search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜென்டில்மேன்-2'.
    • இந்த படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார்.

    இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜென்டில்மேன்-2'. இப்படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கிறார். இப்படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்கிறார். கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 9) சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது. தமிழக தகவல் ஒளிபரப்பு மற்றும் செய்தித்துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் ஸ்விட்ச் ஆன் செய்ய, எம்.ஜி.ஆர்-ஜானகி காலேஜ் மற்றும் சத்யா ஸ்டுடியோ தலைவர் டாக்டர்.குமார் ராஜேந்திரன் கிளாப் அடிக்க, வைரமுத்து ஆக்ஷன் சொல்ல படபிடிப்பு ஆரம்பமானது. முதல் காட்சியில், நாயகன் சேத்தன், நாயகி நயந்தாரா சக்ரவர்த்தி பங்கு பெற்றனர்.



    படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பேசியதாவது, "எனது ஆரம்ப காலகட்டங்களில் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்கள் மற்றும் சத்யா மூவீஸின் பல படங்களை நான் விநியோகம் செய்துள்ளேன். என் வாழ்க்கையின் உயர்வுக்கு முக்கிய பங்களித்த இந்த சத்யா ஸ்டியோவில் ஜெண்டில்மேன்-2 படப்பிடிப்பு துவங்கியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.." என்றார். மேலும், படக்குழு தொடர்ந்து சென்னையிலேயே 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' திரைப்படம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து 'லோகேஷுக்கும் நடிகர் விஜய்க்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அதனால் தான் லோகேஷ் தன் சமூக வலைதளத்தின் பயோவில் இருந்து 'லியோ' படத்தின் பெயரை நீக்கிவிட்டதாகவும் வதந்தி பரவி வந்தது.


    இதனைத் தொடர்ந்து நெட்டிசன் ஒருவர், 'விஜய்க்கும் லோகேஷுக்கும் பிரச்சினை நடந்தது உண்மைதான். எங்களுக்கு எல்லாம் தெரியும்' என பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் போட்டு பின்னர் நீக்கி விட்டார். இதை அந்த நெட்டிசன் ஸ்கீரின் ஷாட் எடுத்து 'லியோ படத்தில் லோகேஷ் மற்றும் விஜய் அவர்கள் இருவருக்கும் நடந்த கசப்பான சம்பவத்தை வெளிச்சம் போட்டு காட்டிய என்னுடைய விளக்கப் பதிவை உண்மை அறிந்த விக்னேஷ் சிவன் அவர்கள் முதலில் லைக் செய்து பின்னர் நீக்கிய காரணம் என்னவோ...' என்று பதிவிட்டிருந்தார். இதுவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து விக்னேஷ் சிவன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அன்பான விஜய் சார் ரசிகர்களே, லோகி ரசிகர்களே குழப்பத்திற்கு மன்னிக்கவும். மெசேஜையும், அதில் உள்ள தகவலையும் பார்க்காமல் லைக் செய்து விட்டேன். லோகேஷ் கனகராஜின் வீடியோக்களை லைக் செய்யும் பாணியில் லைக் செய்தேன்.


    நான் லோகேஷின் மிகப்பெரும் ரசிகன். விஜய் சாரின் பிரமாண்ட ரிலீசான லியோவை எதிர்பார்த்துள்ளேன். நயன்தாராவின் வீடியோக்களுக்கு லைக் போடுவதைப் போன்று லோகேஷ் கனகராஜின் வீடியோவை பார்த்து மெசேஜை பார்க்காமல் லைக் செய்து விட்டேன். தவறு என்னால் ஏற்பட்டது. எனவே உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்களைப் போன்று அக்டோபர் 19 ஆம் தேதி 'லியோ' ரிலீஸுக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


    • பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான்.
    • இவர் நடித்த ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை குவித்தது.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான 'பதான்', 'ஜவான்' என இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படங்களின் வெற்றி மூலம் ஷாருக்கான் ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி வசூலை கொடுத்த நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


    இந்த நிலையில் சமீபகாலமாக நடிகர் ஷாருக்கானுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக அடிக்கடி மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு 6 கமாண்டோக்கள், 4 போலீசார் உள்ளிட்ட 11 பேர் பாதுகாப்பு அளிக்கிறார்கள்.

