என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’.
- இப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வணங்கான் போஸ்டர்
இதையடுத்து 'வணங்கான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அருண் விஜய் ஒரு கையில் பெரியார் மற்றும் இன்னொரு கையில் விநாயகர் வைத்துள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
#vanangaan pic.twitter.com/0dBiOYw5NY
— G.V.Prakash Kumar (@gvprakash) September 25, 2023
- 9 கேரள அரசு விருதுகளை கே.ஜி.ஜார்ஜ் வென்றுள்ளார்.
- மலையாள சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.
திருவனந்தபுரம்:
மலையாள சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று கே.ஜி.ஜார்ஜ் காலமானார். அவருக்கு வயது 77.
கேரளாவின் பத்தனம்திட்டாவில் பிறந்தவரான கே.ஜி.ஜார்ஜ், கடந்த 1975-ம் ஆண்டு வெளியான 'ஸ்வப்னதானம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதை வென்றது.
மேலும் ஊழ்க்கடல், மேளா, யவனிகா, லேகாயுடே மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் ஆகிய பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இதுவரை 9 கேரள அரசு விருதுகளை கே.ஜி.ஜார்ஜ் வென்றுள்ளார். மலையாள சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தில் அருண் விஜய் நடிக்கிறார்.
- இந்த படத்தில் சமுத்திரகனி, இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 25-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் வணங்கான் படத்தில் அருண் விஜய், ரோஷினி, சமுத்திரகனி, இயக்குனர் மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சூர்யா மேற்கொள்கிறார்.
முதலில் வணங்கான் படத்தில் சூர்யா நடிக்க முடிவு செய்து, படத்திற்கான படப்பிடிப்பும் நடந்தது. அப்போது இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்து வந்தார். பிறகு, இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சூர்யா மற்றும் 2டி நிறுவனம் அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை முதலில் இயக்குனர் பாலா வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன்பின்னர், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கினார்.
இப்படத்தை பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற பல படங்களை தயாரித்த இயக்குனர் பா.இரஞ்சித் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் கபடி விளையாட்டு பயிற்சியும் பெற்று வந்தார். ஆனால், திடீரென்று இயக்குனர் மாரிசெல்வராஜ் இந்த படத்தை தள்ளி வைத்துவிட்டு உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படத்தை தொடங்கினார். இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கதாநாயகன் துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மாரி செல்வராஜும் துருவ் விக்ரமும் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Wishing #DhruvVikram an incredible year ahead and all success?
— Neelam Productions (@officialneelam) September 23, 2023
Wishes from team #Neelam#HBDDhruvVikram@mari_selvaraj @Tisaditi @NeelamStudios_ pic.twitter.com/CA0jTgcLJo
- நடிகர் விஜய் சேதுபதி பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
- விஜய் சேதுபதி நடித்த ‘உப்பென்னா’ திரைப்படம் தேசிய விருது பெற்றது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.
விஜய் சேதுபதி கடந்த 2021-ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குனர் பிச்சிபாபு சனாவின் இயக்கத்தில் 'உப்பென்னா' என்ற திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. மேலும், தேசிய விருதையும் பெற்றது.
இதைத்தொடர்ந்து இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் வெளியான 'லாபம்' திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டியை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்துவிட்டார். இது குறித்து அவர் அப்போது விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, "லாபம் படத்தில் கீர்த்தி ஷெட்டியை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என பட நிறுவனம் கூறியது. அதே நேரத்தில் தெலுங்கில் உப்பென்னா படத்தில் அவருக்கு தந்தையாக நடித்துக் கொண்டிருந்தேன். அப்பாவாக நடிக்கும் போது எப்படி என்னால் ரொமான்ஸ் செய்ய முடியும் என்று கூறி மறுத்துவிட்டேன்.
'உப்பென்னா'பட கிளைமேக்ஸ் காட்சியில் நான் கீர்த்தியிடம், என்னை உங்களின் தந்தையாக நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். கீர்த்திக்கு என் மகன் வயது தான் இருக்கும். கீர்த்தியை என் மகளாகதான் நான் பார்த்தேன். என்னால் அவருடன் நிச்சயமாக என்னால் ரொமான்ட்டிக்காக நடிக்க முடியாது" என்று பேசினார்.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’.
- இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அயலான் போஸ்டர்
இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, 'அயலான்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
#AyalaanFromPongal #AyalaanFromSankranti ??#Ayalaan ? pic.twitter.com/bbyf0PAoHP
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 23, 2023
- ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
- இப்படத்தில் பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.
ஜவான் போஸ்டர்
இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இப்படத்தின் வசூல் ரூ.1,000 கோடியை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, 'ஜவான்' திரைப்படம் ரூ.953 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Let the celebrations continue 'cuz there's no stopping JAWAN! ?
— atlee (@Atlee_dir) September 23, 2023
Book your tickets now!https://t.co/uO9YicOXAI
Watch #Jawan in cinemas - in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/mvR9ATOc0D
- நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல்' பிலிம்ஸ் பல படங்களை தயாரித்து வருகிறது.
- போலியான விளம்பரத்தை நம்பி பலர் பணத்தை செலுத்தியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல்' பிலிம்ஸ் பல படங்களை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று போலி விளம்பரம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இந்த விளம்பரத்தை நம்பி பலர் பணத்தை செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி சி.இ.ஓ நாராயணன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது செய்யப்பட்ட சுதாகர் மற்றும் புகழேந்தி
இந்நிலையில், கடலூரை சேர்ந்த புகழேந்தி மற்றும் விருத்தாசலத்தை சேர்ந்த சுதாகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களை விசாரணை செய்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இவர்கள் பல வாட்ஸ்அப் குழுக்கள் வைத்து டிரெய்டிங் ஆலோசகராக செயல்பட்டு வந்துள்ளனர். இதில் பலர் பணத்தை இழந்ததால் இந்த பணத்தை மீட்பதற்கு இவர்கள் போலியான விளம்பரம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபோன்று பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலி விளம்பரங்களை பரப்பி சுமார் மூவாயிரம் பேரிடம் ரூ.10 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர்களை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
- இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அனிமல்.
- இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அனிமல் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'அனிமல்' திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா 'கீதாஞ்சலி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
Rashmika as Geetanjali :-#AnimalTeaserOn28thSept#AnimalTheFilm #RanbirKapoor @RashmikaMandanna @bobbydeol @TriptiDimri #BhushanKumar
— Sandeep Reddy Vanga (@imvangasandeep) September 23, 2023
@SandeepReddyVanga @PranayReddyVanga #KrishanKumar @anilandbhanu @tseriesfilms @VangaPictures pic.twitter.com/UtLQvLac5C
- ’சந்திரமுகி -2’ திரைப்படம் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது, சந்திரமுகி முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்பந்தமே இல்லை. சந்திரமுகி என்ற பெயர் மட்டுமே ஒன்றாக இருக்கும். ஜோதிகா, சந்திரமுகியாக நினைத்துக் கொண்டார். ஆனால், இந்த பாகத்தில் உண்மையான சந்திரமுகி வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் கதை. வேட்டையன் கதாபாத்திரத்தில் சிறிய சஸ்பென்ஸ் இருக்கிறது.
ரஜினி சார் நடிப்பை விட அதிகமாக நடிக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. அது வரவும் செய்யாது. அவரது நடிப்பை அடித்துக்கொள்ள முடியாது. ரஜினி சார் ரஜினி சார் தான். மாமன்னன் பட வடிவேலுவுக்கும் சந்திரமுகி வடிவேலுவுக்கும் என்ன வித்தியாசம் என்றால் 'மாமன்னன்' படத்தில் வடிவேல் அழுதால் நமக்கு அழுகை வரும் சந்திரமுகியில் வடிவேல் அழுதால் நமக்கு சிரிப்பு வரும்" என்று கூறினார்.
- இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் அடுத்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில், "நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்.. நீ படையா வந்தா சவ மழ குவியும் " என்று பதிவிட்டு பாடல் விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
I have tasted steel before I have the scars …..??? U will learn to fear my name and ur eyes will never see the same .. ??
— G.V.Prakash Kumar (@gvprakash) September 23, 2023
நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்??
நீ படையா வந்தா சவ மழ குவியும் ??
Killer killer captain millerrrrrrrrr …..
Audio preparations onway ……
- கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
- இப்படத்தின் பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இப்படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் வெளியானது.
துருவ நட்சத்திரம் போஸ்டர்
இப்படத்தின் பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். இதையடுத்து இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.