search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் சங்க பேரவை கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் நடக்கிறது.
    • துணைத்தலைவர் கருணாஸ் ஆண்டறிக்கை வாசித்து வரவு செலவு கணக்கு அறிக்கை சமர்பிக்கிறார்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பேரவை கூட்டம் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் நடக்கிறது. தலைவர் நாசர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. துணைத்தலைவர் கருணாஸ் ஆண்டறிக்கை வாசித்து வரவு செலவு கணக்கு அறிக்கை சமர்பிக்கிறார்.

    பொருளாளர் கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும் பொதுச்செயலாளர் விஷால் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்தும் பேசுகின்றனர். துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி அனைத்து சினிமா சங்கங்களின் ஒருங்கிணைப்புடன் அன்று மட்டும் படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான படம் 'கருமேகங்கள் கலைகின்றன'.
    • இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


    இந்நிலையில், 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தை பார்த்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இயக்குனர் தங்கர்பச்சான் படைத்திருக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தை பார்த்தேன்; ரசித்தேன். இப்போது வெளியாகும் படங்கள் கோரம், ரத்தம், கொலை, வன்முறை, ஆபாசம், இரட்டைப் பொருள் தரும் வசனங்களால் நிறைந்துள்ள நிலையில், இந்தத் திரைப்படம் குடும்ப உறவுகளின் மகிமை, பாசம், கலாச்சாரம் ஆகியவற்றை பேசுகிறது. இந்தத் திரைப்படத்தை பொதுமக்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க வேண்டும்.


    கருமேகங்கள் கலைகின்றன படம் பார்த்த அன்புமணி ராமதஸ்

    இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கவுதம் வாசுதேவ் மேனன், ஆர்.பி. உதயகுமார், நடிகர் யோகிபாபு ஆகியோர் அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது!" என்று பதிவிட்டுள்ளார்.





    • நடிகை திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார்.
    • பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

    கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்.


    ஜெனிவாவில் திவ்யா ஸ்பந்தனா

    தற்போது 40 வயதான நடிகை திவ்யா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானதாக செய்தி பரவி வந்தது. இந்நிலையில், நடிகை திவ்யா ஜெனிவாவில் நலமுடன் இருப்பதாகவும் அவர் இறந்ததாக வெளியான செய்தி வதந்தி என்றும் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார்.
    • இவரது பேச்சுக்கு இந்தியா அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு இந்தியா அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். மேலும், பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


    இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சனாதான ஒழிப்பு மாநாடு சனாதான கொள்கையை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை வரவேற்கின்றோம்! காலங்காலமாக இச்சமூகத்தில் சனாதான கொள்கையான சாதிய படிநிலை ஒடுக்கமுறையை ஒழித்து சமூக சமத்துவத்தை நிலைநிறுத்த போராடியவர்களின் வரலாறு உள்ளது.


    புத்தர், பண்டிதர் அயோத்தி தாசர், பாபாசாகேப் அம்பேத்கர், தாத்தா ரெட்டமலை சீனிவாசன், தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் சாட்சியமாக உள்ளார்கள். இந்தியாவில் மூட நம்பிக்கை வெறி அடங்கி, சமத்துவ சமதர்ம ஆட்சிமுறை அமைய, பகுத்தறிவு மலர, உண்மை மதச்சார்பின்மை ஓங்க பாபாசாகேப் அம்பேத்கரின் பெளத்தம் தத்துவம் உள்ளது. பெளத்தமே சனாதானத்தை ஒழிக்கும். சனாதான கொள்கையை ஒழித்து சமூக ஜனநாயகத்தை உருவாக்குவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.





    • ’சந்திரமுகி -2’ திரைப்படத்தில் நடிகை கங்கனா சந்திரமுகியாக நடித்துள்ளார்.
    • இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையில் 'சந்திரமுகி -2' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.


    இதில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், "சந்திரமுகி -2 திரைப்படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. கங்கனா இந்த படத்தில் வந்தது மிகப்பெரிய பிளஸ். இந்த படத்தில் ஜோதிகா போன்று கங்கனா நடித்துள்ளாரா? என்று அனைவரும் என்னிடம் கேட்கிறார்கள். ஜோதிகாவையும், கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது. ஜோதிகா, தன்னை சந்திரமுகியா நினைத்துக் கொண்டார். சந்திரமுகி எப்படி இருப்பார் என்று நடித்து காண்பித்தார். இந்த படத்தில் தான் ஒரிஜினல் சந்திரமுகி யாருனு காண்பிக்கிறார்கள். கங்கனா 'சந்திரமுகி'கதாபாத்திரத்தை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி" என்று பேசினார்.

    • திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம்.
    • சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

    இந்திய திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.


    மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் "நாம் இந்தியாவை காக்க பிறந்தவர்கள். தூய்மையான காற்றை 'இந்தியா' சுவாசிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.


    குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பெயர் மாற்றத்திற்கு பிரபலங்கள் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.




    • இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முரளீதரன்
    • மும்பையில் நடைபெற்ற சச்சின் தெண்டுல்கர், முரளீதரன், ஜெயசூர்யா பங்கேற்பு

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அழிக்க முடியாத வரலாற்று சாதனையை படைத்தவர் முத்தையா முரளீதரன். இவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு "800" என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தின் டிரைலரை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய சச்சின் தெண்டுல்கர் ''அவர்களுடன் போதுமான நேரம் செலவழிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பான அம்சம் என்னவென்றால், பல வருடங்களுக்குப் பிறகும் நாங்கள் நல்ல நண்பர்களாகத் தொடர்கிறோம், ஒருவரையொருவர் சகஜமாக ரசிக்கிறோம். நிச்சயம் அனைவரும் படத்தைப் பார்க்கப் போகிறார்கள்.'' என்றார்.

