search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தங்கலான் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
    • தங்கலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வெளியாகிறது.

    பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் தங்கலான். அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியாக இருக்கும் தங்கலான் படத்தின் டீசர் இன்று காலை வெளியானது. தங்கலான் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    இன்று வெளியான டீசர் தங்கலான் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. டீசர் வெளியீட்டை படக்குழு நிகழ்சியாக நடத்தியது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்த அனுபவம் பற்றி விரிவாக பேசினார். மேலும் சில காட்சிகளை நடித்தும் காண்பித்தார்.

    அதைத் தொடர்ந்து பேசிய அவர், "சார்பட்டா பரம்பரை படத்தை பா. ரஞ்சித் எப்படி எடுத்திருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். என்னை கேட்டால், இது அதைவிட 100 மடங்கு பயங்கரமா இருக்கும். படப்பிடிப்பின் போது கோவணம் கட்டிக்கிட்டு, காலில் செருப்பு இல்லாம, கடும் வெயில்ல நடிக்கும் போது, அந்த கதாபாத்திரமாகவே மாறிடுவோம்," என்று தெரிவித்தார்.

    • ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
    • 'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும், நவம்பர் 1-ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் எனவும் படக்குழு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    அதன்படி, மாறுபட்ட கதைக்களத்துடன், பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தின் டீசர் இன்று வெளியானது. விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    • விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
    • லியோ படத்தில் பல்வேறு திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.

    நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் படம் லியோ. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கிறது. படம் வெளியாகி 12 நாட்களில் ரூ. 540 கோடி வசூலித்து இருப்பதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    லியோ படத்தில் மன்சூர் அலிகான், ஃபிளாஷ்பேக் கதை சொல்லுவார். இந்த பிளாஷ்பேக் படத்தில் பெரியதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. ரசிகர்களிடையே பல விமர்சனங்கள் எழுந்தது. மன்சூர் அலிகான் பொய் சொல்லலாம் என்று படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மன்சூர் அலிகான் படத்தில் பேசிய வீடியோ காட்சியை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

    அந்த வீடியோவில், "அவனவன் ஆயிரத்தெட்டு கதை சொல்லுவான். ஒவ்வொன்னுக்கும் நிறைய பெர்ஸ்பெக்டிவ் இருக்கும். இது என்னோட பெர்ஸ்பெக்டிவ். 1999," என்று தெரிவித்து இருக்கிறார்.

    • சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்ற இணைய தொடர் செங்களம்.
    • ஆர். பார்த்திபன் இயக்கும் படத்தில் நடித்து இருக்கிறார்.

    "சுந்தர பாண்டியன்", "இது கதிர்வேலன் காதல்" போன்ற திரைப்படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் பிஜு. வி. டான் பாஸ்கோ. இவர் சமீபத்தில் வெளியான  "செங்களம்" வெப் தொடருக்கு எடிட்டிங் செய்து இருந்தார். இந்த வெப் தொடர் பலராலும் பாராட்டப்பட்டது.

    இவரது மூத்த மகன் பினு.டி. ஜான் பாஸ்கோ, தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.  இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த "கோல்மால்" என்ற திரைப்படம் முழுக்க முழுக்க மொரிஷியஸில்  படமாக்கப்பட்டது. அதில் அவர் நடித்த பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

     

    அதில் முக்கியமாக தமிழ் திரைப்பட துறையில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஆர். பார்த்திபன் இயக்கும் படத்தில் நடித்து இருக்கிறார். படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படம் வெளிவந்த பிறகு அவர் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத குழந்தை நட்சத்திரமாக வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக இயக்குனர் பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    • மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா.
    • உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் அறிமுகமானார்.

    வெள்ளித் திரையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் என முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நட்சத்திர நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார் .அவரோடு வந்த சிம்ரன், லைலா கோதிகா போன்ற நடிகைகள் இன்று பல முக்கிய படங்களில் நடித்து வருவதால் ரம்பாவுக்கும் நடிப்பின் மீதான ஆசை மீண்டும் வந்துள்ளது. ஏற்கனவே தெலுங்கு படத்தில் வாய்ப்புகள் வந்தாலும், தமிழில் மீண்டும் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார்.


    தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா. 1993- ல் உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் அறிமுகமானார். அடுத்த 20 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

    உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக தென்னிந்தியா முழுதும் வலம் வந்த இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் திரையுலகில் தன் நடிப்பு பயணத்தை தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.



