search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள படம் 'ஜவான்'.
    • இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

    தமிழ் திரையுலகில் குறைந்த படங்களை கொடுத்தாலும் மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் நெல்சன். இவர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

    'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் நெல்சன் இந்த திரைப்படத்தை நான் இயக்குவதற்கு முக்கிய காரணமே விஜய் தான் அவர் தான் இந்த படத்தை எடுப்பதற்கு எனக்கு ஊக்கம் கொடுத்தார் என்று மேடை அதிரும்படியாக பேசியிருந்தார்.


    இந்நிலையில், இதுபோன்றொரு விஷயத்தை இயக்குனர் அட்லீ தெரிவித்துள்ளார். அதாவது, சென்னையில் நடைபெற்ற 'ஜவான்' ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லீ "என் அண்ணன் விஜய்தான் ஜவான் உருவாக முக்கிய காரணம். நீ என்ன பண்ணுவனு தெரியாது, இந்த படத்த நீ பண்ணணும்னு விஜய் அண்ணன் சொன்னாரு," என்று தெரிவித்தார்.

    இயக்குனர் நெல்சன் 'ஜெயிலர்' மூலம் சாதித்துவிட்டார். அதுபோன்று அட்லீ 'ஜவான்' மூலம் வரலாறு படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    • அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • ஐஸ்வர்யா அர்ஜுன் 'பட்டத்து யானை' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் -நிவேதிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் 2013- ஆம் ஆண்டு 'பட்டத்து யானை' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான 'சொல்லிவிடவா' என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்போது அர்ஜுன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.


    நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இந்த செய்தியை நடிகர் செந்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட செந்தில், உமாபதி, நடிகர் அர்ஜுன் மகளை திருமணம் செய்யப்போகிறார் என்று கூறினார்.


    நடிகர் உமாபதி 2017-ஆம் ஆண்டு வெளியான 'அதாகப்பட்டது மகாஜனங்களே' என்ற படத்தின் மூலம் அறிமுகமான. பின்னர், 'மணியார் குடும்பம்', 'திருமணம்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். உமாபதி 2021-ஆம் ஆண்டு அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, 75 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.





    • நடிகர் ரஜினி சமீபத்தில் பெங்களூர், ஜெயநகர் பேருந்து டிப்போவுக்கு சென்று பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடினார்.
    • பின்னர் பேருந்து இயக்குனர் மற்றும் நடத்துனருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது.


    ரஜினி படப்பிடிப்பு இல்லாத போது பெங்களூரில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது தன்னுடன் வேலை பார்த்த நண்பர்களின் வீட்டிற்கு சென்று வருவார். சமீபத்தில் இவர் பெங்களூர், ஜெயநகர் பேருந்து டிப்போவுக்கு சென்று பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடினார். பின்னர் பேருந்து இயக்குனர் மற்றும் நடத்துனருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.


    தற்போது இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தன் பிறந்த ஊரான நாச்சிகுப்பம் கிராமத்திற்கு முதல்முறையாக சென்றுள்ளார். அங்கு தன் அண்ணன் சத்யநாராயண ராவ் உடன் சேர்ந்து பெற்றோர் நினைவிடத்தில் பூஜை செய்து வழிபாடு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘ஜவான்’.
    • இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத், சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, பாடலாசிரியர் விவேக், சண்டை பயிற்சி இயக்குனர் அனல் அரசு, படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குனர் முத்துராஜ், நடன இயக்குனர் ஷோபி, 'ஜவான்' படத்தை தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தரரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் அனிருத் பேசியதாவது:- என்னுடைய சகோதரர் இயக்குனர் அட்லீக்கும் நன்றி. சென்னையிலிருந்து மும்பைக்கு இயக்குனர்கள் ரீமேக்கிற்காக சென்றிருக்கிறார்கள். ஆனால் சென்னையிலிருந்து புறப்பட்டு இந்தியாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை சந்தித்து, கதை சொல்லி, அவரது தயாரிப்பில் படத்தை இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல சவாலானது. பத்து ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் என்னை பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அனைவரும் கடினமாக உழைத்து ஜவானை உருவாக்கி இருக்கிறோம்.

    ஷாருக்கான் வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்குமா என எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதைவிட முதலில் இசையமைப்பாளராக வருவேனா..! என்பதே சந்தேகமாக இருந்தது. தற்போது இசையமைப்பாளராகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் அதுவும் ஷாருக்கான் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அங்கு அறிமுகமாகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.


    கிங் கான் ஷாருக்... நான் உங்களை தவற விடுகிறேன். நீங்கள் தினமும் இரவில் பேஸ் டைம் இணைப்பில் வருகை தந்து ஒரு மணி நேரம் பேசுவீர்கள். அந்த பேச்சை தற்போது மிஸ் செய்கிறேன். ஷாருக்கான் மிகவும் அன்பானவர். குடும்பத்தில் ஒருவராக பழகக்கூடியவர். ஒரு முறை லண்டனுக்கு சென்றிருந்தபோது அங்கு அவர் எனக்காக ஷாப்பிங் சென்று அங்கிருந்து எனக்கு போன் செய்து என் உடை அளவை தெரிந்து கொண்டு எனக்காக பிரத்தியேகமான ஆடையை வாங்கி பரிசாக அளித்தார். அந்த அன்பு ஈடு இணையற்றது. இந்த படத்தில் ஷாருக்- அட்லீ இணைந்திருப்பதால் இந்தி திரைப்படமாக பார்க்காமல் இந்திய சினிமாவாக கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

    • 'தி லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா பிரபலமடைந்தார்.
    • தற்போது பல இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

    சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. அதன்பின்னர் பெங்காலி, கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் 'தி லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா பிரபலமடைந்தார். தற்போது பல இந்தி படங்களில் நடித்து வருகிறார்.



