என் மலர்
சினிமா செய்திகள்
- 'யாத்ரா'படத்தை இயக்குனர் மஹி வி ராகவ் இயக்கியிருந்தார்.
- இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் 'யாத்ரா'. இந்த படத்தை இயக்குனர் மஹி வி ராகவ் இயக்கியிருந்தார். இதில், ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார்.
யாத்ரா -2 போஸ்டர்
இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஆந்திர முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆரின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணம் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'யாத்ரா -2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் போஸ்டர் 9-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
- அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
- இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லீ, மெர்சல், தெறி, பிகில் என விஜய்க்கு பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான 'ஜவான்' திரைப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து ஒட்டுமொத்த பாலிவுட் படங்களின் வசூலை ஓரம்கட்டியுள்ளது. இந்த வெற்றி மூலம் அட்லீ உலக புகழ் பெற்ற இயக்குனராக இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அட்லீ, விஜய் மற்றும் ஷாருக்கான் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, விஜய் - ஷாருக்கான் இருவரில், ஒருவர் என்னுடைய அம்மா. ஒருவர் என்னுடைய மனைவி. இரண்டு பேர் இல்லாமலும் நம்மால் வாழமுடியாது. இன்று நான் இங்கு இருப்பதற்கு காரணம் விஜய் சார் தான்.
அவர் எனக்கு அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்க வாய்ப்பு கொடுத்தார். நான் அவருக்கு வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறேன். ஆனால், அவர் என்னை மிகவும் நம்பினார். ஷாருக்கான் படம் நடிக்க நினைத்தால் உலகத்தில் உள்ள எத்தனையோ இயக்குனர்கள் வருவார்கள். ஆனால் அவர் என்னை நம்பினார். இன்றுவரை அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவரது நம்பிக்கைதான் என்னை மிகுந்த பொறுப்புடனும் அன்புடனும் படத்தை செய்ய வைத்தது" என்று பேசினார்.
- முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி.
- இவர் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி திரைப்பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சூரி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் சூரியிடம் குழந்தைகள் அவரது கேரவனை காண்பிக்கும் படி கேட்டனர். குழந்தைகள் கேட்டதும் அவர்களை கேரவனில் ஏற்றி சூரி சுற்றி காண்பித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை சூரி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, "படப்பிடிப்பில், மகிழ்வித்து மகிழ்ந்த தருணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’.
- இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, "தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லியிருந்தோம். ஆனால் சின்ன சின்ன வேலைகள் இருந்ததால் பொங்கலுக்கு தள்ளி வைத்தோம். 'இன்று நேற்று நாளை' படத்தை பார்த்ததும் இயக்குனருக்கு போன் செய்து பேசினேன். அப்போது இயக்குனர் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறினார். அப்போதே முடிவு செய்துவிட்டேன் இவருடன் படம் பண்ண வேண்டும் என்று.
ரவிக்குமார் மேல் இருந்த நம்பிக்கையில் தான் இந்த படத்தை நான் ஒத்துக் கொண்டேன். 95 நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்துவிட்டார். இது போன்ற ஏலியன் வைத்து முன்னாடி எம்.ஜி.ஆர். ஒரு படம் செய்திருந்தார். அதன் பிறகு இப்போது நாம்தான் முயற்சி செய்கிறோம். தமிழ் சினிமாவில் அத்தனை வருடங்களுக்கு பிறகு இப்போது தான் இப்படி ஒரு கான்ஸ்செப்ட் வருது என்று முத்துராஜ் சார் சொன்னார்.
யூடியூபர்கள் எம்.ஜி.ஆருக்கு அடுத்தது நான் தான் என்று சிவகார்த்திகேயன் சொன்னார் என்று போட்டுவிடாதீர்கள். இன்னும் நிறைய சர்ப்ரைஸ் இந்த படத்தில் இருக்கிறது. குழந்தைகளுக்கு தவறான விஷயத்தை புகுத்தும் படமாக இந்த படம் இருக்காது " என்று பேசினார்.
- அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜவான்'.
- இப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.
ஜவான் போஸ்டர்
இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலை குவித்து பாலிவுட்டின் ஒட்டு மொத்த படங்களின் வசூலை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’.
- இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இதன் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
- 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 'லியோ' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான இந்த டிரைலர் சில மணி நேரங்களில் 31 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
இதே, நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் 30 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. 'லியோ' படத்தின் டிரைலரை தொடர்ந்து ரசிகர்கள் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
லியோ போஸ்டர்
இதையடுத்து இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சில மணி நேரங்களில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
It's blazing 30M+ real-time views for #LeoTrailer
— Sun TV (@SunTV) October 6, 2023
▶️ https://t.co/KqDll4jyl6#Thalapathy @actorvijay @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth #Leo pic.twitter.com/83CZn68gQL
- விக்டரி வெங்கடேஷின் 75-வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சைந்தவ்'.
- இந்த படத்தை சைலேஷ் கொலானு இயக்கி இருக்கிறார்.
விக்டரி வெங்கடேஷின் 75-வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சைந்தவ்'. 'ஹிட்வெர்ஸ்' படத்தை இயக்கிய சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நவாசுதீன் சித்திக், ஆர்யா, ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா, சாரா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் வெங்கட் பொயனபள்ளி பிரமாண்டமாக தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை கேரி பி.ஹெச். கவனித்துள்ளார்.
சைந்தவ் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'சைந்தவ்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- நானி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஹாய் நான்னா'.
- இப்படத்தின் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.
இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இதைத்தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணாடி கண்ணாடி' பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. பல மொழிகளில் வெளியாகியுள்ள இந்த பாடலின் தமிழ் வெர்ஷனை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'.
- இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சில மணி நேரங்களில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில், இந்த டிரைலரை எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது வீட்டில் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
- 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது.
- லியோ ட்ரைலரை கோயம்பேட்டில் உள்ள ராகினி திரையரங்கில் வெளியிடப்பட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது.
இதையடுத்து இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. இந்த ட்ரைலரை கோயம்பேட்டில் உள்ள ராகினி திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதனால் ராகினி திரையரங்கை சூழ்ந்த விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
மேலும், திரையரங்கினுள் குவிந்த ரசிகர்கள் ட்ரைலரை உற்சாக கண்டு ரசித்தனர். அப்போது, அங்கிருந்த சேர்களை கடுமையாக சேதப்படுத்தி உள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.