    அவரது பங்களா முன்பு 4 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் எம்பி-5 எந்திர துப்பாக்கி. ஏகே- 47 ரக துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருப்பார்கள். இவர்கள் மகராஷ்டிரா மாநில போலீசின் சிறப்பு பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள். இதற்கு முன்பு ஷாருக்கானுக்கு 2 போலீசார் மட்டுமே பாதுகாப்பு வழங்கினார்கள்.


    கடந்த 5-ந்தேதி மாநில உள்துறை, மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்ட துறைகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் நடிகர் ஷாருக்கானுக்கு சமீபத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு அடுத்த உயர்மட்ட குழு பரிந்துரை மற்றும் மறு ஆய்வுக்குழு முடிவு வரும் வரை அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நடிகர் ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • திமிரு படம் வெற்றிக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 'மார்க் ஆண்டனி' படம் இப்போது வெற்றி பெற்றுள்ளது.
    • படம் எடுக்க வருபவர்களை ஊக்குவிக்காமல் படம் எடுக்க வரவேண்டாம் என்று விஷால் பேசுவது தவறு.

    ஜெகநாதன் தயாரிப்பில் முத்து வீரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் "டப்பாங்குத்து'. முழுக்க முழுக்க நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதாநாயகனாக சங்கர பாண்டி மற்றும் தீப்தி துர்கா, காதல் சுகுமார் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் திண்டுக்கல் லியோனி, தயாரிப்பாளர் கதிரேசன், காதல் சுகுமார் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். விழாவில் காதல் சுகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நான் கோமாளி கதாபாத்திரத்தில்நடித்துள்ளேன். படத்தில் 15 நாட்டுப்புற பாடல்கள் உள்ளன. கொரோனா காலகட்டத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது கலைஞர்கள் தான். கடைசியாக கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும் திரை துறைக்கு தான்.

    இதனால் சினிமா துறையை சேர்ந்த பல கலைஞர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கினர். நானே வீட்டில் ரேசன் அரிசியை சமைத்து சாப்பிடும் சூழ்நிலைக்கு வந்தேன். இந்த நிலையில் தயாரிப்பாளர் ஜெகநாதன் இந்த படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்தார். அது மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. சிறு பட்ஜெட் படங்கள் தான் என்னை போன்ற கலைஞர்களை வாழ வைக்கிறது. எனவே சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும். சமீபத்தில் விஷால் பேசியபோது ரூ. 3 கோடி ரூ.4 கோடி வைத்துக்கொண்டு படம் எடுக்க வராதீர்கள். அப்படி எடுக்கும் படங்கள் வெளியே வருவதில்லை என பேசினார். திமிரு படம் வெற்றிக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 'மார்க் ஆண்டனி' படம் இப்போது வெற்றி பெற்றுள்ளது. அதனால் திமிராக விஷால் பேசியுள்ளார்.

    விஷால் பேச்சைக் கேட்டு படம் எடுப்பதற்கு காத்திருந்த தயாரிப்பாளர்கள் ஐந்து பேர் பயந்து போய் எனக்கு தெரிந்து படம் எடுக்காமல் திரும்பி சென்று விட்டனர்.