    இந்த விழாவில் இலங்கை அணியின் அதிரடி வீரராக திகழ்ந்த சனத் ஜெயசூர்யாவும் கலந்து கொண்டார்.

    • சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது.
    • இந்த பிரிவுகளிலிருந்து பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல பாடகர்களால் பல பாடல்கள் பாடி வருகின்றனர்.

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்.


    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. இந்த பிரிவுகளிலிருந்தும் பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல பாடகர்களால் பல பாடல்கள் பாடி வருகின்றனர்.

    இந்நிகழ்ச்சியில், இளம் சிறுமி சனு மித்ரா தனது அற்புத குரலில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். கடந்த வார நிகழ்ச்சியில் அவரின் கதையை பகிர்ந்து கொண்டபோது, மொத்த அரங்கமும் சோகத்தில் ஆழ்ந்தது. சனு மித்ராவின் இசை ஆசைக்கு, உறுதுணையாக இருந்த பாசமிகு தந்தை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் கட்ட ஆடிசனுக்கு அவரைக் கூட்டி வந்து செல்கையில், விபத்தில் பறிபோன கதையைப் பகிர்ந்து கொண்டார்.


    சூப்பர் சிங்கர் இசைப்போட்டியில் ஜெயிக்க வேண்டும் எனும் அவரது தந்தையின் கனவை நனவாக்க, தன் தாயின் துணையுடன் போராடும் சனு மித்ராவின் பயணம் அனைவரையும் உருக வைத்தது. இதைத் தொடர்ந்து தொகுப்பாளிணி பிரியங்கா, என் தந்தையையும் என்னுடைய 11 வயதில் ஹார்ட் அட்டாக்கில் இழந்தேன். என் அம்மா தான் தந்தையை போல் பார்த்து கொண்டார். தந்தை நம்மை எப்போதும், நம்மோடு இருந்து, ஆசிர்வதிப்பார் என்று ஆறுதல் சொன்னார்.



    இந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் இசையமைப்பாளர் தமன், தன் தந்தை குறித்துப் பகிர்ந்து கொண்டார். அதில், ரயிலில் பயணிக்கையில் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டு என் தந்தை என்னுடைய 9 வயதில் தவறிவிட்டார் என தன் சோகத்தை பகிர்ந்தவர், சனுவிடம் "நாங்கள் அனைவரும் உன் கூட இருப்போம், எதற்கும் கவலைப்படக்கூடாது" என்று ஆறுதல் கூறினார். மேலும் ஆண்டனி தாசன் அவர்கள் அந்த சிறுமியின் துக்கத்தைப் போக்கும் விதமாக, அவர் தந்தை குறித்து ஒரு அருமையான பாடலை பாடி அனைவரையும் உருகவைத்தார். இந்த வாரம் நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்ததாக அமைந்தது.

    • கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சரோஜா’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

    முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சரோஜா'. இப்படத்தில் வைபவ், பிரகாஷ் ராஜ், எஸ்.பி.சரண், பிரேம் ஜி, காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆக்ஷன், காமெடி ஜானரில் உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.


    இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அதிலும் 'கோடான கோடி' பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி இன்று வரையிலும் மக்களை வைப்பாக்கும் ஒரு பாடலாக இருக்கிறது. 'சரோஜா' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை மும்பையில் படக்குழு கொண்டாடியுள்ளது. இதில் இயக்குனர் பா.இரஞ்சித் கலந்து கொண்டுள்ளார்.


    மேலும், விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.





    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன்.
    • இவர் தற்போது புராஜெக்ட் கே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமிதாப் பச்சன் சமூக ஊடகத்தில் தனது பணி சார்ந்த விசயங்கள், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை அவ்வப்போது ரசிகர்களுக்கு பகிர்ந்து கொள்வது வழக்கம்.


    இந்நிலையில், இவர் தற்போது தனது சமூக வலைதளத்தில் 'பாரத் மாதா கி ஜெய்' என்று இந்தியில் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத்திய அரசின் முடிவுக்கு அமிதாப் பச்சன் ஆதரவு தெரிவிப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


    குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.




    • நாம் பாரதியர்கள் என சேவாக் கூறியுள்ளார்.
    • சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த முடிவுக்கு பல தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாரத் என மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் டுவிட் செய்திருந்தார். அதில், ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது என கூறியிருந்தார்.

    சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஏன் இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    விஷ்ணு விஷால் கிரிக்கெட் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் ஜீவா என்ற படத்தில் கிரிக்கெட்டராக நடித்திருந்தார். இந்த படம் தமிழக அளவில் வெற்றி கண்டது. ஏன் தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு படமாக இருந்தது என்றே கூறலாம்.

    • நடிகர் விஷ்ணு விஷால் ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், எஃப்ஐஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் 'பாரத்' பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நாட்டின் பெயரை மாற்றுவது எப்படி பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும்? இது மிகவும் விசித்திரமாக உள்ளது. இந்தியா எப்போதும் 'பாரத்' ஆகவே இருந்தது. நம் நாட்டை இந்தியா என்றும் பாரத் என்றும் நாம் அறிவோம். திடீரென ஏன் இந்தியா என்ற பெயரை துறக்க வேண்டும்?" என்று குறிப்பிட்டுள்ளார்.

    குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.




    ×