என் மலர்
சினிமா செய்திகள்
- மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'மிரியம்மா'.
- இப்படத்தை இயக்குனரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.
அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை 'யாத்திசை' புகழ் ரஞ்சித் மேற்கொள்கிறார். பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குனரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கலகலப்பாக உருவாகியுள்ள இந்த டிரைலரை இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். 'லெஸ்பியன்னு சொல்லு கெத்தா இருக்கும்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இன்று வெளியானது. லியோ திரைப்படத்தை வரவேற்கும் வகையில் திருப்பூர்- தாராபுரம் சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் விஜய் ரசிகர்கள் ஏற்பாட்டில் திரையரங்கம் முழுவதும் திருவிழா போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கேக் வெட்டிய ரசிகர்கள்
மேளதாளத்துடன் சிங்கம் வேடமணிந்தவர்கள் நடனமாட கார், ஜீப் உள்ளிட்டவற்றில் முழுவதுமாக லியோ திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ஊர்வலமாக திரையரங்கிற்கு வந்தனர். மேலும் விஜயின் புகைப்படங்கள் அடங்கிய 20 அடி நீளமுள்ள கேக் வெட்டப்பட்டு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது. விஜய் ரசிகர்களின் இந்த செயலால் திரையரங்கம் முழுவதும் தீபாவளி பண்டிகை போல காட்சி அளித்தது.
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள "லியோ" திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
- படம் வெளியானதும், தியேட்டருக்கு வெளியே பட்டாசு வெடித்தும், அங்கு வந்தவர்களுக்கு இனிப்பும் வழங்கி லியோ படத்தை கொண்டாடினர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள "லியோ" திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
தமிழகத்தில் காலை 9 மணிக்கு திரைப்படம் வெளியானது. படம் வெளியானதையொட்டி ரசிகர்கள் அதிகாலையிலேயே கொண்டாட்டத்தை தொடங்கினர்.
அந்த வகையில் கோவை மாவட்டத்திலும், லியோ திரைப்படம் இன்று வெளியானது. மாவட்டத்தில் மொத்தம் 100 தியேட்டர்களில் விஜயின் லியோ வெளியாகியது.
படம் 9 மணிக்கு தான் வெளியாகியது என்றாலும் கோவையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் காலை 5 மணியில் இருந்தே ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் தியேட்டர் வளாகத்தில் ஒன்று திரண்டு மேள, தாளங்கள் முழங்க படத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் மேள, தாளத்தின் இசைக்கு ரசிகர்கள் ஏற்ப உற்சாக ஆட்டமும் போட்டனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த விஜய் பேனருக்கு பாலாபிஷேகமும் செய்தனர்.
படம் வெளியானதும், தியேட்டருக்கு வெளியே பட்டாசு வெடித்தும், அங்கு வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கியும் லியோ படத்தை கொண்டாடினர்.
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள தியேட்டருக்கு அதிகாலையிலேயே ரசிகர்கள் வந்தனர். அவர்கள், அங்கு லியோ படத்தை வரவேற்று பெரிய பெரிய பேனர்கள் வைத்தனர்.
தொடர்ந்து அதற்கு பாலாபிஷேகம் செய்ததுடன், அங்கு தேங்காயும் உடைத்தனர். தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி அண்டை மாநில கேரளாவில் இருந்தும் அதிகமான ரசிகர்கள் இங்கு படம் பார்க்க வந்திருந்தனர்.
தமிழக-கேரள ரசிகர்கள் அனைவரும் இணைந்து, பாடல்களை இசைக்க விட்டும், மேள தாளங்களை அடிக்க வைத்து ஒன்றாக கூடி ஆட்டம், பாட்டமாக படத்தினை வரவேற்றனர். இதனால் அந்த பகுதியே திருவிழாபோல் காட்சியளித்தது.