    எனவே படம் எடுக்க வருபவர்களை ஊக்குவிக்காமல் படம் எடுக்க வரவேண்டாம் என்று விஷால் பேசுவது தவறு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்றது.
    • சமீபகாலமாக சினிமா இசையமைப்பாளர்கள் தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

    நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பிச்சைக்காரன், சலீம், சைத்தான், கொலை, ரத்தம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. பிச்சைக்காரன்-2 படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மீண்டும் ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியை விஜய் ஆண்டனி நடத்த இருக்கிறார். நிகழ்ச்சி நடைபெறும் இடம், தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    சமீபகாலமாக சினிமா இசையமைப்பாளர்கள் தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஏ.ஆர்.ரகுமான் நடத்தினார். இந்த மாதம் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். அனிருத், யுவன்சங்கர் ராஜா, வித்யாசாகர், தேவா ஆகியோர் தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • டிரைலர் மற்றும் திரைப்படத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்.
    • படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகளை பார்க்கும் போது ஒரு குழந்தையாக மாறி விட்டேன்.

    இந்தி நடிகர் சல்மான் கான் நடிப்பில் 'டைகர்-3' படம் உருவாகி உள்ளது. இதன் டிரெய்லரை சல்மான் கான் வருகிற 16-ந் தேதி வெளியிட உள்ளார். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள 'டைகர் 3' படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

    படம் குறித்து சல்மான் கான் கூறும்போது, "யஷ்ராஜ் பிலிம்சில் உருவான ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹை ஆகிய ஸ்பை யுனிவர்ஸ் படங்களை மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதனால் அவர்களின் பார்வைக்கு விருந்தாக புதிதாக, தனித்துவமான ஆச்சர்யமான சிலவற்றை கொடுக்க வேண்டியது முக்கியமானதாக இருந்தது. டைகர் 3 படக்குழுவினர் உண்மையிலேயே ஆக்சன் தொகுப்பாக இதை உருவாக்கியுள்ளனர். அது கண்கவரும் விதமாக உள்ளது. டிரைலர் மற்றும் திரைப்படத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்.

    படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகளை பார்க்கும் போது ஒரு குழந்தையாக மாறி விட்டேன். இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத விஷயங்கள் படத்தில் உள்ளது" என்றார்.

    • சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தார்த் படத்திற்கு நல்ல வரவேற்பு.
    • சித்தா படத்தை அருண்குமார் இயக்கி இருக்கிறார்.

    எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், அஞ்சலி நாயர், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரங்கள் பஃபியா , சஹஸ்ரா ஆகியோர் நடித்திருந்த படம் 'சித்தா'. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சித்தா படத்தின் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சித்தார்த், "இது அருண்குமாரின் 'சித்தா'. வெற்றி, தோல்வி என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யாமல் படத்தின் கதைக்கருவுக்காக எடுத்தோம். நாட்டை மாற்றவோ, சமுதாயத்தைத் திருத்தவோ படம் எடுக்கவில்லை. நல்ல விஷயம் பல ஆயிரம் வகையில் நடக்கலாம் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினோம்," என்று தெரிவித்தார்.

    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜிகர்தண்டா -2.
    • இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ஜிகர்தண்டா 2 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'மாமதுர' பாடல் 9-ஆம் தேதி நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், "ஜிகர்தண்டா -2 படத்தின் முதல் பாடலுக்கு நடனமாட நேரம் நெருங்கிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகை கனகலதா 360-க்கும் மேற்பட படங்களில் நடித்திருக்கிறார்.
    • இவர் படுத்த படுக்கையாகவே வாழ்ந்து வருகிறார்.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகை கனகலதா (வயது63). கொல்லம் பகுதியைச் சேர்ந்த இவர் 1960-ம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலேயே நாடகங்களில் நடித்து வந்த நடிகை கனகலதா பின்பு சினிமா துறைக்குச் சென்றார்.

