என் மலர்
சினிமா செய்திகள்
- தன்ராஜ் கொரனானி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது.
தன்ராஜ் கொரனானி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கோணத்தில் உருவாகும் இத்திரைப்படம் , இதுவரை யாரும் சொல்லாதப்படாத தனித்துவமான கருத்தை கொண்டிருக்கும் கதையாக உருவாகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, தன்ராஜ் ஆகியோர் அப்பா, மகனாக நடிக்க, மோக்ஷா, ஹரிஷ் உத்தமன், பிரித்வி, அஜய் கோஷ், லாவண்யா ரெட்டி, சிலம் ஸ்ரீனு, பிரமோதினி, ராக்கெட் ராகவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ப்ருத்வி போலவரபு தயாரிப்பில் ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் இப்படத்திற்கு அருண் சிலுவேறு இசையமைக்க துர்கா பிரசாத் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது. டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும் , இயக்குனர் சுப்பு, சிவபாலாஜி கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கிவைத்தனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9-ம் தேதி ஹைதராபாத், சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் நடைபெறுகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விமானம் படத்தின் இயக்குனர் சிவபிரசாத் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்புடுத்தும் விதமாக பரப்புரை செயல்திட்டத்தினை பிரசாந்த் மருத்துமனை நடத்தியது.
- போட்டியில் பங்கேற்றவர்களையும், விருதுகளை வென்றவர்களையும் விக்ரம் பிரபு பாராட்டினார்.
சென்னை மாநகரில் முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக சேவையாற்றி வரும் பிரசாந்த் மருத்துவமனை "இளம் இதயங்களை காப்போம்" ('Save Young Hearts') 2023 டிஜிட்டல் பரப்புரை செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. மாரடைப்புகள், இதய பிரச்சனைகள், வராமல் தடுக்க இளம் தலைமுறையினர் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் வகையில், இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்புடுத்தும் விதமாக 2022-ம் ஆண்டில் 'Save Young Hearts' பெயரில் நடத்தப்பட்ட வெற்றிகரமான பரப்புரை செயல்திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் இதனை பிரசாந்த் மருத்துவமனை நடத்தியது.
இப்போட்டிக்கு 100-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. மிகச் சிறப்பான முதல் இரண்டு படைப்புகளுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் மற்றும் ஐம்பது ஆயிரம் வழங்கினர். நடிகர் விக்ரம் பிரபு இந்நிகழ்வின் விருந்தினராக கலந்து கொண்டு 'இளம் இதயங்களை காப்போம்' என்ற செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட சிறிய வீடியோ (Insta Reels) போட்டியில் பங்கேற்றவர்களையும் மற்றும் விருதுகளை வென்றவர்களையும் மனமார பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது, வயதானவர்களுக்கு மட்டும் தான் மாரடைப்பு வரும் என்பது இல்லை தப்பான பழக்கங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கும் ஒழுங்கான உணவு பழக்கம் இல்லாதவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படும். 'Save Young Hearts' என்ற விஷயம் எல்லாரையும் சென்றடைய செய்த பிரசாந்த் மருத்துவமனை மற்று குழுவிற்கு என் வாழ்த்துகள் என்று பேசினார்.
புகைப்பிடிப்பது போன்ற விஷயங்களை உங்கள் படங்களில் தவிப்பீர்களா என்ற கேள்விக்கு, படத்தில் எங்கே எல்லாம் சொல்ல முடியுமோ அங்கே எல்லாம் சொல்லுவோம். சொல்வதை ஏற்றுக் கொள்ளும் சினிமாவை குறைந்த நபர்கள் தான் பார்க்கிறார்கள். ஒரு நல்ல விஷயத்தை 60 நிமிடங்களில் சொன்னால் பார்க்கிறார்கள். அதே இரண்டு மணிநேரம் படத்தில் சொன்னால் பார்க்கமாட்டார்கள் என்று கூறினார்.