இதேபோல் கருமத்தம்பட்டி, நீலாம்பூர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் உற்சாகம் களை கட்டியது. அங்கு பேனருக்கு பாலாபிஷேகம், 500 தேங்காய் உடைத்து தங்கள் வரவேற்பை படத்திற்கு அளித்தனர்.
புறநகர் பகுதிகளில் உற்சாகம் களைகட்டிய போதும், மாநகர பகுதிகளில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரசிகர்கள் திரைப்படத்தை கண்டு ரசித்து சென்றனர்.
மாநகரில் பாலாபிஷேகம், மேள, தாளங்கள் முழங்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து, ரசிகர்கள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக நீண்ட வரிசையில் காத்திருந்து, படத்தை பார்த்தனர்.
சரியாக 9 மணிக்கு படம் வெளியானதும், திரையில் விஜயை பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் விசில் அடித்தும், பேப்பர்களை பறக்கவிட்டும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
- சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தமிழகத்தில் காலை 9 மணிக்கு படம் ரிலீஸ்
- மேளம் தாளத்துடன் ரசிகர்கள் தியேட்டர்கள் முன் குவிந்தனர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏழு மணி காட்சிக்கு அனுமதி வழங்காததால் காலை 9 மணிக்கு படம் வெளியானது.
விஜய் ரசிகர்கள் காலையில் இருந்ததே திரையரங்குகள் முன் திரண்டனர். மேளம், தாளத்துடன் ஆடிப்பாடி கொண்டாடினர்.
9 மணி ஆனதும் ரசிகர்கள் திரையரங்கு சென்று படம் பார்த்து வருகின்றனர். புதுக்கோட்டையில் படம் பார்க்க ஒரு ஜோடி வந்தது. இந்த ஜோடி திரையரங்கில் வைத்து மோதிரம் மாற்றிக் கொண்டு திருமண நிச்சயம் செய்து கொண்டது. திருமண நிச்சயம் செய்து கொண்ட அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் ரசிகர்களுடன் இணைந்து அந்த ஜோடி படம் பார்த்தது.
- தமிழகம், புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு திரையிடப்படவில்லை
- கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
அதேவேளையில் அண்டை மாநிலமான கேரளாவில் இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று காலை சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
விஜய் ரசிகர்கள் இன்று அதிகாலை முதல் தியேட்டர் முன் பெருமளவில் திரண்டு படத்தை பார்க்க வந்திருந்தனர். காலை ஏழு மணி காட்சிக்கும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டனர்
சிறப்புக் காட்சி முடிந்து வெளியில் வந்த ரசிகர்களிடம், படம் எப்படி இருக்கிறது? என்று தந்தி டி.வி. சார்பில் கேட்கப்பட்டது. அப்போது ரசிகர்கள் படம் வேற லெவல். வசூல் ஆயிரம் கோடி என படத்தை பாராட்டினர்.
அதேபோன்று ஆந்திரா, கர்நாடக மாநிலத்திலும் லியோ படம் இன்று காலை வெளியானது.
#WATCH | Kerala: Fans throng Sree Padmanabha Theatre in Thiruvananthapuram to watch the early morning show of Tamil actor Vijay's film 'Leo'. pic.twitter.com/76nIIbWGHP
— ANI (@ANI) October 19, 2023
- கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜப்பான்’.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
'ஜப்பான்' படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் 'ஜப்பான் ரேஞ்ஜே வேற' போன்ற காமெடி வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- ஜெயவீரன் காமராஜ் 'மோகினிப்பட்டி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- இந்த படத்தில் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
இயக்குனர் ஜெயவீரன் காமராஜ், அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். ஒரு பிலிம் அகாடமியில் சினிமா சார்ந்த படிப்பை முடித்துவிட்டு இயக்குனர் எஸ் .ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் .இவர் மனமெங்கும் அவள் ஞாபகம், அறியாமை ,நீரின்றி அமையாது உலகு போன்ற குறும்படங்கள் மற்றும் இசை ஆல்பங்களை இயக்கியவர். இவர் தற்போது 'மோகினிப்பட்டி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு பேண்டஸி திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.
