என் மலர்
சினிமா செய்திகள்
8 ஆண்டுகளாக நடக்கும் விவாகரத்து வழக்கு.. முடிவுக்கு வந்தது பிராட் பிட்- ஏஞ்சலினா ஜோலி பிரச்சனை
- போரில் அகதிகளான 3 குழந்தைகளை தத்தெடுத்தனர்
- இருவருக்கும் பிரான்சில் சொந்தமான வைன் தொழிற்சாலை ஒன்று உள்ளது.
ஹாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் 2014-ல் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. மேலும் போரில் அகதிகளான 3 குழந்தைகளை தத்தெடுத்தனர். எனவே மொத்தம் ஆறு குழந்தைகளை அவர்கள் வளர்த்து வந்தனர்.
ஆனலும் ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016-ல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த விவாகரத்து வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனவே இதுநாள்வரை 6 குழந்தைகளின் பொருளாதார செலவை இருவரும் பகிர்ந்து வருகின்றனர்.
இருவருக்கும் பிரான்சில் சொந்தமான வைன் தொழிற்சாலை ஒன்று உள்ளது. 6 குழந்தைகளை யார் கவனிப்பது, தொழிற்சாலையைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படாததால் விவகாரத்து வழக்கில் தீர்ப்பு 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஏஞ்சலினா மற்றும் பிராட் பிட் இருவரும் இந்த பங்கீடு தொடர்பாக ஒரு முடிவை எட்டியுள்ளனர்.
ஏஞ்சலினாவின் வழக்கறிஞர், ஜேம்ஸ் சைமன், இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்ததை தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தினார். எனவே விவாகரத்து வழங்கி நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2003 ஆம் வெளியான மிஸ்டர் & மிஸஸ் ஸ்மித் படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. 10 வருடங்களாக காதலித்து 2014 இல் திருமணம் செய்த இவர்களுக்கு போரில் அகதிகளான குழந்தைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.