என் மலர்
கிரிக்கெட் (Cricket)

X
2024 ஐபிஎல் தொடர்: டெல்லி அணியின் கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்
By
மாலை மலர்20 Feb 2024 8:35 PM IST (Updated: 20 Feb 2024 8:42 PM IST)

- ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார்
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும். இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார் என்றும், விக்கெட் கீப்பிங் செய்வதற்கு வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
Next Story
×
X