    இது குறித்து நடிகை ரம்பா கூறியதாவது, திரையுலகில் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கனவுக்கன்னி அடையாளமும், புகழும் எனக்கு கிடைத்தது. அதை நினைத்து எப்போதும் எனக்கு பெருமை தான். நான் நடிக்கும் காலத்தில் மிக ஜாலியாக சுட்டிப்பெண்ணாக இருந்தேன். திருமணத்திற்கு பிறகு கூட எல்லோரும் கேட்டார்கள் என டிவிக்களில் ஷோ செய்தேன், ஆனால் குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் எனத் தெரிந்தபோது நடிப்பதை நிறுத்தி விட்டேன். இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன் என அழகான குடும்பம். ஒரு நடிகையாக நான் உணர்ந்ததே இல்லை, ஒரு நல்ல அம்மாவாக மனைவியாகவே இருந்தேன்.

    இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். இப்போதும் ரசிகர்கள் என்னை ஞாபகமாக கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் அன்புதான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது. சினிமாவை தொடர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். இப்போது சினிமாவின் ட்ரெண்ட் மாறியிருக்கிறது. ஆனால் சினிமா என்றுமே மாறாது. இப்போதும் சினிமா நண்பர்கள் உடன் பல விஷயங்கள் பேசிக்கொண்டு இருப்பேன். என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம் என்றார்.

    • விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இறுகப்பற்று'.
    • இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    இறுகப்பற்று போஸ்டர்

    இந்நிலையில், 'இறுகப்பற்று' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிந்து அறிவித்துள்ளது. 


    • கேசவ் தெபுர் இயக்கியுள்ள படம் 'ரா ..ரா ..சரசுக்கு ராரா'.
    • இப்படம் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகுகிறது.

    ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ரா ..ரா ..சரசுக்கு ராரா' இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.கே.வி. இசையமைத்துள்ளார். ஆர்.ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 9V ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை நவம்பர் 3-ஆம் தேதி வெளியிடுகிறது. இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.


    இதில், விநியோகஸ்தர்கள் ரமேஷ் சுப்பிரமணியன், அஞ்சலி முருகன், படத்தின் இசையமைப்பாளர் ஜி.கே.வி, எழுத்தாளர் பொன். முருகன்,கலை இயக்குனர் ராமச்சந்திரன்,சண்டை இயக்குனர் ராஜாசாமி,பாடல் ஆசிரியர் சிவப்பிரகாசம், படத்தில் நடித்திருக்கும் மாரி வினோத், வில்லன் விஜய் பிரசாத், நடிகைகள் காயத்ரி, சிம்ரன், தீபிகா, சாரா அக்ஷயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



    இந்த நிகழ்ச்சியில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே .ராஜன் பேசியதாவது, இப்போதெல்லாம் பட விழாக்களுக்கு அதில் நடித்த நடிகைகள் வருவதில்லை. அந்த நிலையில் இங்கே வந்திருக்கிற இந்த நான்கு நடிகைகளை நான் பாராட்டுகிறேன். புதிதாக இவ்வளவு துணிச்சலாகத் தமிழ்ப் படம் எடுக்க வந்துள்ள தயாரிப்பாளருக்கு நான் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுக்குப் போட்ட பணம் திரும்ப வந்துவிடும். இப்பொழுது எல்லாம் போட்ட பணம் திரும்பி வந்தாலே பெரிய விஷயம்.



    அவுட்டோரில் வெளிப்புறங்களில் படம் எடுக்கும் போது நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன் முதலமைச்சரைச் சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுத்தோம் .அவுட்டோர் லொகேஷன்களில் டிராபிக், போலீஸ் என்று ஏகப்பட்ட பேர் வந்து லஞ்சம் வாங்குகிறார்கள். தினசரி 25 ஆயிரம் ரூபாய் லஞ்சத்துக்கே கொடுக்க வேண்டியிருக்கிறது. இதை தடுத்து முறைப்படுத்த வேண்டும்.



    தலைமைச் செயலகத்தில் சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வர வேண்டும் அப்படி அமைத்து ஒருமுறை அனுமதி வாங்கிவிட்டால் தமிழ்நாட்டில் எங்கே சென்றாலும் பிரச்சினை இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்கும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். முதலமைச்சரும் பரிசீலிக்கிறோம் என்றார்.