இப்படம் பற்றி இயக்குனர் ஜெயவீரன் காமராஜ் பேசியதாவது, மோகினிப்பட்டி என்பது கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு கிராமம். அந்த ஊரில் ஒரு சாபம் உள்ளது. அதை அந்த ஊர்க்காரர்கள் மட்டுமே அறிவார்கள்.அதை முன்னிட்டு அவர்களிடம் ஒரு ரகசியக் கட்டுப்பாடு உள்ளது. அதன்படி அங்கு யாரும் காதலித்து திருமணம் செய்ய முடியாது.
இப்படிப்பட்ட சூழலில் அங்கு நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். ஊர்க் கட்டுப்பாடு குறுக்கே நிற்கிறது. அவர்கள் அந்தச் சாபத்தை எப்படி எதிர்கொண்டார்கள்? அந்த ஊர்ச் சம்பிரதாயத்தை சமாளித்தார்களா? வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் கதை. இந்தக் காலத்தில் இப்படி ஒரு கதையா என்று நினைக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஊருக்குள்ளும் பிறருக்குத் தெரியாத ரகசியங்கள் மறைந்து கொண்டுள்ளன. அப்படி ஒரு ரகசியத்தை வைத்துதான் இப்படி ஒரு படமாக உருவாக்கி இருக்கிறோம்.
இந்தப் படத்திற்கான கதையை எழுதி அதில் ஒரு பாத்திரத்திற்கு எஸ்.ஏ. சந்திரசேகரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அவர் நடிப்பாரா என்ற சந்தேகமும் தயக்கமும் எனக்கு இருந்தது. அப்படி ஒரு தயக்கத்தோடு தான் அவரிடம் நான் கதை சொன்னேன். அவர் கதை பிடித்து, அந்தப் பாத்திரமும் பிடித்து ஓகே சொல்லி விட்டார். அவர் இந்தப் படத்திற்கு உள்ளே வந்த பிறகு வேலைகள் மளமளவென ஆரம்பித்தன. ஆனால் அவரை நடிக்க வைக்கும் போது எனக்குப் பதற்றம் இருந்தது.
நாம் உயரத்தில் வைத்து இயக்குனராகப் பார்த்த ஒருவரை வைத்து நாம் எப்படி இயக்குவது என்று தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் அதை எல்லாம் சகஜம் ஆக்கிவிட்டு அவர் நடித்துக் கொடுத்துவிட்டார். சில காட்சிகளில் எனக்குத் திருப்தி ஏற்பட்ட போது கூட மேலும் சிறப்பாக அடுத்த ஷாட்டில் நடித்துக் கொடுத்து அந்தப் பாத்திரத்தினை மேலும் உயரத்திற்குக் கொண்டு சென்று விட்டார் .அந்த வகையில் அவரை நடிக்க வைத்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இதன் படப்பிடிப்பு திருச்சி பகுதியில் நடைபெற்றது. வெப்மூவிக்கான படைப்பு சுதந்திரத்தோடு இது உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த படம் ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல் விறுவிறுப்பாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
- விஜய் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'.
- 'லியோ' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் ரசிகர்கள் சார்பில் 19-ம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் வல்லவன் தெரிவித்தார்.
இதனிடையே தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு காட்சிகள் வெளியாவதால் புதுச்சேரியில் காலை 7 மணிக்கு படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக 'லியோ' படத்தின் காலை 7 மணி காட்சியை ரத்து செய்ய புதுச்சேரி திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் நாளை காலை வெளியாகும் நேரத்தில் புதுச்சேரியிலும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சசிகுமார் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இந்த படத்தில் லிஜோமோல் ஜோஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சத்யா சிவா. இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சுதேவ் நாயர், பருத்திவீரன் சரவணன், கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு.ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சத்யா சிவா- சசிகுமார்- லிஜோமோல் ஜோஸ்
90-களில் நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு திரில்லர் டிரமாவாக இப்படம் உருவாகுகிறது. 90- களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்துப் படத்தின் காட்சிகளைப் படக்குழு படமாக்கி வருகிறது.
