search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தன் பெயர் கூட நியாபகம் இல்லை- அல்சைமர் நோயால் அவதிப்படும் பிரபல நடிகை
    X

    தன் பெயர் கூட நியாபகம் இல்லை- அல்சைமர் நோயால் அவதிப்படும் பிரபல நடிகை

    • நடிகை கனகலதா 360-க்கும் மேற்பட படங்களில் நடித்திருக்கிறார்.
    • இவர் படுத்த படுக்கையாகவே வாழ்ந்து வருகிறார்.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகை கனகலதா (வயது63). கொல்லம் பகுதியைச் சேர்ந்த இவர் 1960-ம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலேயே நாடகங்களில் நடித்து வந்த நடிகை கனகலதா பின்பு சினிமா துறைக்குச் சென்றார்.

    மலையாளத்தில் 282 சினிமா படங்களில் நடித்துள்ளார். தமிழில் 12 படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் இவர் நடித்த ப்ரியம், அத்யதே கண்மணி ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. மொத்தம் 360-க்கும் மேற்பட படங்களில் நடித்திருக்கிறார்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோயால் நடிகை கனகலதா பாதிக்கப்பட்டார். அதற்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நோய் பாதித்ததால் அவரால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    தற்போது அவர் அல்சைமர் நோயால் மிகவும் அவதிக்கப்பட்டு வருகிறார். இது குறித்து அவரது சகோதரி விஜயம்மா கூறியிருப்பதாவது:-

    கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கனகலா தாவுக்கு அல்சைமர் நோயின் அறிகுறிகள் தெரிய தொடங்கியது. தூக்கம் இல்லாமல் தவித்த அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தான் அல்சைமர் நோய் பாதித்திருந்தது தெரியவந்தது.

    கனகலதா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். தற்போது அவரால் சாப்பிட முடியவில்லை. இதனால் அவருக்கு திரவ உணவு வழங்கப்படுகிறது. படுத்த படுக்கையாகவே வாழ்ந்து வருகிறார். தற்போது மிகவும் பலவீனமாக இருக்கிறார். அவருக்கு தனது பெயர் கூட நியாபகம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகை கனகலதா தனது 22 வயதில் காதல் திருமணம் செய்தார். பின்பு 16 ஆண்டுகளுக்கு பிறகு கணவரை பிரிந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை. ஆகவே சகோதரியின் பராமரிப்பில் நடிகை கனகலதா இருந்து வந்தார். தற்போது அவர் மலையாள திரை ப்பட கலைஞர்கள் சங்கம் மூலமாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் பெறுகிறார். மேலும் மலையாள திரைப்பட அகாடமி மூலமாகவும் நிதி உதவி பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×