    நான் 2004 -ல் இதே தலைப்பை என் படத்திற்கு வைத்தேன். ஆனால் அப்போது எதிர்ப்பு இருந்ததால் நான் பின் வாங்கி, விட்டு விட்டேன். ஆனால் இந்த தயாரிப்பாளர் போராடி அதே தலைப்பை வாங்கி இருக்கிறார் .அவருக்கு என் பாராட்டுக்கள் இவ்வாறு பேசினார்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏழு நாட்களில் ரூ.461 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    லியோ போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'லியோ' திரைப்படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரூ.525 கோடி வசூல் செய்த நிலையில் 'லியோ' திரைப்படம் அதன் வசூலை முறியடித்துள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


                

    • குத்துச்சண்டை போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக சல்மான் கான் மற்றும் ரொனால்டோ பங்கேற்றனர்.
    • சல்மான்கானை கண்டுகொள்ளாமல் ரொனால்டோ செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    சமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் சல்மான்கானும் கால்பந்து வீரர் ரொனால்டோவும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் சல்மான்கானை கண்டு கொள்ளாமல் ரொனால்டோ செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.


    சல்மான்கான் -ரொனால்டோ

    அதில், நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் தனது மனைவியுடன் உள்ளே நுழையும் ரொனால்டோ, அங்கு நின்று கொண்டு இருந்த சல்மான்கானை கண்டு கொள்ளாமல் செல்வார். இந்த வீடியோ வைரலானது. இதற்கு சல்மான்கானை ரொனால்டோ அவமதித்து விட்டதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து பேசுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சல்மான்கானுடன் ரொனால்டோ சிரித்து பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.


    • விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹரா'.
    • நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார்.

    'தாதா 87' மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹரா'. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார். இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


    மேலும், சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார். எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல், அரசியல்வாதியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

    இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. 'ஹரா' படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கிய போது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்கு பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.


    மேலும் அவர், "கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இறுதி கட்டப்படபிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பண்டிகை வெளியீடாக விரைவில் திரையரங்குகளில் 'ஹரா' வெளியாகும்" என்று கூறினார். 

    • விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
    • இப்படத்தின் வெற்றி விழா நாளை நடைபெறுகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.


    இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை நடைபெறவுள்ளது. பேருந்தில் ரசிகர்கள் விளையாட்டரங்கிற்கு வர தடை மற்றும் 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் வெற்றிவிழாவிற்கான தடையில்லா சான்றை காவல்துறை வழங்கியது.

    இந்நிலையில், 'லியோ' திரைப்படத்தின் நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்படத்தின் வெற்றிவிழா நாளை மாலை 6 மணியிலிருந்து 11 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்காக 4 மணி முதல் ரசிகர்கள் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கவல்துறை தெரிவித்துள்ளது.


    மேலும், நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் பாஸுடன் ரசிகர் மன்ற அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிப்படுவார்கள் என்று ரசிகர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு வந்தால் அது பறிமுதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ரசிகர்கள் வரும்படி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நிகழ்ச்சியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க படக்குழுவிற்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்திருந்தார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சனம் ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.


    இப்படம் என்னதான் வசூலை குவித்து வந்தாலும் இதன் பிளாஷ் பேக் காட்சிகளை ரசிகர்கள் முதல் நாளிலிருந்தே விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் 'லியோ படத்தின் பிளாஷ் பேக் காட்சிகள் பொய்யாக கூட இருக்கலாம்' என்று லோகேஷ் கனகராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அதில், "நேர நெருக்கடி காரணமாக 45 நிமிடங்கள் இருந்த பிளாஷ் பேக் காட்சிகளை 20 நிமிடங்களாக குறைத்தேன், மேலும், நீங்கள் கதையை பார்த்திபன் கூறி கேட்கவில்லை, கதையை இருதயராஜாக நடித்த மன்சூர் அலிகான்தான் கூறியுள்ளார், அது பொய்யாக கூட இருக்கலாம்" என்று கூறினார்.


    இதனை பார்த்த ரசிகர்கள் 'படத்தின் இறுதியில் ஏதாவது ஒரு காட்சியில் இது பொய் என்று தெரிவித்து இருக்கலாம். படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றபின் பேட்டியில் இப்படி சொல்வது ஏற்புடையது அல்ல' என்று விமர்சித்து வருகின்றனர்.

    ×