    மலையாளத்தில் 282 சினிமா படங்களில் நடித்துள்ளார். தமிழில் 12 படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் இவர் நடித்த ப்ரியம், அத்யதே கண்மணி ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. மொத்தம் 360-க்கும் மேற்பட படங்களில் நடித்திருக்கிறார்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோயால் நடிகை கனகலதா பாதிக்கப்பட்டார். அதற்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நோய் பாதித்ததால் அவரால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    தற்போது அவர் அல்சைமர் நோயால் மிகவும் அவதிக்கப்பட்டு வருகிறார். இது குறித்து அவரது சகோதரி விஜயம்மா கூறியிருப்பதாவது:-

    கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கனகலா தாவுக்கு அல்சைமர் நோயின் அறிகுறிகள் தெரிய தொடங்கியது. தூக்கம் இல்லாமல் தவித்த அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தான் அல்சைமர் நோய் பாதித்திருந்தது தெரியவந்தது.

    கனகலதா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். தற்போது அவரால் சாப்பிட முடியவில்லை. இதனால் அவருக்கு திரவ உணவு வழங்கப்படுகிறது. படுத்த படுக்கையாகவே வாழ்ந்து வருகிறார். தற்போது மிகவும் பலவீனமாக இருக்கிறார். அவருக்கு தனது பெயர் கூட நியாபகம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகை கனகலதா தனது 22 வயதில் காதல் திருமணம் செய்தார். பின்பு 16 ஆண்டுகளுக்கு பிறகு கணவரை பிரிந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை. ஆகவே சகோதரியின் பராமரிப்பில் நடிகை கனகலதா இருந்து வந்தார். தற்போது அவர் மலையாள திரை ப்பட கலைஞர்கள் சங்கம் மூலமாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் பெறுகிறார். மேலும் மலையாள திரைப்பட அகாடமி மூலமாகவும் நிதி உதவி பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இறுகப்பற்று'.
    • இப்படம் நேற்று (அக்டோபர் 6) திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (அக்டோபர் 6) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'இறுகப்பற்று' படக்குழுவை பாராட்டி நடிகர் சூர்யா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இறுகப்பற்று திரைப்படம் நிறைய அன்பைப் பெறுவதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. இயக்குனர் யுவராஜ் தயாளன் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • 'யாத்ரா'படத்தை இயக்குனர் மஹி வி ராகவ் இயக்கியிருந்தார்.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

    மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் 'யாத்ரா'. இந்த படத்தை இயக்குனர் மஹி வி ராகவ் இயக்கியிருந்தார். இதில், ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார்.


    யாத்ரா -2 போஸ்டர்

    இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஆந்திர முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆரின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணம் இசையமைக்கிறார்.

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'யாத்ரா -2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் போஸ்டர் 9-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

    • அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லீ, மெர்சல், தெறி, பிகில் என விஜய்க்கு பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான 'ஜவான்' திரைப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து ஒட்டுமொத்த பாலிவுட் படங்களின் வசூலை ஓரம்கட்டியுள்ளது. இந்த வெற்றி மூலம் அட்லீ உலக புகழ் பெற்ற இயக்குனராக இடம்பெற்றுள்ளார்.



    இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அட்லீ, விஜய் மற்றும் ஷாருக்கான் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, விஜய் - ஷாருக்கான் இருவரில், ஒருவர் என்னுடைய அம்மா. ஒருவர் என்னுடைய மனைவி. இரண்டு பேர் இல்லாமலும் நம்மால் வாழமுடியாது. இன்று நான் இங்கு இருப்பதற்கு காரணம் விஜய் சார் தான்.


    அவர் எனக்கு அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்க வாய்ப்பு கொடுத்தார். நான் அவருக்கு வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறேன். ஆனால், அவர் என்னை மிகவும் நம்பினார். ஷாருக்கான் படம் நடிக்க நினைத்தால் உலகத்தில் உள்ள எத்தனையோ இயக்குனர்கள் வருவார்கள். ஆனால் அவர் என்னை நம்பினார். இன்றுவரை அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவரது நம்பிக்கைதான் என்னை மிகுந்த பொறுப்புடனும் அன்புடனும் படத்தை செய்ய வைத்தது" என்று பேசினார்.

    ×