.
ஹன்சிகா மோத்வானி, தன்னை ஒரு திறமையான கலைஞராக தொடர்ந்து நிரூபித்து வருகிறார். 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது சமீபத்திய வெப்சீரிஸ் My3 ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், தெலுங்கு படமான "மை நேம் இஸ் ஸ்ருதி," விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் சுவாரஸ்யமான டிரைலர் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ் படமான "கார்டியன்" டீசரும் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது. இவ்விரண்டு மொழி படங்களின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஹன்சிகா மோத்வானியின் செயல்திறன் மற்றும் நம்பிக்கைக்குரிய கதைக்களம் மிகுந்த படம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது சமீபத்திய படங்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஹன்சிகா, "எனது ரசிகர்களிடமிருந்து நான் பெற்ற அன்பு மற்றும் ஆதரவால் நான் உண்மையிலேயே தாழ்மையுடன் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
'மை நேம் இஸ் ஸ்ருதி' மற்றும் 'கார்டியன்' படங்களை தவிர தெலுங்கில் 105 நிமிடங்கள் மற்றும் தமிழில் MAN போன்ற திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு 2024-ஆம் ஆண்டு ஒரு பிளாக்பஸ்டர் ஆண்டாக இருக்கும்.
- 'யாத்ரா 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
- இதில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் 'யாத்ரா'. இந்த படத்தை இயக்குனர் மஹி வி ராகவ் இயக்கியிருந்தார். இதில், ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்பாகம் ஆந்திர முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆரின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படுகிறது. இதில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணம் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தில் சோனியா காந்தியாக ஜெர்மன் நடிகை சுசானே பெர்னார்ட் நடிக்கிறார். இவர் பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மறைந்த நடிகர் அகில் மிஸ்ராவின் மனைவி ஆவார். சுசானே பெர்னார்ட்டின் சோனியா காந்தி கதாபாத்திர புகைப்படத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வரவேற்பு பெற்று வருகிறது.
'யாத்ரா- 2' பிப்ரவரி 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
- இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படம் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில், தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
The making of #JigarthandaDoubleX#DoubleXDiwali in theatres, from November 10th!
— karthik subbaraj (@karthiksubbaraj) November 7, 2023
@offl_Lawrence @iam_SJSuryah @dop_tirru @Music_Santhosh @kaarthekeyens @stonebenchers #AlankarPandian #InvenioOrigin @RedGiantMovies_ @SunTV @AsianCinemas_ @sureshprodns @DQsWayfarerFilm… pic.twitter.com/INNfMWULyx
- நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'இந்தியன் 2' படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்தை இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் 'இந்தியன் 3' படம் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் பரவி வந்தது.
அதுமட்டுமல்லாமல், 'இந்தியன் 3' திரைப்படத்திற்காக கூடுதலாக 40 நாட்கள் கமல் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா பகுதிகளில் 'இந்தியன் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 'இந்தியன் 3' படம் உருவாகவுள்ளதை கமல் உறுதி செய்துள்ளார். இது குறித்து பேசிய கமல், "இந்தியன் 2, இந்தியன் 3 வெளியாகும் பொழுது அது ஒரு அரசியல் மேடையாக மாறும். அதையெல்லாம் பார்க்க வேண்டும். அதில் செய்திகள் இருக்கின்றன" என்று கூறியுள்ளார்.
- நடிகை மம்தா மோகன் தாஸ் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
- இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகையான மம்தா மோகன் தாஸ் மலையாளத்தில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். இவர் விஷால் நடிப்பில் வெளியான 'சிவப்பதிகாரம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து 'குரு என் ஆளு', 'தடையற தாக்க' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
மம்தா மோகன் தாஸ் திடீரென புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து படங்களிலிருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் குணமடைந்து விட்டதாக கூறி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை மம்தா மோகன் தாஸ் குறித்து கீத்து நாயர் என்பவர் பேஸ்புக்கில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். பொய்யாக எழுதப்பட்ட அந்த கட்டுரையை வாசித்த நடிகை மம்தா மோகன்தாஸ் அதிர்ச்சி அடைந்து அதன் கமெண்ட் பகுதியில் , "யார் நீங்கள்? என்ன சொல்கிறீர்கள்? உங்கள் பக்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவீர்களா?" என்று பதிவிட்டிருந்தார்.
மம்தா மோகன் தாஸ் கமெண்ட்
தொடர்ந்து, "தயவு செய்து இதுபோன்ற மோசடியான நபர்களின் பக்கத்தைப் பின் தொடராதீர்கள்" என்றும் பதிவிட்டுள்ளார். மம்தாவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், அந்த நபரின் பேஸ்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.
- இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
'ஜப்பான்' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'டச்சிங் டச்சிங்' வீடியோ பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
- இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய திரைபடத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தூத்துக்குடி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, கிமரசக்கனாபுரம் கிராமத்திற்கு விஷால் குடிநீர் தொட்டி கட்டி கொடுத்தார்.
இந்நிலையில் காரைக்குடி பகுதியில் அடுத்த கட்ட படிப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படிப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து படப்பிடிப்பு குழுவினர் பல்வேறு குழுக்களாக காரைக்குடி புறப்பட்டு வந்துள்ளனர்.
இதில் படிப்பிடிப்பிற்கு தேவையான ஜெனரேட்டர், மின் விளக்கு உள்ளிட்ட படப்பிடிப்பு உபகரணங்கள் ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று காரைக்குடி நோக்கி வந்துள்ளது. இந்த வேனை திருவண்ணாமலை, சேத்துப்பட்டுவை சேர்ந்த நாதன்(வயது 23) என்பவர் ஓட்டி வந்துள்ளார். வேனில் படப்பிடிப்பு குழுவை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்த மகேஷ்(33), சென்னை சாலி கிராமத்தை சேர்ந்த துரை(40) உள்ளிட்ட 4 பேர் வந்துள்ளனர்.
வேன் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை, தஞ்சாவூர் பிரிவு ரோடு, ஈபி ஆபிஸ் எதிரே வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. டிரைவர் நாதன் வேனை நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த படிப்பிடிப்பு வேன் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்து 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருக்கோகர்ணம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையிலான போலீசார் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை போலீசார் சரி செய்தனர். படப்பிடிப்பு உபகரணங்கள் ஏற்றப்பட்ட வேன் என்பதால் பாரம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக வேனை அப்புறப்படுத்த கிரைன் வரவழைக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் வேன் அப்புறப்படுத்தப்பட்டது.
விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் டிரைவர் தூங்கியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஜிகர்தண்டா 2'.
- இப்படம் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படம் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில், தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் தாக்கத்தை வைத்துதான் 'ஜிகர்தண்டா 2' படத்தின் கதை எழுதியதாக கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, கடந்த 1975-ஆம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரஜினிகாந்த் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ அறிமுகமான இந்த ஆண்டை எனது கருப்பு ஹீரோ கதாபாத்திரத்திற்கு பயன்படுத்திக் கொண்டேன். அந்த இடத்திலிருந்து தான் இந்த படத்தின் முக்கியமான கதை மற்றும் திரைக்கதை தொடங்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர் கமல்ஹாசன் 'தக் லைஃப்' திரைப்படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைஃப்' திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரிலும் சமூக வலைதளத்திலும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் விஜய்யும் சந்தித்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் 'லியோ' திரைப்படத்தின் டப்பிங் பணியின் போது எடுத்து கொண்டது என்று கூறப்படுகிறது. மேலும், 'லியோ' படக்குழுவானது லோகேஷ் கனகராஜ், விஜய், தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் கமல்ஹாசனுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். இந்த படமும் வெளியாகியுள்ளது.