    ஊர்வசி ரவுத்தேலா அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறி ட்ரோல்களில் மாட்டிக் கொள்வார். அப்படி தற்போது அவர் கூறிய கருத்து ஒன்றை பகிர்ந்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதாவது, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஊர்வசி ரவுத்தேலாவிடம் செய்தியாளர் ஒருவர் 'ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகையாக எப்படி உயர்ந்தீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார்.


    அதை ஏற்றுக்கொள்வது போல பதிலளித்த அவர், 'இது நல்ல விஷயம். ஒவ்வொரு நடிகர், நடிகையரும் இப்படிப்பட்ட ஒரு நாளை காண ஆசைப்படுவார்கள்' என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் 'அப்படி என்றால் 60 நிமிடத்திற்கு ரூ.60 கோடியா வாங்குவார். பொய் சொல்வதற்கு அளவில்லையா?" என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    • நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜவான்'.
    • இப்படம் செப்டம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.


    இந்நிலையில், 'ஜவான்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஷாருக்கான் அதிரடி ஆக்ஷனில் கலக்கும் இந்த டிரைலரில் 'எல்லாரும் அவனுக்கு Fan ஆயிட்டாங்க' என்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும், இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.





    • நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
    • இவர்களுக்கு உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, ரஜினி, விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    நயன்தாரா- விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து குழந்தைகளை கவனித்து வரும் நயன்தாரா சமூக வலைதளத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தார். இவர்களின் மகிழ்ச்சிகரமான தருணங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் மட்டுமே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார்.


    நயன்தாரா பதிவு

    இந்நிலையில், நயன்தாரா தற்போது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். இதில் முதல் பதிவாக தனது குழந்தைகள் உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் ஆகியோருடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் எலன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஸ்டார்’.
    • இந்த படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பி.ஜி.எம். கிங் என்று ரசிகர்களால் போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா இசையை கடந்து திரையுலகில் பல்வேறு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.


    அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரித்து வெளியான முதல் படம் 'பியார் பிரேமா காதல்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் எலன் இயக்கி இருந்தார்.


    'பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கவின் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு 'ஸ்டார்' என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.




    • நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.


    இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் வெங்கட் பிரபு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'தளபதி 68 படத்தில் சிறப்பாக செயல்பட காத்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.
    • படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

    தெலுங்கில் ஹிட் பட சீரிஸ்களை இயக்கியவர் சைலேஷ் கொலனு. இவர் அடுத்ததாக சைந்தவ் என்கிற தெலுங்கு படத்தை பான் இந்தியா முறையில் எடுத்து வருகிறார்.

    இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கிறார். விக்டரி வெங்கடேஷின் 75-வது படமான சைந்தவ்-ஐ மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் நோக்கில், தலைசிறந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.

     ஹிட்வெர்ஸ் புகழ்பெற்ற சைலேஷ் கொலானு இயக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

    இந்த படத்தின் கதை எட்டு முக்கிய நடிகர்களை சுற்றி நடக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏழு கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று மற்றொரு மிக முக்கிய கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.

    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் புகழ்பெற்ற நடிகராக வலம்வரும் ஆர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தின் பெயர் மனாஸ். மெல்லிய தோற்றம், ஸ்டைலிஷ் லுக்கில் மிஷின் கன்னை கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஆர்யா, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அனைவரையும் கவர்கிறார்.

    இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தொகுப்பை கேரி பி.ஹெச்., தயாரிப்பு டிசைன் அவினாஷ் கொல்லா, இணை தயாரிப்பாளராக கிஷோர் தல்லூர் இருக்கிறார்.

    பான் இந்தியா திரைப்படமாக சைந்தவ் உருவாகி வருகிறது. இந்த படம் அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி மொழியில் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது.

    • ஜவான் படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார்.
    • ஜவான் படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகிறது.

    பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக் கான் நடித்து இருக்கும் திரைப்படம் ஜவான். இயக்குனர் அட்லி இயக்கி இருக்கும் இந்த படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அட்லி, "என் அண்ணன் விஜய்தான் ஜவான் உருவாக முக்கிய காரணம். நீ என்ன பண்ணுவனு தெரியாது, இந்த படத்த நீ பண்ணணும்னு விஜய் அண்ணான் சொன்னாரு," என்று தெரிவித்தார்.

    செப்டம்பர் 7-ம் தேதி ரிலீசாக இருக்கும் ஜவான் படத்தில் ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார்.

    ×