search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சொல்வதை ஏற்றுக்கொள்ளும் சினிமாவை குறைந்த நபர்கள்தான் பார்க்கிறார்கள்- விக்ரம் பிரபு
    X

    சொல்வதை ஏற்றுக்கொள்ளும் சினிமாவை குறைந்த நபர்கள்தான் பார்க்கிறார்கள்- விக்ரம் பிரபு

    • இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்புடுத்தும் விதமாக பரப்புரை செயல்திட்டத்தினை பிரசாந்த் மருத்துமனை நடத்தியது.
    • போட்டியில் பங்கேற்றவர்களையும், விருதுகளை வென்றவர்களையும் விக்ரம் பிரபு பாராட்டினார்.

    சென்னை மாநகரில் முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக சேவையாற்றி வரும் பிரசாந்த் மருத்துவமனை "இளம் இதயங்களை காப்போம்" ('Save Young Hearts') 2023 டிஜிட்டல் பரப்புரை செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. மாரடைப்புகள், இதய பிரச்சனைகள், வராமல் தடுக்க இளம் தலைமுறையினர் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் வகையில், இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்புடுத்தும் விதமாக 2022-ம் ஆண்டில் 'Save Young Hearts' பெயரில் நடத்தப்பட்ட வெற்றிகரமான பரப்புரை செயல்திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் இதனை பிரசாந்த் மருத்துவமனை நடத்தியது.

    இப்போட்டிக்கு 100-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. மிகச் சிறப்பான முதல் இரண்டு படைப்புகளுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் மற்றும் ஐம்பது ஆயிரம் வழங்கினர். நடிகர் விக்ரம் பிரபு இந்நிகழ்வின் விருந்தினராக கலந்து கொண்டு 'இளம் இதயங்களை காப்போம்' என்ற செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட சிறிய வீடியோ (Insta Reels) போட்டியில் பங்கேற்றவர்களையும் மற்றும் விருதுகளை வென்றவர்களையும் மனமார பாராட்டினார்.



    இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது, வயதானவர்களுக்கு மட்டும் தான் மாரடைப்பு வரும் என்பது இல்லை தப்பான பழக்கங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கும் ஒழுங்கான உணவு பழக்கம் இல்லாதவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படும். 'Save Young Hearts' என்ற விஷயம் எல்லாரையும் சென்றடைய செய்த பிரசாந்த் மருத்துவமனை மற்று குழுவிற்கு என் வாழ்த்துகள் என்று பேசினார்.

    புகைப்பிடிப்பது போன்ற விஷயங்களை உங்கள் படங்களில் தவிப்பீர்களா என்ற கேள்விக்கு, படத்தில் எங்கே எல்லாம் சொல்ல முடியுமோ அங்கே எல்லாம் சொல்லுவோம். சொல்வதை ஏற்றுக் கொள்ளும் சினிமாவை குறைந்த நபர்கள் தான் பார்க்கிறார்கள். ஒரு நல்ல விஷயத்தை 60 நிமிடங்களில் சொன்னால் பார்க்கிறார்கள். அதே இரண்டு மணிநேரம் படத்தில் சொன்னால் பார்க்கமாட்டார்கள் என்று கூறினார்.

    மேலும், பத்திரிகையாளர் டாணாக்காரன் படத்தில் நடப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு விக்ரம் பிரபு, "டாணாக்காரன் நான் செத்து பிழைத்த படம்" என்று பேசினார்.

    Next Story
    ×