மேலும், பத்திரிகையாளர் டாணாக்காரன் படத்தில் நடப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு விக்ரம் பிரபு, "டாணாக்காரன் நான் செத்து பிழைத்த படம்" என்று பேசினார்.
- சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெறுகிறது.
- இதில் தமிழ் படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது.
மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான 'விடுதலை' திரைப்படம் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சம்யுக்த விஜயன் இயக்கிய நீல நிற சூரியன், காதல் என்பது பொதுவுடமை உள்ளிட்ட படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. Non feature film பிரிவில் பிரவீன் செல்வம் இயக்கிய 'நன்செய் நிலம்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- நடிகர் பிரபாஸ் 'சலார்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது.
இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சலார் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, நடிகர் பிரபாஸ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- கமலின் 233-வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார்.
- இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை தொடர்ந்து கமலின் 233-வது படத்தை 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'தலைவன் இருக்கின்றான்' என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நானியின் 31-வது படத்தை 'அடடே சுந்தரா' இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். இதில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சூர்யாவின் சனிக்கிழமை போஸ்டர்
டிடிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'சூர்யாவின் சனிக்கிழமை' என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளது. நானி கையில் விலங்குடன் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#சூர்யாவின்சனிக்கிழமை#Nani31 is #SuryavinSanikizhamai
— DVV Entertainment (@DVVMovies) October 23, 2023
UNCHAINED Glimpse https://t.co/cQ9XilEreK
Natural ? @NameisNani @iam_SJSuryah #VivekAthreya @priyankaamohan @JxBe @muraligdop @karthikaSriniva @Vinciraj_NC @IamKalyanDasari @DVVMovies #Nani31#SaripodhaaSanivaaram pic.twitter.com/vmXTBbYIU3
- நடிகர் அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள நடிகர் அஜித் வீட்டின் மதில் சுவர் இடிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சில மாதங்களாக சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிறிது தூரம் சாலை விரிவாக்கத்திற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் பணிகள் செய்து வருகின்றனர்.
இதில், நடிகர் அஜித் குமார் தற்போது வசித்து வரும் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள வீட்டின் முகப்பு வாயில் மதில் சுவர் இடிக்கப்பட்டு மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. 50-க்கும் மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான இடங்களில் மதில் சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு இடிக்கப்பட்ட மதில் சுவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலருக்கு இந்த பணிகள் முடிந்ததும் மதில் சுவர்கள் கட்டி தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ளார். இவரது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, டாக்டர், டான் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் இன்று ஆயுத பூஜையை கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிடா’.
- இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கிடா' (Goat). மேலும் மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படத்தை ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ளது 'கிடா' திரைப்படம். இப்படம் வெளியாகுவதற்கு முன்பே பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 'கிடா' திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’.
- இப்படத்தின் கலை இயக்குனர் மிலன் சமீபத்தில் காலமானார்.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் 'விடாமுயற்சி' கலை இயக்குனர் மிலன் மாரடைப்பினால் அஜர்பைஜான் நாட்டில் உயிரிழந்தார். இது திரைத்துறையில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது 'விடாமுயற்சி' படத்தின் கலை இயக்குனராக அவரது மனைவி மரியா மெர்லின் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி.
- நடிகை கவுதமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சென்னை:
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி.
நடிகை கவுதமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பான கடிதங்களை பா.ஜ.க. தலைமைக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வில் உள்ள அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றி விட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த மாதம் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை கவுதமி இவர்மீது புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் 'லப்பர் பந்து'.
- இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் மேற்கொள்கிறார்.
லப்பர் பந்து போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஆயுத பூஜையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.
Welcome to the world of #LubberPandhu ❤️?
— Harish Kalyan (@iamharishkalyan) October 22, 2023
ஆட்டத்துக்கு நாங்க ரெடி ? @lakku76 @Prince_Pictures @venkatavmedia @tamizh018 #AttakathiDinesh @isanjkayy @rseanroldan @DKP_DOP #HappyAyudhaPoojai pic.twitter.com/dYy3lWl0Qo