பாண்டியன் பரசுராம் முதல் முறையாக விஜய கணபதிஸ் பிக்சர்ஸ் (Vijayaganapathy's Pictures) சார்பில் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
- நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
'விஷால் 34' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஷால் பதிவு
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, காரைக்குடியில் நடைபெற்ற 'விஷால் 34' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ள நடிகர் விஷால் விரைவில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
Last shot and we had God's blessings in the form of rain. Wat a way to complete the second long schedule in Karaikudi for my film #Vishal34 in Hari sir's direction produced by @stonebenchers.
— Vishal (@VishalKOfficial) October 18, 2023
Teaser and First look to be out very soon. God bless @stonebenchers pic.twitter.com/e6kY1U5GC5
- சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
- தந்தை வெங்கடேசன் தனது மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.
கிருஷ்ணகிரி அருகே சென்னசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி லட்சுமி. இவரது மகன் சுரேஷ் (வயது40). இவர் 'பூ போன்ற காதல்' என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன் தியேட்டர்களில் ரிலீசானாது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி சரியாக ஓட வில்லை என்பது தெரிய வந்தது. இதனால் மனவேதனையடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன சுரேஷின் தந்தை வெங்கடேசன் தனது மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.
மேலும், மாயமான சுரேஷ், வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன்பு தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள், இந்த படத்தை முடிப்பதற்காக கடனாக ரூ.5 லட்சம் வாங்கியிருந்தேன். கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது. இந்த படத்தை நம்பிதான் இருந்தேன். 20 டிக்கெட் கூட வர மாட்டிங்குது, இப்படியே போனால் கண்டிப்பாக என்னால் உயிர்வாழ முடியாது. எனக்கு என்ன பண்றது என தெரியவில்லை. நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளேன். நிறைய பேர் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றி. நாளைக்கு நான் கண்டிப்பாக உயிரோட இருக்கமாட்டேன்.
உயிரோடு இருக்கனும்னா இந்த வீடியோவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி எனக்கு உதவி செய்ய வேண்டும். இதன் மூலம் நிறையபேர் என் திரைப்படத்தை பார்ப்பார்கள். இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் தற்போது பரபரப்பாக வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சுரேஷின் தாய் லட்சுமி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். படம் சரியாக ஓடவில்லை என்பதால் நடிகர் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நடிகர் குந்தரா ஜானி கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார்.
- ஒருவருடம் இணைக்கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகர் குந்தரா ஜானி (வயது 71). கொல்லம் பகுதியில் வசித்து வந்த இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
பட்டப்படிப்பு படித்து முடித்துள்ள நடிகர் குந்தரா ஜானி கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார். கணிதத்தில் பட்டப்படிப்பு முடித்த அவர் ஒருவருடம் இணைக்கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார். பின்பு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தபோது நண்பரின் தந்தை மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
1979-ம் ஆண்டு நித்யவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 23 ஆகும். ஆனால் அந்த படத்தில் அவர் 55 வயது கேரக்டரில் நடித்திருந்தார். பல படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்து சென்னையில் ஒரு வருடம் ஓடிய புகழ் பெற்ற துப்பறியும் திரைப்படமான 'ஒரு சிபிஐ டைரி குறிப்பு' திரைப்படத்தில் டிரைவர் வாசு வேடத்தில் கலக்கியிருந்தவர் ஜானி. மேலும் மோகன்லால் உள்ளிட்ட பல பிரபல மலையாள நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2022-ம் ஆண்டு மேப்படியான் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்த 'வாழ்க்கை சக்கரம்' மற்றும் 'நடிகன்' திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி ஸ்டெல்லா கொல்லத்தில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.